|
பிப். 14
| |||
Gunarethnam Uma Ramanan.
" அன்று ஜீ.ஜீ பொன்னம்பலம் செய்த வரலாற்று தவறும் இன்றைய எழுக தமிழும்"
தமிழ் மக்களின் உரிமை மீட்பு போராட்ட வரலாற்றில் எமது உரிமை மீட்புக்காக
பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட தளங்களில் செயல்பட்டு
இருந்தாலும் தந்தை செல்வாவின் செயல் முறையையும் அவரது அர்ப்பணத்தையும்
இது வரை எந்த ஒரு தமிழ் தலைமையும் நெருங்கவில்லை, அன்று மலையகத் தமிழர்
பிரஜா உரிமை பறிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சூழ்ச்சியை
கண்டித்தும் தமிழர் உரிமைகள் பெறுவதில் அக்கறை அற்று இருந்த ஜீ.ஜீ
பொன்னம்பலத்தின் தேசிய காங்கிரஸ்ல் இருந்து வெளியேறி தமிழ் அரசுக்
கட்சியை உருவாக்கி தமிழர் உரிமைக்கு சரியான நகர்வுதனை மேற்கொண்டவர் தந்தை
செல்வா,
பண்டாரநாயக்காவுடன் இருந்த நட்பு நெருக்கம் மற்றும் பண்டாவின் உதவும்
மனப்பாண்பின் காரணமான பிறந்த குழந்தைதான் பண்டா- செல்வா ஒப்பந்தம்,
பண்டாரநாயக்கா தேர்தலில் முன் வைத்த தனிச்சிங்கள சட்டம் தொடர்பான கோசம்
தேர்தலை நோக்கிய கோசமே ஒழிய இனவாத வெறி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத
ஒன்று உண்மையில் அந்த ஒப்பந்தம் பண்டாவால் கிழித்து எறியக் காரணமே ஜீ.ஜீ
பொன்னம்பலம் தான் அன்று ஒப்பந்தம் உருவாகி அது பாராளுமன்றத்தில் நாளை
நிறைவேற்ற தயார் என்ற நிலையில் தான் பிக்குமாரின் அழுத்தத்தில் அந்த
ஒப்பந்தம் கிழித்து எறியபட்டது இது வரலாறு அப்போது தான் தமிழரை கடவுள்
தான் காப்பாற்ற வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தார் செல்வா.
இன்று இருந்த சூழல் போல் அன்றும் ஒரு நெருக்கடியை ஜீ.ஜீ ஏற்படுத்தினார்
எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்த செல்வா அன்று சொன்ன ஒரு வார்த்தை :
தமிழர்க்கான உரிமை, தீர்வு தொடர்பான திட்டம் பூர்த்தியாகி விட்டது அது
பாராளுமன்றத்தில் வெகு விரைவில் நிறைவேற்றப்படும்: இந்த வாக்கியம் தென்
இலங்கை அரசியலை அப்படியே புரட்டிப் போட்டது, பிக்குகள் அணி திரண்டு
கொடுத்த அழுத்தம் அது மண்ணாகியது,
உண்மையில் அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்ன இருந்தது ????
1. வடக்கும் கிழக்கும் இணைத்த மாநிலங்கள்.
2. வடக்கு ஒரு அலகு
3. கிழக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அலகு
4. இரண்டு மொழி ஒரு தேசம்.
இங்கு கிழக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அலகு என்பது முஸ்லிம்களுக்கான ஒரு அலகு
அது வட கிழக்கு இணைந்த அலகுடன் இணைந்தும் இருக்கலாம் இல்லை தனித்தும்
இருக்கலாம்.
இதைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ஹக்கிம் உடன் செய்த கிளிநொச்சி ஒப்பந்தம், தந்தை செல்வா பண்டா ஒப்பந்த
அடிப்படையில் தான் பிரபாகரன் முஸ்லிம் காங்கிரஸ் உடன் நகர்ந்தார், அதன்
அடிப்படையில் தான் கடந்த வருடம் இரா.சம்பந்தன் அவர்கள் முஸ்லிம்களுக்கு
முதலமைச்சர் பதவியை நாங்கள் தரத் தயார் என்றார் : இதுவே ஒன்றுக்கு மேற்
பட்ட அலகு என்ற செல்வாவின் அஸ்திரத்தை நோக்கி சம்பந்தன் பொறுமையாக
நகர்கின்றமையை தெளிவபடுத்தியது என்ன செய்கின்றார் சம்பந்தன் என்று நாம்
பேசுவது என்பது ஒரு சிக்கலான அரசியல் களத்தை நிச்சயம் திறந்து விடும்
பிறகு மீண்டும் நாம் பண்டா - செல்வா காலத்திற்கு பின் நோக்கி பயணிக்க
வேண்டி ஏற்படலாம், அன்றும் செல்வாவின் வாயால் கூறியது போல் இன்றும்
சம்பந்தன் கூற வேண்டும் என சிலர் எண்ணும் செயல்களின் வடிவமே இவ்வாறு மேற்
கொள்ளும் நகர்வுகள் அன்றும் செல்வா க்கு இருந்த சூழல் மீண்டும்
உருவாகின்றதா ? அன்று ஜீ.ஜீ செய்த அந்த துரோகம் இன்று யாரால் ? ? எவ்வாறு
? ?
8 பிப்ரவரி, 10:39

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக