ஞாயிறு, 19 மார்ச், 2017

கந்தசஷ்டி தெலுங்கர் மாற்றிவிட்டனர் பண்டிகை திருவிழா

aathi tamil aathi1956@gmail.com

8/12/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — SilambuSelvar
Padmashri MaposiTrust மற்றும் 29 பேர் உடன்.
(திசம்பர் 5ன் பதிவு)
இன்று தான் கந்த சஷ்டி என்று தெரியுமா?
==============================
=========
எல்லோரும் தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதத்தை தொடங்கி, ஆறாம்
நாளான சஷ்டி நாளில் விரதத்தை முடித்திருப்பீர
்கள். ஆனால், உண்மையில் கார்த்திகையில் தான் கந்த சஷ்டி என்று உங்களுக்கு
தெரியுமா???
தமிழ் மக்களின் சந்திர நாள்காட்டிப்படி ஒரு மாதம் முழுமதியில் தொடங்கும்.
ஆனால் தெலுங்கரின் நாள்காட்டியில் ஒரு மாதம் என்பது அமாவாசைக்கு அடுத்த
நாள் தொடங்கும். அதன்படி, தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாள் அவர்களின்
கார்த்திகை தொடங்கிவிடும்.
ஆனால் தமிழருக்கு தீபாவளி முடிந்து பதினைந்து நாள் கழித்துவரும்
முழுமதியில் தான் கார்த்திகை தொடங்கும். அதன்படி, கடந்த நவம்பர் 29ஆம்
அமாவாசைக்கு அடுத்த நாள் சஷ்டி விரதம் தொடங்கி, இன்று திசம்பர் 5ஆம் நாள்
திருவோணத்தன்று சூரபதுபனை முருகவேள் ஆட்கொண்ட சஷ்டி விரதத்தை நிறைவு
செய்ய வேண்டும். கார்த்திகை முழுநிலவில் பிறந்த முருகன், 16 கார்த்திகை
முழுநிலவுகள் கடந்து ஈரெட்டு அகவையை நிறைவு செய்து, கார்த்திகை ஒளிப்பக்க
முதல்நாள் பிறையில் போருக்கு சென்று, அறுநாள் பிறையில் சூரபதுமனை
வெல்கிறார்.
ஆவணி ஓணத்தில், திருமால் மாவலியை ஆட்கொண்டார்.
புரட்டாசி ஓணத்தில், கொற்றவை மகிசனை அழித்தார்.
கார்த்திகை ஓணத்தில், முருகன் சூரபதுபனை ஆட்க்கொண்டார்.
இப்படி இருந்த நிலையில், தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி நடைபெற தொடங்கியது.
முருகன் கோவிலில் இருந்த புலி்ப்பாணி சித்தர்கள் துரத்தப்பட்டனர். தமிழ்
பூசைகள் சமஸ்கிருத பூசைகள் ஆயின. நம்முடைய கார்த்திகையில் நடந்துவந்த
கந்தசஷ்டி, அவர்களுடைய கார்த்திகைக்கு மாறியது. (நமக்கு அப்போது ஐப்பசி
மாதம்.) நம்முடைய கந்த சஷ்டி சுப்பிரமணி சஷ்டியாக்கப்பட்டது. திசம்பர் 5
அன்று சுப்பிரமணி சஷ்டி என்று நாள்காட்டிகளில் குறிக்கப்பட்டிர
ுப்பதை காணலாம்.
மொழிபெயர்ப்பைக் காணவும்
6 டிசம்பர், 11:38 PM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக