| திங்., 24 ஜூன், 2019, பிற்பகல் 12:52 | |||
பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
யாகம், வேள்வி என்பவை தமிழர் பண்பாடுகள் இல்லையா...!
அவை ஆரியப் பண்பாடுகளா...!
சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் யாகசாலையின் துபத்தம்பங்களும் இருந்துள்ளன...
பாண்டிய குலத்து அரசரான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் கணக்கற்ற யாகங்களை நடத்தியதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன...
இவற்றையெல்லாம் திராவிடவாதிகள் மறுக்க மாட்டார்கள்... இந்த யாகங்கள் எல்லாம் ரிக் யஜுர் சாம அதர்வணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத வேதங்களை ஓதி நடைபெற்றதாக தவறாகக் கருதுகின்றனர் அல்லது அடம் பிடிக்கின்றனர்...மேற்கண்ட யாகங்களில் சமஸ்கிருத வேதங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கு திராவிடவாதிகள் ஒரு ஆதாரமும் கொடுப்பதில்லை...
தொல்காப்பியத்தை அரங்கேற்றிய அதங்கோட்டாசான் என்பவர் நான்மறைகளில் சிறந்தவர் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற
ார்...உடனே திராவிடவாதிகள் அந்த நான்மறைகள் என்பவை சமஸ்கிருத நால்வேதங்கள் என்று முடிவுக்கு வருகின்றனர்... வட மொழி வேதங்கள் என்றால் அவற்றை வடமொழி வேதங்கள் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டிருப்பாரே,ஆனால் அவர் மட்டுமல்ல சங்க இலக்கியங்களில் எங்குமே வடமொழி வேதங்கள் என்று குறிப்பிடப்படவில்லையே...
கிபி மூன்றாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் நான்மறை ஓதும் பார்ப்பனர்களை வண்டமிழ் மறையோர் என்கிறதே... கிபி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு மறைகளை ஓதுவது அந்தனாருக்கு அழகு என்கிறாரே என்றெல்லாம் கேட்டால் திராவிடவாதிகள் வாயைத் திறப்பதில்லை....
கிபி14ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் குறிப்பிடுவது தமிழ் நான் மறைகளையே என்றும் அவையே வடக்கில் உள்ள சிற்றறிவினர்களுக்காக ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களாக பகுக்கப்பட்டன என்கிறார்...அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத வேதங்கள் பயன்பாட்டுக்கு வந்ததால் அவை மட்டும் நின்றுவிட்டன...அசல் வேதங்களான தமிழ் வேதங்கள் கேட்பாரின்றி அழிந்துவிட்டன...
ஆகவே சங்க காலத்தில் இருந்து கிபி 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் யாகங்கள் மற்றும் வேள்விகள் தமிழ் வேதங்களை ஓதி தான் நடைபெற்று வந்தன...
4 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
புலவர் வல்வில்ஓரி மற்றும் 37 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
# யாகமும் திருவள்ளுவரும்.
யாகத்தை மறுதலிப்பது என்பது வேறு..அதற்காக அதை தமிழர் மரபல்ல என்று மறுப்பதாகக் கொள்ளக் கூடாது... சங்க காலத்தில் பல் வகை வழிபாட்டு முறைகள் இங்கு நிலவியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...
மேலும் திருவள்ளுவர் யாகத்தைப் பற்றியும் அதில் எரிக்கப்படும் அவிற்பாகம் பற்றியும் ஏற்றே பாடியுள்ளார்...
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (குறள் 413)
செவியுணவு என்பது கேள்வி.
வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு. செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார் என்று பெருமைப்படவே திருவள்ளுவர் பாடியுள்ளார்
பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக