|
11/9/16
| |||
Kathir Nilavan
"பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி" சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள்
11.9.1921
தமிழ் வளர்த்தலையும், சாதி ஒழிப்பையும் தனது இருவிழிகளாகக் கொண்டு
வாழ்ந்து மடிந்திட்ட மகாகவிஞன் சுப்பிரமணிய பாரதி என்பதில் இருவித
கருத்துக்கு இடமில்லை. பாரதியோடு நெருங்கிப் பழகியவரும் பாரதியை குருவாக
ஏற்றுக்கொண்டவருமான பாரதிதாசன் அவரை பைந்தமிழ்த் தேர்ப்பாகன் என்றும்
நாட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து என்றும் போற்றிப்
புகழ்ந்திட்டார்.
பாரதியைப் பற்றி முழுவதும் அறியாத சிலர் பாரதி பார்ப்பன சாதியில்
பிறந்தார் என்னும் ஒரே காரணத்திற்காகவே இன்று வரை வசைமாரி பொழிந்து
வருகின்றனர். இது குறித்து பாரதியார் தான் வாழும் காலத்திலேயே பதில்
கூறியுள்ளார். அது வருமாறு:
"நான் பிராமணனே இல்லை, பூணூல் இல்லை, சந்தியாவந்தனம் இல்லை, சிரார்த்தம்
செய்வதில்லை, நான் சூத்திரன். வீட்டு எஜமானன் சூத்திரன், எஜமானி
பிரமாணத்தி. என்றார். (யதுகிரி, பாரதி நினைவுகள், முதற்பதிப்பு, அமுத
நிலையம்.)
மேலும் அவர், "பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும் ஜலம் அழுக்காக
இருப்பதால் குடிக்கத் தகாதென்றும், சண்டாளன் ஒருவன் சத்தமாகக் காய்ச்சி
வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும்
என்றும் நான் சொன்னால் வெறுமனே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக்
கண்டிப்பார்கள். என்னை ஜாதியிலிருந்து தள்ளிவிடுவார்கள். என்னை
விருந்துக்குக் கூப்பிட மாட்டார்கள். நான் செத்துப் போனால், சாவுக்
கிரியைக் கூட வரமாட்டார்கள் என்றும் மனம் நொந்து கூறினார். (பாரதியார்
கட்டுரைகள், தத்துவம், பாரதி பிரசுலாயம்.)
பாரதியார் தீர்க்கத் தரிசனமாய் கூறிய அந்த கடைசி வார்த்தை அவர் சாவின்
போது பலித்தது. ஆம்! வைதீக வெறி கொண்ட அக்ரகாரம் உண்மையிலேயே அவர் சாவைப்
புறக்கணித்தது. பாரதியார் உயிரோடு வாழ்ந்த காலத்தில் கிடைக்காத மரியாதை
இறப்பிற்குப் பின்னர் கிடைத்தது பலருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால்
வைக்கம் வீரர் தந்தை பெரியார் பாரதிக்கு கொடுத்திருக்கும் மரியாதை
பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
1924ஆம் ஆண்டில் தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தச் சென்ற
போது பாரதியார் பாடல்களை பாடியபடியே சென்றுள்ளார். பெரியாரின் கெழுதகு
நண்பரும் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவருமான கோவை அய்யா முத்து
என் நினைவுகள் என்ற நூலில் எழுதுகிறார்:
"வைக்கத்துப் போர்க் காலத்தில் நாயக்கரும் நானும் மோட்டாரிலும்
படகுகளிலும் திருவாங்கூர் முழுவதும் பிரயாணம் செய்தோம். நாயக்கர் கையில்
எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்
கொண்டே வந்தே மாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப்பாட்டு
ஆகியவைகளை அவர் உரக்கப் பாடுவார்."
1925இல் தந்தை பெரியார் தொடங்கிய முதல் குடியரசு ஏட்டிலும் பாரதியாரின்
"சாதிகள் இல்லையடிபாப்பா" மற்றும் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர்
நிறை ஆகிய பாடல்களை முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்ததும்
குறிப்பிடத்தக்க சான்றுகளாகும்.
பாரதி, "என் மகள் தங்கம்மாள் தாழ்த்தப்பட்டவனோடு இரங்கூனுக்கு ஓடிப் போக
வேண்டும். அங்கு போய் அப்பா... நான் இன்னாரோடு வாழ்கிறேன் என்று
சொல்வதைக் கேட்டு நான் ஆனந்தம் கொள்வேன்!" என்று சொன்ன பாரதியை இதற்குப்
பிறகும் சந்தேகப்படுபவர்களை தமிழர்களாகிய நாம் தான் இனி சந்தேகப்பட
வேண்டும்.
பாரதி காலத்திற்குப் பின் பாரதியை எந்தக் கவிஞனாலும் புறக்கணிக்க
முடியவில்லை. எந்த எழுத்தாளனாலும் அலட்சியம் செய்ய இயலவில்லை. எந்த
மக்களாலும், தலைவர்களாலும் அசட்டை செய்ய முடியவில்லை. அத்தகைய
தனிப்பெரும் பீடத்தில் ஏறிக்கொண்டான் பாரதி. ஆகவே, இந்த சகாப்தத்தைப்
'பாரதி சகாப்தம்' என்று கூற வேண்டும் என்று சொன்னவர் 'தமிழ்த்தென்றல்'
திரு.வி.க.
ஈழத்தமிழர் உயிர்காக்க வேண்டி உயிர் நீத்த 'வீரத்தமிழ்மகன்'
முத்துக்குமார் எழுதிய இறுதிக் கடிதத்தில், "விதியே விதியே என்செய
நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை"... எனத் தொடங்கும் பாரதியின் பாடலை
படிப்போருக்கு திரு.வி.க. கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது
உறுதியாய் புலப்படும்.
11 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக