செவ்வாய், 21 மார்ச், 2017

நேரு காந்தி தமிழர் வெறுப்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

7/10/16
பெறுநர்: எனக்கு
சி.பா.அருட்கண்ணனார் , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — அருகோ
மற்றும் 25 பேர் உடன்.
ஏ...ஏ...இந்தியாவே...!
நெடுந்தொடர் -7
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்திய தேசியக் காங்கிரசுக்
கட்சியின் தலைமையின் கீழ் இந்திய விடுதலைப் போராட்டம் தீவீரமாக இயங்கி
வந்தது ; மலேசியாவில் மலேசிய இந்தியக் காங்கிரசு என்ற பெயரிலும்
இலங்கையில் இலங்கைக் காங்கிரசு, மலையகக் காங்கிரசு என்ற பெயர்களிலும்
பர்மாவில் பர்மா காங்கிரசு என்ற பெயரிலும் கிளைகளைக் கொண்டு ஆங்கிலேயரை
எதிர்த்துக் காந்தியார் - நேரு கூட்டுத் தலைமையில் போராடி வந்த இந்திய
தேசியக் காங்கிரசு, இந்தியாவிற்கு வெளியிலிருந்த இலங்கை, மலேசியா, பர்மா,
தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த இந்திய வழிவழியினரில்
பெரும்பான்மையராகத் தமிழரே இருந்த போதிலும் அந்தந்த நாட்டுக் காங்கிரசுக்
கிளைகளில் ‘பீகாரி, வங்காளி, குசராத்தி, மார்வாடி..’ போன்ற வடநாட்டுக்
காரர்களையே பெரும்பாலும் கட்சிப் பொறுப்பாளர்களாக அமர்த்தியது ; அந்த
வகையில் காந்தியும் நேருவும் விடுதலை இந்தியாவை அமைக்கும் பணிகளின்
ஊடாகவே தமிழும் தமிழரும் எங்கும் எதிலும் தலையெடுக்காமல் பார்த்துக்
கொண்டனர் ; குறிப்பாகப் பழைய சென்னை மாகாணக் காங்கிரசுக்
கட்சியிலுங்கூடத் தமிழரல்லாத தெலுங்கர், கன்னடர், சமற்கிருதத்தைப்
போற்றும் வர்ணநெறி மனுவாளர் ஆகியோரே தலைமைப் பொறுப்பில் இருக்குமாறு
பார்த்துக் கொண்டனர் ; அந்த அடிப்படையில் தான், சிறையிலிருந்து வெளி வந்த
வ.உ.சிதம்பரனார், காந்தி-நேரு கூட்டணியால் புறக்கணிக்கப்பட்டார் ; அகில
இந்திய காங்கிரசுக் கட்சிச் செயலர் பொறுப்பிலிருந்த அண்ணல் தங்கோ
காந்தியாரால் இழிவுபடுத்தப்பட்டு
வெளியேற்றப் பட்டார்.
பழைய சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் பரவலாக
வாழ்ந்த-வாழ்ந்து வருகிற தென்கிழக்காசிய, தென்னாப்பிரிக்க, தென் அமெரிக்க
நாடுகளிலும் பேசப்பட்ட - பேசப்படுகிற மொழி தமிழ் என்பதையும்
‘திருக்குறள்’ போன்ற செவ்விலக்கியங்களைக் கொண்ட செம்மொழி தமிழ்
என்பதையும் ஒருகாலத்தில் முழு இந்தியாவிலும் பேசப்பட்ட ஒரே மொழி தமிழ்
என்பதையும் காந்தியார் ஐயமற அறிந்திருந்தும், தமிழை எந்தவகையிலும்
இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகவிடக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே 1918-இல்
‘தெக்கண இந்திப் பரப்பு அவை’ (பிரச்சார சபா) யின் முதற் கிளையைச்
சென்னையில் காந்தியார் தொடங்கி வைத்தார். இந்த தீர்க்கமான முடிவுப்
பின்னணியில் தான், இந்திய அரசியல் சட்ட யாப்பு அவையில் கண்ணியமிக்க
காயிதே மில்லத்து, பொருளியல் வல்லுநர் ஆர்.கே. சண்முகனார் போன்றவர்கள், “
தொன்மைமிக்கதும் சொல்லாற்றல் மிக்கதும் இந்தியமொழிகளின் தாய் ஆனதும் ஆன
தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆகும் தகுதி கொண்ட மொழி” என்று
விளக்கமாக எடுத்துரைத்தும் அவர்களுடைய கருத்து அறவே புறக்கணிக்கப்
பட்டது.
இந்தியா விடுதலை பெற்றவுடன் முதல் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற நேரு,
இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழும் தமிழரும் தலைமை பெற முடியாத
வகையிலும் தலையெடுக்க முடியாத வகையிலும் அடியோடு அழிந்து போகின்ற
வகையிலும் பல நடவடிக்கைகளை எடுத்தார்.
தமிழர்கள் குறிப்பிடத்தக்க தொகையில் வாழ்ந்த நாடுகளுக்கு இந்திய அரசு
சார்பில் ‘அரச தூதர்களை’ அமர்த்துகின்ற போது நேர்மையற்ற நேரு, அவர்களில்
யாருமே தமிழராக இல்லாமல் பார்த்துக் கொண்டார் ; தமிழர்கள் குறிப்பிடத்
தக்க அளவில் வாழ்ந்த நாடுகளில் மேலும் தமிழர்கள் போய்ச்
சேர்ந்திடாவண்ணம், சென்னை, தூத்துக்குடி, கடலூர் போன்ற தமிழர்
துறைமுகங்களிலிர
ுந்து தமிழர் வாழ்ந்த நாடுகளுக்கு இருந்த கப்பல் போக்குவரத்து ஏந்துகளை
அறவே நிறுத்தியும் அல்லது குறைத்தும் சதி செய்ததோடு, அந்நாடுகளுக்கு
கல்கத்தா, பம்பாய், காண்டிலா, கொச்சி போன்ற பிறமொழியாளர்
துறைமுகங்களிலிருந்து போக்குவரத்து ஏந்துகளைக் கூட்டியமைத்ததன் வழி,
தமிழர் வாழ்ந்த நாடுகளில் தமிழர்களின் பெரும்பான்மையைச் சீரழித்தார் ;
அந்த வகையில் தான், மொரீசியசு தீவிலும் பிசி தீவிலும் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் இந்திய வழி வழியினரில் பெரும்பான்மையினராக இருந்த தமிழர்கள்
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். இதே
போக்குவரத்துக் கட்டுப்பாடு உத்தியைப் பயன்படுத்தித் தான் ‘அந்தமான் -
நக்கவரம்’ பகுதியிலும் தமிழர் எண்ணிக்கை கூடாமல் இருந்திட, வங்காளிகளின்
எண்ணிக்கை பலமடங்கு கூடிற்று.மேலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில்
வாழும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இந்திய வழிவழியினரின் மொழியாக
அந்நாட்டு ஆட்சிகளில் இந்தியை அல்லது சமற்கிருதத்தை அமர்த்திட நேரு
அரும்பாடு பட்டார் ; ஆனால் அங்குள்ள தமிழ்த் தலைவர்கள் அனைத்து
ஆற்றலையும் பயன்படுத்திப் போராடியதன் விளைவாகச் சிங்கப்பூரில் ஆட்சி
மொழிகளில் ஒன்றாகவும் மலேசியாவில் ஏற்பிசைவு பெற்ற சிறுபான்மை
மொழியாகவும் தமிழ் வாழ்ந்து வருகிறது.
இந்தியாவிற்குள்ளே அமர்த்தப்பட்ட ஆளுநர்கள் அமர்த்தத்திலும் கூட,நேரு
காலத்தில் ஒரு தமிழர் கூட ஆளுநராக அமர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த
தமிழர் புறக்கணிப்புக் கொள்கையைப் பின் வந்த தலைமையமைச்சர்களும்
பின்பற்றியதால் தான், 70-ஆண்டுகால விடுதலை இந்தியாவில் “தங்களின் முதன்மை
அடையாளம் தமிழர் அல்ல ; இந்தியர் என்பதே” என்று கருதிய சி.சுப்பிரமணியம்,
பத்துமநாபன் இ.ஆ.ப., சண்முகநாதன், சதாசிவம் ஆகிய நால்வரைத் தவிர எந்தத்
தமிழரும் ஆளுநராக அமர்த்தப்பட்டதா
கத் தெரியவில்லை ; அந்த நால்வரிலும் ஒருவர்தான் தமிழர்கள்
குறிப்பிடத்தக்க அளவு வாழும் கேரளாவில் அமர்த்தப்பட்டுள்ளார் ; ஆனால்
தமிழ்நாட்டில் மட்டும் இந்நாள் வரை ஆறு தெலுங்கர்களும் ஐந்து
மலையாளிகளும் இரண்டு கன்னடர்களும் இங்குள்ள தெலுங்கு, கன்னட, மலையாளிகள்
ஊக்கம் பெறும் வகையில் ஆளுநர்களாக அமர்த்தப் பட்டுள்ளார்கள்.
இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பொழுது,
தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளை எல்லாம் ஒரு சிறு பகுதியையும்
புறக்கணிக்காது நயன்மையுறத் தமிழ் மாநிலமாகத் தொகுத்திருந்தால் தமிழர்கள்
ஒரு பேராற்றலாகத் தலையெடுக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த நேரு, அதைத்
தவிர்த்து இன்றிருக்கும் தமிழ்நாட்டின் பரப்பளவிற்குச் சமமான ஒரு
தமிழர்நிலப் பரப்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அது நயவஞ்சகமாக
ஆந்திரா, கருநாடகா, கேரளா ஆகியவற்றோடுச் சேர்க்கப்பட்டுள்ளது ;
அதனால்தான் சற்றொப்ப, ஒருங்கிணைந்த ஆந்திரா தமிழ்நாட்டைப் போல் இரண்டு
மடங்குப் பரப்பும் கருநாடகா ஒன்றரை மடங்கு பரப்பும் கொண்டிருக்கிறது ;
புதுச்சேரி போல ஓர் இந்திய ஒன்றியப் பகுதியாக இருந்திருக்க வேண்டிய
கேரளம்,சற்றொப்ப 38,000 சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பு உடைய மாநிலமாக
வீங்கிப் போய் இருக்கிறது. சற்றொப்ப ஒரிலக்கம் சதுரக் கிலோமீட்டர்
நிலப்பரப்பிற்கு மேல் தமிழ் வழங்கப்பட்டு வந்த நிலப்பரப்பு, நேருவின்
நயவஞ்சகத்தாலும் தெலுங்கு,கன்னட, மலையாளிகளின் மண்கவர்வெறி, தமிழர் இனப்
பகைவெறி ஆகியவற்றாலும் எள்ளின் மூக்களவு கூட தமிழர் இன உணர்வு அற்ற ஊன்
தடியர் காமராசரின் காட்டிக் கொடுப்பாலும் நெஞ்செல்லாம் நஞ்சை நிறைத்து
வஞ்சகமாகத் தமிழ்நிலத்தில் இயக்கம் நடத்திய ஈ.வெ.ரா. உள்ளிட்ட
திராவிடர்களின் கூட்டிக் கொடுப்பாலும் தமிழரிடமிருந்து பறிபோனது; பறிபோன
நிலப்பரப்போடு தொடர்புடைய ஆற்றுரிமைகளும் சிறிது சிறிதாகப் பறிபோய்க்
கொண்டிருக்கிறது.
1947-இல் நேரு தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்றதை அடுத்து,1948-இல்
இலங்கையும் விடுதலை பெற்றது; இலங்கைத் தலைமை அமைச்சர் சேனநாயகா
பொறுப்பேற்றவுடன் செய்த முதல் திருப்பணியாக, மலையகத்தில் வாழ்ந்த
பத்திலக்கம் தமிழர்களுக்கு இருந்த நாட்டுக் குடியுரிமையை நீக்கி
ஆணையிட்டார்; அவ்வாணை, உலகநாடுகள் ஏற்றுக் கொண்ட ஒழுங்கு முறைப்படி
முறையற்றது என்பதை நேரு நன்கு அறிந்தவராக இருந்தும் அதை கண்டிக்கவும்
இல்லை, அவ்வாணையை முறியடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த
அடாததும் கொடுமையானதும் ஆன நேருவின் மறைமுக ஆதரவின் விளைவாக குடியுரிமை
பறிக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலோர் 1966-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியத்
தலைமையமைச்சர் சாத்திரி காலத்தில், ‘சாத்திரி - சிரிமாவோ பண்டாரநாயகா’
ஒப்பந்தத்தின் வழி ஏதிலியர்களாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு ஒரியா,
அந்தமான், கருநாடகா, நீலமலை போன்ற பல இடங்களுக்குப் பரவலாக அள்ளித்
தெளிக்கப்பட்டனர். அதைப் போல,1964-இல் பர்மாவில் ஆட்சிக்கு வந்த அரசு
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மிக்க வளத்துடன் வாழ்ந்துவந்த பர்மாத்
தமிழர்களிடமிருந்து ஐயாயிரம் கோடி உரூவாய்க்கும் மேலான பெருமானம் கொண்ட
உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஐந்து இலக்கம் தமிழர்களை ஏதிலியர்களாக நாடு
கடத்தியது; நாகரிக உலகம் ஏற்க இயலாத இக் கொடுஞ்செயலையும் நேர்மையற்ற
கொடுங்கோலன் நேரு, பர்மா அரசைக் கண்டித்துத் தமிழர்களைக் காக்காததோடு,
தமிழர் துன்பங்களைச் சற்றும் பொருட்படுத்தி ஏற்காமல், பர்மிய அரசிற்குத்
தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட 5000-கோடி உரூவாய் உடைமைகளை இந்தியாவின்
பரிசாகப் பரிசளிக்கிறேன் என்று அறிவித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்
கொண்டாடினான்.
மேற்கண்டவாறு இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழர் இனத்தை பலவாறு
ஒடுக்கியும் ஒழித்தும் செயற்பட்ட கொடுங்கோலன் நேருவை முதல் தலைமை
அமைச்சராகவும் பதினேழு ஆண்டு காலத் தலைமையமைச்சராகவும் கொண்டிருந்த ...
ஏ...ஏ...இந்தியாவே...!
நீ...தமிழர் இனப் பகையே...!!
-அருள்நிலா.
4 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக