ஞாயிறு, 19 மார்ச், 2017

வாசிங்டன் தமிழ் பள்ளி புலத்தமிழர் 500 மாணவர்கள் புலம்பெயர்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 11
பெறுநர்: எனக்கு
Sivaa Kumar .
வாசிங்டன் - தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!
வெர்ஜினியா[Virginia] மாநிலத்தில் உள்ள லாவுடண் வட்டத்தில் [ Loudoun
county] "வள்ளூவன் தமிழ்ப் பள்ளியில்" கிட்டதட்ட 500 குழந்தைகள் நம் தாய்
மொழி தமிழ் பயின்று வருகிறார்கள்! மற்ற பள்ளிகளில் தமிழ் மொழி
படிப்பவர்கள் மேலும் 400 முதல் 500 வரை இருக்கலாம்! மொத்ததில் 1000
குழந்தைகள் தாய் மொழி தமிழ் பயின்று வருகிறார்கள்!
அமெரிக்காவில் வேற்று மொழி பாடப் பிரிவில் எல்லா மொழிகளுக்கும்
அங்கீகாரங்கள் இன்னமும் கிடைத்துவிடவில்லை!
வெரிஜினியா மாநிலத்தில் லாவுடண் வட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தனது
தாய் மொழியை சிறப்பு பாடமாக எடுத்து படித்தால் அதன் மதிப் பெண்கள்
கணக்கில் எடுத்து கொள்ளப் படும்!
கிட்டதட்ட ஒராண்டு தொடர் விவாதங்கள், நமது தாய் மொழியின் பெருமைகள், உலக
அளவில் தமிழ் மொழி பேசப் படும் மக்கள், நமது மொழியின் வளமை, செழுமை
மற்றும் இங்குள்ள பள்ளிகளில் தமிழர்களின் கணிசமான பங்கு என அனைத்தும்
வெரிஜினியா அரசாங்கத்திற்கு தக்க சான்றுகள், கோப்புகள் மூலம் எடுத்து
சொல்லப் பட்டது!
நீண்ட ஆய்விற்கு பிறகு இந்த அங்கீகாரத்தை வெர்ஜினியா அரசாங்கம் நமக்கு
கொடுத்து இருக்கிறது!
அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு இது மிகப் பெரும் இனிப்பு செய்தி!
இந்த சீரிய முயற்சிக்கு பெரிதும் பாடுபட்ட வள்ளுவன் கல்வி மைய முதல்வர்
திரு பாஸ்கர் குமரேசன் மற்றும் அவரது நிர்வாக குழு, அந்த பள்ளி தமிழ்
ஆசிரியர்கள் அனைவரும் மிகப் பெரும் போற்றதலுக்கும் பாராட்டுக்கும்
உரியவர்கள்!
வாழ்த்துக்கள் வள்ளுவன் தமிழ் கல்வி மையம்!
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழு டையபுது நூல்கள்
தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" - பாரதி
மொழிபெயர்ப்பைக் காணவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக