ஞாயிறு, 19 மார்ச், 2017

பணத்தாள் அச்சடிப்பு இடங்கள் விபரங்கள் 500 100 பொருளாதாரம் கள்ளப்பணம்

aathi tamil aathi1956@gmail.com

20/11/16
பெறுநர்: எனக்கு
பணம் அச்சடிக்கும் விஷயங்களில் நாட்டில் என்ன தான் நடக்கிறது ?
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இந்திய யூனியனுக்கான பணம் அச்சிடும் தேவைகளை இரண்டு நிறுவனங்கள்
மேற்கொள்கின்றன. Security Printing and Minting Corporation of India Ltd
(SPMCIL)- இதற்கு கீழே நாசிக் (மகாராஷ்ட்ரா) அச்சகமும், தேவாஸ் (மத்திய
பிரதேசம்) அச்சகமும் வருகிறது. இங்கே ரூ. 500 தாள்கள்
அச்சடிக்கப்படுகின்றன. Bharatiya Reserve Bank Note Mudran Ltd (BRBNML)
- இதற்கு கீழே சல்போனி (மே.வங்கம்) அச்சகமும், மைசூர் (கர்நாடகா)
அச்சகமும் வருகிறது. புதிய ரூ.2000 தாள்கள் இங்கே தான்
அச்சடிக்கப்படுகின்றன. SPMCIL நிதியமைச்சகத்துக்கு கீழேயும், BRBNML
ரிசர்வ் வங்கிக்கு கீழேயும் வருகிறது.

ரூ. 500 தாள்களின் தாமதத்திற்கான காரணம், சல்போனி / மைசூர் அச்சகங்களில்
அச்சிடப்படும் ரூ. 2000 தாள்களின் அனுமதிக்கு ஒரு மாதத்திற்கு பிறகு தான்
ரூ.500 தாள்கள் அச்சடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதாவது அக்டோபரில் தான்
நாம் ரூ. 500 தாள்களை அச்சடிக்கவே ஆரம்பித்தோம்.

நவ. 8 அறிவிப்பிற்கு பிறகு ஒரு நாளைக்கு 20 மில்லியன் (2 கோடிகள்) ரூ.
2,000 தாள்கள் அச்சிடப்படுகின்றன. ரூ. 500 தாள்களின் உற்பத்தி அதை விட
மிக மிகக் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் நாசிக், தேவாஸ் அச்சங்கள் 32 -
35% தாள்களின் தேவையை பூர்த்தி செய்யும். ஆனால் அவர்களின் உற்பத்தித்
திறன் குறைவு.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இந்தியாவில் இருந்த பழைய ரூ. 500 /
ரூ. 1000 தாள்களின் எண்ணிக்கை
2,204 கோடிகள் (22,04,00,00,000 தாள்கள்) - இதில்
1,578 கோடிகள் -ரூ. 500 தாள்கள் (15,78,00,00,000)
633 கோடிகள் - ரூ. 1000 தாள்கள் (6,33,00,00,000)
இது அறிவிப்பு வெளியிட்ட நவம்பருக்கு ஒரு மாதத்திற்கு முன்னால், அக்டோபர்
2016-இல் 2,327 கோடிகளாக இருந்தது.
நம்முடைய தேவைகள் குறைந்த பட்சம் 1,000 கோடி ரு.500 தாள்கள். நேரடியாக
வகுத்தாலே 315 கோடி ரூ. 2000 தாள்கள். ஒருநாளைக்கு 2 கோடி ரூ. 2000
தாள்கள் தான் அச்சிடப்பட முடியுமென்றாலே நம் தேவைகளுக்கான 300 கோடி
தாள்கள் அச்சிட 150 நாட்கள் தேவை. ரூ. 500 தாள்கள் பற்றி பேசவேத்
தேவையில்லை. இது தான் நம்முடைய ஆதார தேவை. இதை 50 நாட்களில் ஏதாவது
medical miracle நடந்தாலேயொழிய பூர்த்தி செய்ய முடியாது. இது முதல்
ஆதாரமான சிக்கல்
அவசரகதியில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், புதிய ரூ.500 / ரூ. 2000
த்தின் மீது கவனம் திரும்பி விட்டதாலும், ரிசர்வ் வங்கி இந்த நான்கு
அச்சகங்களிலும் ரூ.100 தாள்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. ஆக கூடிய
சீக்கிரத்தில் ரூ. 100 தாள்களின் தட்டுப்பாடு அதிகரிக்கும். ரூ. 100
புழங்காத இந்தியப் பொருளாதாரம் என்னவாகுமென்பதை உங்கள் யூகத்துக்கு
விட்டு விடுகிறேன். இது இரண்டாவது சிக்கல்
In short summary,

1 ) ரூ. 2000 தாள்களின் புழக்கம் அதிகரிக்கும், அதை வங்கிகள்
எல்லோரிடத்திலும் திணிப்பார்கள், ஏனென்றால் அது மட்டும் தான் இப்போதைக்கு
ஸ்டாக்கில் இருக்கிறது.

2 ) ரூ. 500 தாள்கள் வர தாமதமாகலாம், நேரமெடுக்கலாம். உற்பத்தித் திறன்
குறைவாக இருப்பதால் “50 நாட்களுக்குள்” ஒரு பிரச்சனையும் தீராது

3 ) ரூ. 100 தாள்களை அச்சடிப்பதையே நிறுத்தி இருப்பதால், புழக்கத்தில்
இப்போது இருக்கும் தாள்களோடு மட்டுமே நம்மால் புழங்க முடியும். இது
குறைவதின் மூலம் சில்லரைத் தட்டுப்பாடு அதிகரிக்கலாம்.

நாட்டிலிருக்கும் 2 இலட்சம்+ ஏ.டி.ஏம்களில் கிட்டத்திட்ட 40,000
ஏ.டி.எம்கள் FSS என்றொரு நிறுவனத்தின் கீழ் வருகிறது. FSS அமெரிக்க
நிறுவனமான ACI Worldwide நிறுவத்தோடு ஏ.டி.எம்களை நிர்வகிக்கும் ஒரு
மென்பொருள் உரிம ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த 40,000 ஏ.டி.எம்கள்
இந்தியாவின் முன்னணி 30 வங்கிக்களுக்கு சொந்தமானவை. அமெரிக்க
நிறுவனத்திற்கும், இந்திய நிறுவனத்திற்கும் ஏதோ பிரச்சனை. அதனால்
அமெரிக்க நிறுவனம் உரிமத்தை போன ஆகஸ்ட்டில் கேன்சல் செய்து விட்டது. இந்த
40,000 ஏ.டி.எம்கள் இப்போது செயலற்ற நிலையில் இருக்கிறது. இது
மூன்றாவதும், முடிவானதுமான சிக்கல்.

மேற்சொன்ன அனைத்தும் The Quint வெளியிட்டிருந்த பணப்புழக்க சிக்கல்
பற்றிய செய்தியிலிருந்து தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டது.

இதுப் போக ராஜ்தீப் சர்தேசாய் - ப.சிதம்பரம் நேர்காணலில் (India Today )
முன்னாள் நிதியமைச்சர் மிகத் தெளிவாக, நம்முடைய அச்சக கொள்திறன்களைக்
கணக்கில் கொண்டுப் பார்த்தால் இந்த அலங்கோலம் மே வரைக்கும் நீட்டிக்கும்
என்றார். ஓரு ஆங்கில நாளிதழில் வெளிவந்த முன்னாள் ரிசர்வ் வங்கி
துணைக்கவர்னர் திரு. கே.சி. சக்ரபோர்த்தி கூற்றுப்படி இதை முழுமையாக
முடிக்க நான்கு வருடங்கள் வரை ஆகும் என்கிறார்.

ஆக எப்படிப் பார்த்தாலும் நமக்கு விடிவில்லை.

1 கருத்து:

  1. பணம் அச்சடிக்கும் இடங்களை சொல்லி விட்டீர்கள் ஆனால் அந்த பணம் அச்சடிக்கும் நிருவனத்தின் ஓனர் யார் அவர் பெயர் என்ன

    பதிலளிநீக்கு