ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழகம் வசதிகள் பின்தங்கியநிலை விரிவான புள்ளிவிபரம் திராவிட ஆட்சி சாராயம் தமிழ்நாடு

aathi tamil aathi1956@gmail.com

பிப். 11
பெறுநர்: எனக்கு
*கொஞ்சம் தலை சுற்றும். ஆனாலும் நாம் தெரிந்தே ஆகவேண்டிய புள்ளி விபரங்கள்!!!*
____________________________________

*தமிழகத்தின் ஆட்சியும் மக்களும் - ஒரு கணக்கு வழக்கு.*
____________________________________

இவர்கள் 8 சாராய ஆலை வைத்திருக்கிறார்கள், அவர்களும் 7 சாராய ஆலை
வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 12 தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள், அவர்களும் 26 தொழிற்சாலை
வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 6 சேனல் வைத்திருக்கிறார்கள், அவர்களும் 8 சேனல் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 4 பத்திரிக்கை நடத்துகிறார்கள், அவர்கள் 9 பத்திரிக்கை நடத்துகிறார்கள்.
இவர்கள் 7 மாத, வார இதழ்கள் நடத்துகிறார்கள்,
அவர்களும் 9 மாத, வார இதழ்களை நடத்துகிறார்கள்.
இவர்கள் 122 கல்லூரிகள் நடத்துகிறார்கள், அவர்களும் 186 கல்லூரிகள்
நடத்துகிறார்கள்.
இவர்கள் 1870 பள்ளிகள் நடத்துகிறார்கள், அவர்களும் 1870 பள்ளிகள் நடத்துகிறார்கள்.
இவர்களின் ஆகப்பெரிய தலைவர் விட்டு விட்டு 5 முறை முதல்வராக
இருந்துள்ளார், அவர்களின் ஆகப்பெரிய தலைவர் 5 முறை முதல்வராக
இருந்துள்ளார்.
இவர்களின் கணக்கில் பல லட்சம் கோடி சொத்துகள், அவர்களின் கணக்கிலும் பல
லட்சம் கோடி சொத்துக்கள்.

தற்போதைய நிலவரப்படி உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருந்தாலும் இவர்களின்
கூட்டணிக் கணக்கில் 136 சட்டமன்ற உறுப்பினர்கள்,
அவர்களின் கூட்டணிக் கணக்கில் 89 சட்டமன்ற உறுப்பினர்கள்.
இவர்களின் கணக்கில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள்,
அவர்களின் கணக்கில் 1 மாநிலங்களவை உறுப்பினர்.
இவர்களுக்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர்,
அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர்.

தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் மாற்றி
மாற்றி ஆட்சி செய்து வருகின்றன.
இதில் அ.தி.மு.க. 25 ஆண்டுகளும், தி.மு.க. 22 ஆண்டுகளும் தமிழகத்தை
நிர்வாகம் செய்துள்ளன.
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை இந்தியாவின் முதன்மை
மாநிலமாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள் என்று இரு கட்சிகளும்
முழங்குவது வாடிக்கை.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21
லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958).
இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர்.
1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.
எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 80.33.
24.10.2011 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம்
ஆகும். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ஆகும்.
பெண் வாக்காளர்கள் 2 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரமும், மற்றும் இதர
வாக்காளர்கள் 1,568 பேர் ஆகும்.

மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்திலிருந்து 1 கோடியே
85 லட்சம். கூரை வீடுகளின் எண்ணிக்கை தற்போது 15.8. கான்கிரீட் வீடுகளின்
எண் ணிக்கை 43.7 விழுக்காடு.
நகரப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடி யிருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த குடும்பங்களில் 94 விழுக்காட்டினர் குழாய் நீர்,
ஆழ்துளை கிணறு, அடிகுழாய், மூடிய கிணறு உள்ளிட்ட நீராதாரங்களை
பயன்படுத்துகின்றனர்.
80 விழுக்காட்டினர் குழாய்நீரை முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.
35 விழுக்காடு குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டு வளாகத்திற்கு உள்ளேயே
குடிநீர் வசதி உள்ளது.
58 விழுக்காட்டினருக்கு ஓரளவு அருகிலும், 7விழுக்காடு குடும்பங்களுக்கு
தொலைவிலும் குடிநீர் கிடைக்கிறது.

93 விழுக்காடு குடும்பங்களில் விளக்கு வெளிச்சத்திற்காக மின்சாரம் பயன்
படுத்தப்படுகிறது.

64 விழுக்காடு குடும்பங்கள் வீட்டுக்குள் குளியல் வசதியைப் பெற்றுள்ளன.
50 விழுக்காடு குடும்பங்கள் சமையலறை கழிவு நீரை வெளியேற்றும் இணைப்புக்
கால்வாய்களைப் பெற்றுள்ளன.
25 விழுக்காட்டினர் மூடிய கால்வாய் இணைப்பும், 25 விழுக்காட்டினர்
திறந்தவெளி கால்வாய் இணைப்பும் பெற்றுள்ளனர். 48விழுக்காடு குடும்பங்கள்
வீட்டில் கழிப்பிட வசதி பெற்றுள்ளன. இவர்களில் 41 விழுக்காட்டினர் நவீன –
தண்ணீர் ஊற்றும் வசதியையும், 6 விழுக்காட்டினர் குழி கழிப்பிடத்தையும்
அமைத்துள்ளனர்.
கழிப்பிட வசதி பெறாத குடும்பங்கள் 52 விழுக்காடு. இவர்களில் 6
விழுக்காட்டினர் மட்டுமே பொது கழிப்பிடங்களைப் பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் திறந்த வெளிகளையே கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலைமை
நீடிக்கிறது.

தனி சமையலறை வசதி 77 விழுக்காடு குடும்பங்களில் உள்ளன.
48 விழுக்காட்டினர் சமையலுக்கு எரிவாயுவையும், 44 விழுக்காட்டினர் விறகு,
நிலக்கரி, எரித்த கரி, வைக்கோல், வரட்டி போன்றவற்றையும், 7
விழுக்காட்டினர் மண் ணெண்ணையையும் பயன் படுத்துகின்றனர்.

தொலைக்காட்சி பயன்பாடு 48 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆனால் வானொலி
பயன்பாடு 21 புள்ளிகள் குறைந்துள்ளது. 11 விழுக்காடு குடும்பங்கள் கணினி
அல்லது மடிக் கணினி பெற்றுள்ளன. 4 விழுக்காட்டினரே இணைய தள வசதியை
பெற்றுள்ளனர். இணைய தள வசதி நகர்ப்புறத்தில் 8 விழுக்காடாக இருக்கிறது.
கிராமப்பகுதியில் 1 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

75 விழுக்காடு குடும்பங்களில் சாதாரண தொலை பேசி, கைப்பேசி வசதி உள்ளது.
இது நகரப்பகுதிகளில் 84 விழுக்காடாகவும், கிரா மங்களில் 66
விழுக்காடாகவும் உள்ளது. சாதாரண தொலைபேசி பயன்பாடு 13 விழுக்காடும்,
கைப்பேசி பயன்பாடு 69 விழுக்காடும் ஆகும்.

தமிழகத்தில் 45 விழுக்காடு குடும்பங்கள் போக்கு வரத்துக்கு சைக்கிள் பயன்
படுத்துகின்றனர். 32 விழுக்காடு குடும்பங்கள் ஸ்கூட்டர், பைக் போன்ற இரு
சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். 4 விழுக்காடு குடும்பங்கள் கார்,
ஜீப் போன்ற 4 சக்கர வண்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.

வங்கி சேவையை 53 விழுக்காடு குடும்பங்கள் பெற்றுள்ளன. இது நகரத்தில் 60
விழுக்காடாகவும், கிராமத்தில் 45 விழுக்காடாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் நிலம் இல்லாமல் தினக்கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக்
கொண்டுள்ள ஊரகக் குடும்பங்களின் எண்ணிக்கை 56% ஆகும். இது தேசிய
சராசரியான 38.27 விழுக்காட்டை விட மிகவும் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி,
நிலமில்லாமல் கூலி வேலை செய்தே பிழைக்கும் ஏழைகள் அதிகமுள்ள மாநிலங்களில்
தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோர் உள்ள
குடும்பங்களின் அளவு 78.08% ஆகும். இது தேசிய சராசரியான 74.5
விழுக்காட்டை விட அதிகமாகும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அதாவது இந்தியாவின் ஐந்தாவது ஏழை மாநிலம் தமிழகம் ஆகும்.

வேலைவாய்ப்பிலும் தமிழகம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. ஊரகக்
குடும்பத்தினரில் 4.58% அரசு வேலையிலும், 0.88% பொதுத்துறை வேலையிலும்,
2.86% தனியார் வேலையிலும் உள்ளனர். இவை அனைத்திலுமே தேசிய சராசரியை விட
தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால்
கூட ஊரக தமிழகத்தில் மாத ஊதியம் பெறுவோரின் அளவு 7.22% மட்டுமே. 92.78%
குடும்பங்கள் நிரந்தர வாழ்வாதாரமின்றி தவிக்கின்றன.
ஊரக தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்தவர்களின்
எண்ணிக்கை வெறும் 6.61% தான். பத்தாம் வகுப்பு படித்தவர்களின்
எண்ணிக்கையும் 14.10 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அதேநேரத்தில் 26.38
விழுக்காட்டினர் பள்ளிக் கூடத்திற்குக் கூட செல்லாத பாமரர்கள் ஆவர்.

இந்தியாவில் 25.63% ஊரக குடும்பங்கள் பாசன வசதியுடன் கூடிய நிலங்களை
வைத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் 12.10% குடும்பங்கள் மட்டுமே பாசன வசதி
கொண்ட நிலங்களை வைத்துள்ளன. 19.18% குடும்பங்கள் நிலங்களை வைத்துள்ள
போதிலும், அவற்றுக்கு பாசன வசதி செய்து தரப்படவில்லை.
தென்னிந்தியாவிலேயே பாசன வசதி பெற்ற நிலங்கள் குறைவாக இருப்பது
தமிழ்நாட்டில் மட்டும் தான்.

தமிழ்நாட்டில் ஐ.டி.ஐகள் எல்லாம் மூடப்பட்டுவருகின்றன. சேருவார் இல்லை.
பிட்டர், வெல்டர், பிளம்பர், எலெக்ட்ஷியன், மேசன், கார்ப்பெண்டர் போன்ற
தொழிலாளிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

2012-13 நிதியாண்டில் மட்டும் தமிழக அரசுக்கு சாராயம் விற்ற வகையில் வந்த
வருமானம் ரூ 21,680 கோடிகள். இது மாநில அரசின் மொத்த வருவாயில் 20
சதவீதம்.
2013-14 ல் தமிழக அரசின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி
(31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. ஆனால், மதுப்பழக்கத்தினால்
வரும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு அரசு
ஒதுக்கியுள்ள தொகை வெறும் ஒரு கோடி ரூபாய்!
ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானம் மட்டும் அரசுக்கு
இதிலிருந்து வரவேண்டுமானால், தினசரி எத்தனை தமிழர்கள் தவறாமல் மது
குடிக்கவேண்டும் என்று தெரியுமா? சுமார் ஒரு கோடி பேர் ! தமிழத்தில்
குடிக்க ஆரம்பிக்கும் வயது 11 ஆகிவிட்டது. அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு
கோடி குடியர்களில் டீன் ஏஜ் இளைஞர்கள்.

தமிழகம் முழுவதும் 6800 சாரயக் கடைகளையும் 4271 டாஸ்மாக் பார்களையும்
திராவிட அரசுகளே நடத்தி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கும் மாணவப்
பருவத்திலேயே சாராயம் கொடுத்து தமிழ் சாதிப் பெண்கள் இளம் வயதில் தாலி
அறுக்கின்றனர். 3000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை இலக்கு வைத்து
சாராயத்தின் விலை அதிகரிக்கப்படுகிறது.

1971 ல் தமிழக முதல்வராக கருணாநிதி வருவதற்கு முன்பு தமிழகத்தில்
குடிகாரர்களின் எண்ணிக்கை மிக சொற்பமானதே. 1971ல் காமராஜர், ராஜாஜி,
காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் வேண்டுதல்களையும் புறக்கணித்து விட்டு
அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, அரசு சாராயக் கடைகளை திறந்தார். அன்று
முதல் படிப்படியாக தமிழ் சமூகம் குடிகார சமூகமாக பரிணாமம் அடைந்து
வந்துள்ளது. மதுவிலக்கை அமல் படுத்துவதில் எம்.ஜி.ஆர் கூட தோல்வி
அடைந்தார். 1971 முதல் 2014 வரை, இடையில் சிலமாதங்கள் எம்.ஜி.ஆர்
ஆட்சியில் மூடப்பட்டதை தவிர, தமிழகத்தில் சாராயம் பெரும் சாம்ராஜ்யம்
கண்டுள்ளது. அன்று குடிக்காத நல் சமூகங்கள் கூட இன்று தப்பவில்லை. அன்று
20 சதவீதமாக இருந்த குடிகாரர்களின் எண்ணிக்கை இன்று 74.3 சதவீதமாக
அதிகரித்து விட்டது. குடிகாரனின் குறைந்த பட்ச வயது 11 ஆக
குறைந்திருக்கிறது. மதுரையில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் உட்காரும்
பெஞ்சை விற்று, “அரசு சாராயம்” வாங்கி குடித்தது பத்திரிக்கைகளில்
வந்தது.
குடியினால் இளவயது மரணங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்காரங்கள்,
குழந்தைகள் மீதான வன்முறை, பெண்கள் சீண்டப்படுதல் அனைத்துக்கும் அரசு
விற்கும் சாராயமே காரணம் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. அரசுதான்
மக்களிடம் காலையில் பணப் புழக்கத்தை கொடுக்கிறது. பின்னர் மாலையில்
சாராயத்தைக் கொடுத்து அரசே பணத்தை பறித்துக் கொள்கிறது. இவ்வாறுதான்
தமிழ் நாட்டில் பொருளாதார சுழற்சி நடைபெறுகின்றதாகப் பொருளியல் அறிஞர்கள்
பலர் கூறுகின்றனர்.

இப்படியாக வளமார் திராவிடத் தமிழகத்தின் குடிமக்களின் வாழ்வியல்
கணக்குகள் இலவசங்களோடு தொடருகின்றன.

- இரவிக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக