செவ்வாய், 21 மார்ச், 2017

மபொசி போராட்டம் புகைப்படம் சித்தூர் சதானந்தம் 1956

aathi tamil aathi1956@gmail.com

4/10/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
வடக்கெல்லைக் காவலன்
ம.பொ.சி. நினைவு நாள்
3.10.1995
சட்டமன்ற முற்றுகை போரில் ம.பொ.சி. கைது!
1953ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது சித்தூர் மாவட்ட
தமிழ் தாலூக்காக்கள் ஆந்திராவோடு இணைக்கப்பட்ட போது, அதை எதிர்த்து
ம.பொ.சி. திருத்தணியில் சிறைக்களம் புகுந்தார். அதனையடுத்து சித்தூர்
மாவட்டம் தகராறுக்குரிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது ராஜ்ஜிய
புனரமைப்பு ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமர் நேரு வாக்குறுதி
அளித்தார்.
மூன்று ஆண்டுகளாகியும் ராஜ்ஜிய புனரமைப்பு ஆணையம் அமைக்கப்படவில்லை. நேரு
அரசாங்கம் ஆந்திரர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாக ம.பொ.சி. குற்றம்
சாட்டினார்.
1955ஆம் ஆண்டு டிசம்பர் 31க்குள் எல்லைச் சிக்கலை தீர்த்து வைப்பதாக
வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட காமராசர்
அரசின் உறுதிமொழியும் கூட காற்றில் பறக்கவிடப்பட்டது.
இதனைக் கண்டு வெகுண்டெழுந்த வடக்கெல்லை பாதுகாப்புக் குழு ம.பொ.சி.
தலைமையில் கூடியது. 1956 செப்.23 அன்று "வடக்கெல்லை பாதுகாப்பு தினம்"
தமிழக மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், செப்.26ஆம் நாள் ம.பொ.சி. தலைமையில் சட்ட மன்ற முற்றுகைப்
போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக தணிகை முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஈ.எஸ்.தியாகராசன், தளபதி விநாயகம் எம்.எல்.ஏ., கோல்டன் சுப்பிரமணியம்,
ரசீது, உள்பட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.
செப்.24ஆம் நாள் சட்ட மன்றத்தை நோக்கி தளபதி வினாயகம் தலைமையில்
முற்றுகையிட்ட 50 பேரும், செப்.25ஆம் நாள் அம்மையார்குப்பம் சரவண
கண்ணப்பா தலைமையில் ஒரு அணியினரும், சித்தூர் சதானந்தம் தலைமையில்
மற்றொரு அணியினரும் கைது செய்யப்பட்டனர்.
செப்.26ஆம் நாள் ம.பொ.சி. தனது தலைமையில் தொண்டர் படையினரோடு
மறியலுக்குப் புறப்பட்ட போது கைது செய்யப்பட்டார். மேற் கண்ட புகைப்படம்
ம.பொ.சி. சட்ட மன்ற முற்றுகைக்கு புறப்பட்ட போது எடுக்கப்பட்டதாகும்.
அதன் பின்னர் தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட நேரு அரசு
படாஸ்கர் என்பவரது தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று 1956ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக