|
23/3/16
| |||
இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:
‘அவள் மை தீட்டக்
கையில்
கோலெடுத்துவிட்டாள்
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?’
திருக்குறளில் ஒரு சுவையான குறள்.
வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.
‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.
தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை
தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர்
மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.
‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து’
எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப்
புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.
இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ
எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக