ஞாயிறு, 19 மார்ச், 2017

நந்திமலை பாலாறு சான்று 1956

நந்திமலை சான்று

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில்,
'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்'என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது
பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை
முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' - 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த
பாலானாது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி,
அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும்
கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது
பாலாறு).

 யோக நந்தீஸ்வரர் கோயில்
மலை உச்சியின் ஒரு பகுதியில் இருக்கும் யோக நந்தீஸ்வரர் கோயில் 9-ம்
நூற்றாண்டில் பாணர்கள் காலத்தில் கட்டியது. 11-ம் நூற்றாண்டில் சோழர்கள்
ஆட்சியில் கோயில் கோபுர மண்டபமும், பின்னாளில் வந்த ஹொய்சாலர்கள்,
விஜயநகர பேரரசுகள் ஆட்சிக் காலங்களில் கூடுதல் மண்டபம், சதுர வடிவ குளம்
ஆகியவை வரலாற்றை நினைவூட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக