|
4/10/16
| |||
Yuvaraj Amirthapandian.
வளரி (அ) வளைத்தடி - ஒரு கொலையாயுதம் ஓராய்வு உறுதி:
ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ள எண்ணூறு வருடங்களுக்கு முந்தைய ஒரு
மனிதரின் எழும்புக்கூட்டில் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் 'கைலி'
எனப்படும் மரத்தாலான பூமராங் என்ற ஆயுதங்கொண்டு (தமிழ்நாட்டு வளரி அல்லது
வளைத்தடி போன்ற ஆயுதம். உலகில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள், இந்தியப்
பழங்குடிகள், குறிப்பாக தென்னகத் தமிழர்கள் இவர்கள் இருவர் மட்டுமே
இவ்வாயுதத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.) தலையில் தாக்கப்பட்டு
மரணத்துள்ளத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தலையின் இரண்டு இடங்களில் காணப்படும் காயங்களில் ஒன்று ஆறிக்கொண்டும்
மற்றொன்று ஆறாத ரணமாய் மரணத்தை ஏற்படுத்தும் காரணியாக இருந்துள்ளது
என்றும் சொல்கின்றனர். ஆய்வு செய்த ஆய்வாளர்கள், வழக்கமாகத் திரும்பி
வரும் வளரிகளை விட, இனத் தகவமைப்பின் படி பண்டைய ஆஸ்திரேலியப்
பழங்குடிகள் பயன்படுத்திய வளரிகள் பெரிதாகவும் பயங்கரமான ஆபத்தை
விளைவிக்கக் கூடியதாகவும் இருந்தன என்று கூறுகின்றனர். இந்நபர்
இவ்வாறானதொரு வளரியால் தூரத்திலிருந்து குறிவைத்து அடித்து
வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
ஐரோப்பிய வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவைத் தேடி வருவதற்கு கிட்டத்தட்ட
அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இது
அக்காலத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்குள்ளேயே கடும் பகையுணர்வு
இருந்துள்ளதைக் காட்டுகிறது. அதுவும் இம்மனிதர் 25 முதல் 35
வயதிற்குள்ளாக இருந்துள்ளார். இத்தாக்குதல் ஒரு எதிர்பாராத தாக்குதலாக
அவரின் மேல் நடந்துள்ளது. இத்தாக்குதல் நடப்பதற்கு முன் அந்நபர் நன்னீர்
இறாலையும் Possum எனப்படும் தேவாங்கு போன்ற ஒரு விலங்கையும் உணவாகக்
கொண்டுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 'லில்-லில்' என்றழைக்கப்படும் அப்பகுதியின் மர சுத்தியல் போன்ற
ஆயுதம், சண்டைக்குப் பயன்படுத்தப்படும் 'வொண்ணா' என்ற வளரி ஆயுதம் ஆகிய
இரண்டின் அளவுகளும் இக்காயத்தில் பொருந்தி செல்வதை உறுதிபடுத்தியுள்ளனர்.
ஏனெனில் அவ்வளரி ஆயுதத்தின் வளைமுனைகள் கூர் தீட்டப்பட்டு இருந்துள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாகினும் தூரத்திலிருந்தே அடித்து
வீழ்த்தியுள்ளனர். அல்லது அம்மனிதரின் முன்கைகளில் எவ்விதமான காயங்களும்
இல்லாதத்தை வைத்துப் பார்க்கும்போது, வேலை தூக்கத்திலோ அல்லது ஒரு
கேடயத்தை தடுப்பாயுதமாக வைத்திருந்திருக்கும் போதோ அடித்து
வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர். (தமிழகத்தில் ஒரு விழியத்தில் சிறு
கோடரி ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதனை வீசும் நபர் அதனை விட்ட இடத்திற்கே
திரும்பி வரும் போது அதனைப் பிடிப்பார். அது வளரி போன்றே செயல்பட்டத்தைப்
பார்த்திருக்கலாம். நண்பர் வெற்றிப் பேரொளி சோழன் இது பற்றிக்
கூறியிருந்தது நினைவிலுள்ளது.)
குறிப்பாக இந்நபர் இறந்தபின்பு தன்னினக் குழுவினரால் பாதுகாப்பான
முறையில் கால்கள் மடக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் பழந்தமிழர்கள் தங்கள்
மூதாதையர்களை தாழிகளுக்குள் உட்கார வைத்து அடக்கம் செய்யும் அதே முறையில்
புதைத்துள்ளது குறிப்பிடத்தக்கதும் தமிழாய்வாளர்கள் கவனிக்கக் கூடியது.
இந்நபருக்கு 'காகுட்ஜா' என்ற "மூத்த சகோதரன்" என்று பொருள் புரியும்படி
உள்ளூர் "பாகன்ட்ஜி" மக்களின் மொழியில் பெயர் வைத்துள்ளனர்.
இந்த காகுட்ஜா மனிதரின் புதையலிடத்திற்கு அருகே கிழக்கிலுள்ள குண்டபூகா
தேசியப் பூங்காவில், பழங்குடிகளுக்கிடையே நடந்த மோதல்களைக் குறிக்கும்
பாறை ஓவியம் உள்ளதும் குறிப்பிடத்தக்க
து.
ஏற்கனவே வளரி பற்றி எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய கட்டுரைப் பற்றி
விரிவாகப் பதிவிட்டிருந்தோம். அதன் உரலி:
https://www.facebook.com/ photo.php?fbid=1
154674367938389&set=a.10477824
95294244.1073741826.1000018751
06517&type=3 .
இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் ஆங்கிலேயர்கள் ஏன் மருது சகோதரர்களை
கொன்று அவர்களின் குலத்தையே அழித்தொழித்து பர்மா வரை சிதறடித்தனர்
என்பதற்கு வளரியில் கை தேர்ந்த பெரிய மருதுவும் அவர்கள் முன்னெடுத்த
வளரிப்போர்ப்படையுமே காரணமென்றால் அது மிகையாகாது. ஆங்கிலேயர்கள்
மிரண்டுப் போய் தான் வளரி வைத்திருந்தாலே மரண தண்டனை என்று அரசாணைப்
போடுமளவிற்கு மரண பயத்துடனிருந்துள்ளனர். இல்லையென்றால் வளரியால்
இவர்களுக்கு மரண தண்டனைத் தொடர்ந்திருக்குமல்லவா! ஆங்கிலேயர்களுக்கும்
மருது பாண்டியர்களுக்கும் நடந்த சிவகங்கைச் சீமைப் போர்க்களங்களில்
ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்ற வளரியால் சிதிலமடைந்த ஆங்கிலேய-தமிழர்ப்
படை வீரர்களின் எழும்புக் கூடுகள் கண்டிப்பாகக் கிடைக்கக்கூடும் என்பது
திண்ணம்.
நன்றி:
1. Archaeology Magazine:
http://www.archaeology.org/ news/
4880-160930-australia- boomerang-victim-id .
2. Live Science.
# Boomerang # BoomerangAttack
# LethalBoomerang # வளரி # Valari
# வளைத்தடி # Kaakatja # Aborigines
# Australia # ஆஸ்திரேலியா
# AustralianAborigines # Kylie # Tribals
# AustralianTribals # Archaeology
# ArchaeologicalEvidance # தொல்லியல்
# NewSouthWales # மருதுபாண்டியர்கள்
# மருதுசகோதரர்கள் # British # Wars
# Tamils # Tamil # Tamilnadu # SivagangaiWar
# Maruthupandiars # BritishTroops
# Sivagangai # SivagangaiSeemai #சிவகங்கைசீமை #சிவகங்கை

https://www.facebook.com/
154674367938389&set=a.10477824
95294244.1073741826.1000018751
06517&type=3 .
இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் ஆங்கிலேயர்கள் ஏன் மருது சகோதரர்களை
கொன்று அவர்களின் குலத்தையே அழித்தொழித்து பர்மா வரை சிதறடித்தனர்
என்பதற்கு வளரியில் கை தேர்ந்த பெரிய மருதுவும் அவர்கள் முன்னெடுத்த
வளரிப்போர்ப்படையுமே காரணமென்றால் அது மிகையாகாது. ஆங்கிலேயர்கள்
மிரண்டுப் போய் தான் வளரி வைத்திருந்தாலே மரண தண்டனை என்று அரசாணைப்
போடுமளவிற்கு மரண பயத்துடனிருந்துள்ளனர். இல்லையென்றால் வளரியால்
இவர்களுக்கு மரண தண்டனைத் தொடர்ந்திருக்குமல்லவா! ஆங்கிலேயர்களுக்கும்
மருது பாண்டியர்களுக்கும் நடந்த சிவகங்கைச் சீமைப் போர்க்களங்களில்
ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்ற வளரியால் சிதிலமடைந்த ஆங்கிலேய-தமிழர்ப்
படை வீரர்களின் எழும்புக் கூடுகள் கண்டிப்பாகக் கிடைக்கக்கூடும் என்பது
திண்ணம்.
நன்றி:
1. Archaeology Magazine:
http://www.archaeology.org/
4880-160930-australia-
2. Live Science.
# Boomerang # BoomerangAttack
# LethalBoomerang # வளரி # Valari
# வளைத்தடி # Kaakatja # Aborigines
# Australia # ஆஸ்திரேலியா
# AustralianAborigines # Kylie # Tribals
# AustralianTribals # Archaeology
# ArchaeologicalEvidance # தொல்லியல்
# NewSouthWales # மருதுபாண்டியர்கள்
# மருதுசகோதரர்கள் # British # Wars
# Tamils # Tamil # Tamilnadu # SivagangaiWar
# Maruthupandiars # BritishTroops
# Sivagangai # SivagangaiSeemai #சிவகங்கைசீமை #சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக