|
31/8/16
| |||
கரியும், மரக்குச்சிகளையும் கொண்டு ஆரோக்கியமாக பல் துலக்கி வந்தோம். கரி
கருப்பு, பற்பொடி வெள்ளை என கண்டதை சொல்லி அழகுற விளம்பரங்கள் செய்து
வெளிநாட்டு வியாபாரிகள் மெல்ல, மெல்ல இந்திய சந்தையில்
நுழைந்தனர்.காலப்போக்கில் பற்பொடி மறைந்து நுரை பொங்கும் பேஸ்ட் தான்
பெஸ்ட் என்ற ஃபேஷன் கலந்த விளம்பர யுக்தியை கையாண்டு வியாபாரத்தை பெரிது
படுத்தினார்கள்.ஆனால், இன்றோ ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன்
வர்த்தக தளங்களில் மீண்டும் பற்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இயற்கை பற்
குச்சிகள் என்ற பெயரில் டாலர்களில் விற்கின்றனர்.இனி, நீங்கள்
பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டின் நிறத்திற்கு பின்னால் இருக்கும் கருமங்களை
பற்றி கொஞ்சம் அலாசுவோம்....
டைட்டானியம் டை ஆக்சைடு!
டூத் பேஸ்ட்டுக்கு வண்ணம் சேர்க்க அவரவர் கலரிங் ஏஜென்ட் சேர்க்கின்றனர்.
பொதுவாக டைட்டானியம் டை ஆக்சைடு தான் கலர் உண்டாக்க சேர்க்கப்படுகிறது.
இதனால் தான் நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் பச்சை, சிவப்பு, நீலம்
போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது.
சோடியம் சாக்கரின்!
பொதுவாக டூத்பேஸ்ட்க்கு சுவை எல்லாம் கிடையாது. சுவை சேர்க்க வேண்டும்
என்பதற்காக சோடியம் சாக்கரின் எனும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது. சுவை
சேர்க்கப்பட்டால் தான் மக்கள் விரும்பு வாங்குவார்கள் என்பதற்காக
உற்பத்தியாளர்கள் இதை செய்கின்றனர்.
ஃப்ளேவர்கள்!
இப்போது டூத்பேஸ்ட் தயாரிப்பில் பல பெரும் நிறுவனங்கள் செயல்பட்டு
வருகின்றன. ஒரே பிராண்ட் பல வகையான டூத்பேஸ்ட்கள் தயாரிக்கின்றன.
பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு, சென்சிடிவ் பற்களுக்கு என ஒவ்வொரு
டூத்பேஸ்ட்க்கும் ஒவ்வொரு ஃப்ளேவர் சேர்க்கின்றனர். இந்த ஃப்ளேவர்களால்
நமது பற்களுக்கு எந்த பயனும் இல்லை. ஒருவித மாற்றம் இருந்தால், இது
பயனளிக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழும் என்பதற்காக ஃப்ளேவர்கள்
சேர்க்கப்படுகின்றன.
மூலப்பொருட்கள்!
டூத்பேஸ்ட்டில் ஆக்டிவ், இன்-ஆக்டிவ் என இரண்டு வகையிலான மூலப்பொருட்கள்
சேர்க்கப்படுகின்றன.
ஆக்டிவ்:
இந்த மூலப்பொருட்கள் பற்களை பாதுகாக்கவும், பாக்டீரியாக்களை கொல்லவும்
பயன்படுகின்றன.
இன்-ஆக்டிவ் :
இந்த மூலப்பொருட்கள் பற்களை சுத்தம் செய்ய பயன்படாது. இவை சுவைக்காகவும்,
பேஸ்ட்டின் நிறம், டெக்ஷர் போன்றவற்றுக்காகவும் அழகு சேர்க்க மட்டுமே
சேர்க்கப்படுகின்றன.
உப்பு, கிராம்பு?
நீங்க பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா, எலுமிச்சை இருக்கா,
கிராம்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் இருக்கா என்று கேட்டு விற்கப்படும்
டூத்பேஸ்ட்டுகளில் முழுக்க, முழுக்க இருப்பது வெறும் ரசாயனப் பொருட்கள்
தான்.
உடல்நலம்!
இதனால், பற்களுக்கு மட்டுமின்றி, உடல்நலனுக்கும் பல கேடுகள் விளைகின்றன.
இதனால் தான், நாம் காலம், காலமாக உபயோகித்து வந்த பல் துலக்கும்
குச்சிகளை மீண்டும் ஆன்லைனில் விற்க துவங்கிவிட்டனர். அதுவும், அதிக
விலையில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக