|
12/11/16
| |||
வரலாற்றுச் சிறப்புமிக்க கவுத்தி மலை, திருவண்ணாமலையில் இருந்து 8. கி.மீ
தொலைவில் உள்ளது. மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் இயற்கை
நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன.
மக்களின் வாழ்வாதாரத்திலும் கவுத்தி மலை முக்கிய பங்கு வகிக்கிறது.
தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கவுத்தி மலைக்கு “இரும்புத் தாது”
வடிவில் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கவுத்தி மலையில் இரும்புத் தாது இருப்பது அரை நூற்றாண்டுக்கு முன்பே
உறுதி செய்யப் பட்டுள்ளது. அதன்பிறகு பல கட்ட ஆய்வுகளை மத்திய, மாநில
அரசுகள் மேற்கொண்டன. அதன் அடிப்படையில் கவுத்தி மலையில் இருந்து
இரும்புத் தாது வெட்டி எடுப்பது என்ற முடிவுக்கு அரசுகள் வந்தன. 92.9
மில்லியன் டன் இரும்புத் தாது உள்ள கவுத்தி மலையில் இருந்து 35 மில்லியன்
டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கலாம் என்று உறுதி ஆனது.
325 ஹெக்டர் நிலத்தில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியை
மேற்கொள்ள ஜிண்டால் என்ற எஃகு நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
வழங்கியது. அதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு இரும்புத் தாது சுரங்க நிறுவனம்
- ஜிண்டால் நிறுவனம் இடையே 29-03-2005-ல் கையெழுத்தானது. பின்னர்,
கவுத்தி மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியை
மேற்கொள்ள, ஜிண்டால் நிறுவனம் முழுவீச்சில் இறங்கியது.
அப்போதுதான், தங்களது வாழ்வாதாரத்துக்கு உலை வைக்க போகிறார்கள் என்பதை
கவுத்தி மலையைச் சுற்றியுள்ள 51 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உணர்ந்தனர்.
விவசாயத்துக்கு வைக்கப்படும் வேட்டு என்பதை கிராம மக்கள் புரிந்து
கொண்டனர். கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு
என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை
ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் தடையில்லாச் சான்று
கேட்டு 2008-ல், ஜிண்டால் நிறுவனம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில்,
மக்களிடம் கருத்து கேட்காமலேயே கேட்டதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
மேலும், கவுத்தி மலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஆன்மிக ஸ்தலமான
அண்ணாமலை இருப்பது குறித்து குறிப்பிடாமல் மறைக்கப்பட்டது. அவர்கள்
சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், சாத்தியக்கூறு களை ஆராய்ந்து
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும்
சமர்ப்பிக்காததால், அந்த விண்ணப்பம் காலாவதி யானது. இதை எதிர்த்து, அந்த
நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முதற்கட்டமாக 325 ஹெக்டருக்கு பதிலாக 23 ஹெக்டர் நிலப் பரப்பில்
இரும்புத் தாது எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு
இருந்தனர்.
http://namathu.blogspot.in/ 2015/10/51-99.html?m=1

http://namathu.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக