|
16/4/16
| |||
Vijay Pallava
அடங்காப்பற்று வன்னி நிலமாக மாறிய வரலாறு அடங்காப்பற்று வன்னிமைகள் (1658 - 1697)
பல்லவ தேசத்து
காடவர்கள் (வன்னியர்கள்) குடியேற்ற வரலாறு கூறும் நூல்
பிரித்தானியர்கள் இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களது ஆட்சியின்
கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக நிலவிய குறுநில
அரசுகளே வன்னிமைகள் என்னும் சிற்றரசுகளாகும். மானிய முறையிலான சமுதாய
அமைப்பு நிலைபெற்ற காலத்தில், இலங்கையின் அரசியலிலும், பொருளாதார
அமைப்பிலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பொதுவாக அவை
இலங்கையின் வரட்சி வலயங்களிலேயே அமைந்திருந்தன. அடங்காப்பற்று,
திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
வன்னிநாடுகள் தமிழ் வன்னியர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.
குறுநில மன்னர்களின் பதவியைக் குறிக்கும் வன்னிமை, வன்னியம், வன்னியன்,
வன்னிராசன் என்னும் சொற்கள் சோழர்களின் ஆட்சிக் காலத்திலே தொண்டை
மண்டலத் தொடர்பின் காரணமாக இலங்கையில் வழக்கில் நிலவின. வேளைக்காரப்
படைகளின் தலைவர்கள் பிரதேசங்களின் தலைவர்களாகியதன் விளைவாகவே குறுநில
அரசுகளை வன்னிமைகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டிருத்தல்
வேண்டும். காலப்போக்கிலே சிங்களவர், வேடர்கள் வாழ்ந்த குறுநிலப்
பிரிவுகளும் அவற்றின் தலைவர்களும் முறையே வன்னி, வன்னிராஜ எனக்
குறிப்பிடும் மரபு வலுப்பெற்றது. வையா பாடல், கோணேசர் கல்வெட்டு,
யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், வன்னியர்களின் முன்னோர்கள்
தமிழகத்திலிருந்து இங்கு வந்து இலங்கையின் பிரதேசங்களைக் கைப்பற்றி ஆட்சி
புரிந்தார்கள் எனக் குறிப்பிடுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந
்து வன்னியர்களின் ஆட்சி நடைபெற்றதாக, இலங்கையின் வரலாற்றைக் கூற
முற்படும் பிரசித்தி பெற்ற நூலான சூளவம்சம் மற்றும் சில சிங்கள
நூல்கள்கள் போன்றவற்றில் வன்னியர்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய போது, அதன் பகுதிகளை
படையாட்சி வன்னியருக்குப் பகிர்ந்து கொடுத்தான் என்று மட்டக்களப்பு
பூர்வ சரித்திரம் குறிப்பிடுகின்ற
து. இரண்டாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் (1236 - 1271)
இராசரட்டை, மாயாரட்டை, உறுகுணைரட்டை ஆகிய முப்பெரும் பிரிவுகளையும்
சேர்ந்த வன்னிமைகளைப் பற்றி சூளவம்சம் குறிப்பிடுகின்றது. வன்னிமைகள்
பதினெட்டு என்றும், அவற்றை மாகாவன்னி. சிறிவன்னி என்றும் சிங்கள
இலக்கியங்கள் குறித்து நிற்கின்றன. ஆனால் இந்த மரபு தென்னிந்தியாவில
ே தோன்றியதாகும்.
மத்தியகால இலங்கையிலே இராச்சியங்களின் எல்லைப் பகுதிகளிலும், கரையோரப்
பகுதிகளிலும் அடர்த்தியான காடுகளினால் சூழப்பட்டிருந்த வன்னிமைகள்
யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ஆகிய இராச்சியங்களில் அமைந்திருந்தன.
இராச்சியங்களின் தலைநகரங்களுக்கு மிக தூரத்தில் அமைந்திருந்ததனால்,
அங்கிருந்த வன்னியர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது மன்னர்களுக்கு சிரமமாக
இருந்தது. முடிமன்னர்களுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான தொடர்புகள்,
வரையறையான சம்பிரதாயங்களினாலும், மரபுகளினாலும் பிணைக்கப்பட்டிர
ுந்ததால், அரசனுடைய ஆதிக்கம் மற்றும் அமைதி ஆகியவைகளினாலேயே வன்னியர்கள்
அதிகாரம் பெற்றனர் என்றொரு குற்றச்சாட்டு அரண்மனைகளில் உலவியது. எல்லைப்
பகுதிகளில் அரசனுடைய படைவலிமையும், அதிகாரமும் குன்றியிருந்ததால்
வன்னியரின் ஆதிக்க வளர்ச்சியினை அவர்களால் கட்டப்படுத்த முடியாதிருந்தது.
வன்னியர்களின் ஆட்சியுரிமை தலைமுறை தலைமுறையாக பரம்பரை வழியே சென்றது.
அவர்கள் ஒரு மன்னனுக்குரிய கொடி, கவசம், படைக்கலங்கள், படைவீரர்கள்,
சிறப்புச் சின்னங்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தார்
கள். தமது பிரதேசங்களிலே நிர்வாகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும்
அவர்களே பொறுப்பாக இருந்து சகல அதிகாரிகளையும் அவர்களே நியமித்தனர்.
வன்னிப் பிரதேசங்களில் மக்கள் அரசுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள், செலுத்தும்
வரிகள் ஆகியவை வன்னியருக்கே சமர்ப்பிக்கப்பட்டன. பொதுவாக வன்னியர்கள்
மன்னருக்குரிய சகல அதிகாரங்களையும் கொண்டிருந்ததால், அவர்கள் குறுநில
மன்னர்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மன்னர்களைப் போல அபிஷேகம்
செய்து முடி சூடிக்கொள்ளவில
்லை. வன்னியர்கள் தம்மீது மேலாதிக்கம் கொண்டிருந்த மன்னனுக்கு திறை
செலுத்துதல், சிறப்பான அரசியல் விழாக்களில் கலந்து கொள்ளுதல்,
தேவைப்படும் போது படையினரை வழங்குதல் போன்ற கடமைகளைக் கொண்டிருந்தனர்.
இரண்டாம் பராக்கிரமபாகு வடமத்திய இலங்கையிலும். உறுகுணையிலும் அதிகாரம்
பெற்றிருந்த வன்னியர்களிடமிர
ுந்து திறை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆறாம் பராக்கிரமபாகுவின் (1415 -
1457) காலம் வரை ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் எந்தப் பிரதேசத்திலேனும்
வன்னியர்கள் மீது மேலாதிக்கம் செலுத்தவில்லை. https://
ta.m.wikipedia.org/wiki/%E0% AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF% 8D%E0%AE%95%
E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%
AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%
B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9
%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0
%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE
%B3%E0%AF%8D_(1658_-_1697)

ta.m.wikipedia.org/wiki/%E0%
E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%
AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%
B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9
%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0
%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE
%B3%E0%AF%8D_(1658_-_1697)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக