வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈழம் கிழக்கு மதமோதல் 12 புலிகள் க்கு உதவி உயிர்துறந்த இசுலாமியர்

உரையாடல் விவாதம் 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 9:08
பெறுநர்: aathi1956
திருத்த வரலாறு என்பதைக் காண்
Thiruchchelvam Kathiravelippillai, Nalliah Vasanthan மற்றும் 87
பேருடன் இருக்கிறார்.
தொடர் – 12
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான
நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் போது
தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே
பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில்
செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர்.
தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல்
விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம்
நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை
ஏற்படுத்தினாலும் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததனால் அது
பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை
தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது.
இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின்
நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால்
பார்க்கப்பட்டது. அச்சத்தின் காரணமாக கோரப்படும் நிதியினை
வழங்காவிட்டாலும் தம்மால் இயன்ற நிதியினை வழங்கினார்கள். இச்செயற்பாடுகள்
முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களை தூர விலக்குவதற்கு துணை
செய்தன. ஆட்சியாளர்களும் அதனைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை
எளிதாக்கினார்கள்.
அதேவேளை 1982 ஆம் ஆண்டு கிண்ணியா மக்கள் வங்கி ஈ.பீ.ஆர்.எல்.எஃப்
இயக்கத்தினால் பெரும்தொகைப் பணம், நகை என்பன கொள்ளையிடப்பட்டன.
இந்நடவடிக்கைக்கு ஈரோசிலிருந்து பிரிந்துசென்று ஈ.பீ.ஆர.எல்.எஃப் உடன்
இணைந்து கொண்ட கந்தளாயைச் சேர்ந்த சின்னவன் தலைமை தாங்கினார்.
இந்நடவடிக்கைகக்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் பின்னர் முக்கிய நபராக விளங்கிய
சுபத்திரனும் பங்கேற்றார். சின்னவன் காரைநகர் கடற்படைத்தளத் தாக்குதலில்
இன்னுயிரை ஈர்ந்தவர்.
1983 இல் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மதுபோதையில் காவல்துறை கைது
செய்தது. கைதுசெய்யப்பட்ட காரணம் அறியாது தானாகவே கிண்ணியா
வங்கிக்கொள்ளைச் சம்பவம் பற்றி மதுபோதையில் உளறியதனால் வங்கிக்
கொள்ளையுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும்
வழங்கிய பலர் காவல்துறையினரால் 1983 இல் கைது செய்யப்பட்டு தண்ணடனை
அநுபவித்து 1988 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். இக்கொள்ளையில்
முஸ்லிம் மக்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை.
ஆனாலும் முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்த வண்ணமும்
இருந்தனர். காடுகளில் முகாமிட்டிருக்கும் போராளிகளுக்கு உணவு, உடை
என்பற்றைக் கொண்டு கொடுக்கும் பெரும்பணியினை முஸ்லிம்கள் செய்தனர்.
தமிழர்கள் கொண்டு செல்லும் போது ஐயம் காரணமாக படையினரால் கைதுசெய்யப்பட
வாய்ப்புகளிருந்ததனால் முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில்
அதிகளிவில் உதவினார்கள். விறகு வெட்டச்செல்லுதல், வயல்களுக்குச்
செல்லுதல், மீன், நண்டு பிடிக்கச் செல்லுதல் என்ற போர்வையில் பொருட்கள்
கைமாறப்பட்டன.
கிண்ணியா கண்டலடியூற்றிலிருந்து உப்பாற்றில் முகாமிட்டிருந்த விடுதலைப்
புலிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மீன் , நண்டு
பிடிப்பதற்காக செல்வது என்ற போர்வையில் சென்று பொருட்களை ஒப்படைத்து
வருவார்கள்.இதனை அறிந்த படையினர் உப்பாறு துறையடியில் அதிகாலையிலேயே
சென்று நிலையெடுத்துக் காத்திருந்தனர். இதனை அறியாது கண்டலடியூற்றைச்
சேர்ந்த ஆறு பேர் பொருட்களுடன் வள்ளத்துக்கு அருகில் சென்றவுடன்
இராணுவத்தினரை கண்டதும் பிடிபட்டால் கையும் மெய்யுமாக பிடிபடுவோம் என்பதை
உணர்ந்து ஓடத்தொடங்கினர். நிற்குமாறு படையினர் விடுத்த கட்டளையை அவர்கள்
செவிசாய்க்கவில்லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு பேரில்
“அப்துள் லத்தீப் கலீம்“ என்பவர் குண்டு பட்டு சாவடைந்தார். ஏனைய ஐவரும்
காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு பின்னர்
கைதுசெய்யப்பட்டு தண்டனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு பல
சம்பவங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றன.
கண்டலடியூற்றைச் சேர்ந்த ராப்டீன், முஸ்தபா ஆகியோர் விடுதலைப்
புலிகளுக்கு பொருட்களை இரகசியமாகக் கொண்டு சேர்ப்பவர்கள். அவர்கள் இராணுவ
கெடுபிடி காரணமாக சில நாட்கள் செல்லவில்லை. அதனையறியாத விடுதலைப் புலிகள்
அவர்கள் இருவரையும் தேடி வந்து சுட்டக்கொன்றனர். இந்நடவடிக்கை
கண்டலடியூற்று மக்களை விடுதலைப் புலிகள் மீது வெறுப்பினை ஏற்படுத்திய
சம்பவமாக பதிவானதுடன் விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கொண்டு சென்று
கொடுப்பதற்கும் தயங்கியதுடன் யாரும் அவ்வாறு செயற்பட முன்வரவில்லை.

17 ஆகஸ்ட், 2018

Manikkam Elango
விடுதலை இயக்கங்களின்
தலைமைத்துவமற்ற சுயாதீன முடிவுகள் பலரினதும் வெறுப்புக்களுக்கும்
காட்டிக்கொடுப்புக்களுக்கும் காரணமாயிருந்தது. நடுநிலைத்தன்மையற்ற
விசாரணைகளும் தண்டனைகளும் அரங்கேற்றப்பட்டது கசப்பான உண்மைகளே
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 17 ஆக., 2018
Nilamdeen Mohamed பதிலளித்தார் · 1 பதில்
Thushyanthan Kana
புலிகளுக்கு இவர்கள் பொருட்களை இனாமாக வழங்கவில்லை உயிர் அச்சுறுதல்
இருந்தும் இலாபமீட்டும் தொழிலாக இவர்கள் அதைச் செய்தார்கள். உறவை
வலுப்படுத்தவோ போராட்டத்தின் மீதான பற்றினால் செய்யவில்லை விதிவிலக்கும்
இருந்திருக்கவும் வாய்ப்பில்லை பின்னான சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தின.

எனவே வரலாற்றுப் பதிவுகளில் வெள்ளையடிக்காதீர்கள். பதிவுகளில்
பக்கச்சார்பும் நடுநிலைமை எனும் மாயையைக் களைந்து உண்மையை உணர்த்தி
எழுதுங்கள்.|

Thiruchchelvam Kathiravelippillai
இதில் நடுநிலைமையாக என்பதை விட உண்மைத் தன்மை என்பதே கவனிக்க வேண்டிய
விடயம். இது கோபப்பட வேண்டிய விடயம் அல்ல. நிதானமாக சிந்திக்க வேண்டிய
விடயம். வியாபார நோக்கில் செய்யப்பட்டிருந்தாலும் செய்யப்பட்டதனை மறுக்க
முடியாது.
வரலாறு உண்மையை தெரிவிக்க வேண்டுமே தவிர உண்மைக்குப் புறம்பாக எழுதுவது
தவறு. தமிழர்கள் ஏன் பொருட்களை கொண்டு செல்லவில்லை என்றால் அவர்களால்
கொண்டுசென்று கொடுக்க முடியாதவகையில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன,
அதற்காக தமிழர்கள் பொருட்களை கொண்டுசென்று கொடுக்கவில்லை என்று
அர்த்தமாகாகது. இத்தொடரில் உறவு விரிவடைந்ததற்கான சில முக்கிய நிகழ்வுகள்
மாத்திரம் பேசப்படுகின்றன, அவ்வளவே. இருபக்கமும் தவறுகள் ஏற்பட்டன
என்பதனை ஏற்றால் மட்டுமே தமிழ்பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்.
6 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

Manikkam Elango
ஆமாம்
பொருட்களின் பெறுமதியைத் தாண்டி பணம் வழங்கப்பட்டதும் மறுக்கமுடியாதல்லவா
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

A M Geeth Geeth
Thiruchchelvam Kathiravelippillai அவர் எந்த இயக்கத்தில் இருந்தார்
இந்தியா இராணுவ வரவின் பின்னே ஈழ போராட்டத்தில் இவ்வளவு இயக்கங்கள்
இருப்பது அனேகருக்கு தெரியும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

Vijendran Vijayan
மறக்கமுடியாதவையும் மறுக்க முடியாததுமான உண்மை உணர்வுடன் கூடிய உயிரையும்
தியாகம் செய்யும் விஸ்வாசத்துடன் சில முஸ்லிம்கள் இருந்தனர்..

Thiruchchelvam Kathiravelippillai
Vijendran Vijayan உண்மை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

A M Geeth Geeth
Vijendran Vijayan இன்னும் இருக்கின்றனர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

A M Geeth Geeth
Thiruchchelvam Kathiravelippillai நன்றி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

A M Geeth Geeth
Manikkam Elango பணப்பரிமாற்றம் இன்றி மனப்பறிமாற்றம் மூலம் பலசம்பவங்கள்
நடந்துள்ளன
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

Mahendran Mahe
தமிழ் பேசும்மக்ளுக்கான உரிமை போராட்டம் என்பதை உனர்து போராட்டத்தில்
இனைந்து போராடியவர்களும் உனடு உயிரை கோடுத்தவர்களும் உண்டு சிறை வாழ்கை
அனூபவத்வர்களும்உன்டு இன்று வறைக்கும் அந்தகொள்கை வேல்ல வேண்டும் அசையாத
நம்பக்கை உடையவர்களும் முஸ்லிங்கலில் உண்டு அந்த தியாகங்களை மதிப்போம்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

A M Geeth Geeth
Mahendran Mahe நன்றி நண்பரே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

Farhan Musthafa
Thushyanthan kana மாவீரர் துயிலும் இல்லம் பட்டியலை கொஞ்சம் புறட்டிப் பாருங்கள்,
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 18 ஆக., 2018

Farhan Musthafa
Amgeeth Geeth நற்பு ரீதியாக இருந்தவர்களும் உண்டு, ஆனால் பலர் இறுதிக்
கட்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சிலரின் துரோகங்களுடன் ஒப்பிட்டு
முன்னோர்களின் நற்பிற்கும் கலங்கம் கற்பிக்கின்றனர்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 18 ஆக., 2018

Sasitharan Kandiah
பழைய நிலைக்கு திரும்பல் சாத்தியமா தெரியவில்லை. ஆனால் உறவுகள் சுமூகமாகலாம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 18 ஆக., 2018

Nilamdeen Mohamed
Thushyanthan Kana இங்கு உண்மைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன .இதில்
எங்கு பக்க சார்பு உள்ளது .இங்கு நடுநிலை என்பதற்கு அப்பால் முற்று
முழுதான உண்மைகள் நமக்கு தெரியாத அரிய வரலாற்று உண்மைகள் வந்து
கொண்டிருக்கின்றன ,,வாழ்த்துவோம் .வரவேற்போம் ..

Jawhary Abdul Azeez
உண்மை யில்,,,இந்த தமிழர் விடுதலை ப்போராட்டத்தில்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தமிழர்கள் தமிழர்களையே காட்டிக்கொடுத்த வரலாறுதான் அதிகம, இப்பொழுதும்
அந்த நிலைதான் தொடர்கிறது,ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, முஸ்லீம் மக்களுக்கு
அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களும்,தமிழர் விடுதலை இயக்கங்களும் ,செய்த
அநியாயங்கள் ஆயிரமாயிரம், ,,அத்துடன் இந்த தமிழர்,,,முஸ்லீம் உறவை
இப்பொழுதும் தமிழ் தலைமைகளும்,,,,முஸ்லீம் தலைமைகளும் ,ஏன் சிங்கள
பேரினவாத சக்தி களும் இப்பொழுதும் சீரழித்துக்கொண்டே இருக்கிறார்கள்,
,,,? இப்பொழுது எல்லாம் முற்றிவிட்டது எல்லோரும் ஐக்கியம்,
நம்பிக்கை,கட்டுப்பாடு, தியாகம், ,பொறுமை ஆகிய அருங்குணங்கள் யாரிடமுமே
இல்லை,இப்பொழுது என்ன உருவாகியுள்ளது,இனவாதம், மதவாதத்தை தூண்டியே, ,இந்த
அனைத்து தலைமை தலைமைகளும் அரசியல் செய்து,,வடகிழக்கில் மாத்திரமல்ல,
,,முழு இலங்கையிலும் பாகப்பிரிவினைகளை உருவாக்கி, ,பிரத்தாளும்
தந்திரங்கள் ஊடாக இந்த நாட்டு மக்களை சீரழித்துவிட்டார்கள்,நாம்
இப்பொழுது எல்லோரும் இந்த பழமைவாதிகளையும் இனவாதிகளையும் துரத்தி
அடித்து, ,,இரு சமூகங்களின் அந்த தூய்மையான. ஒற்றுமைக்காக பாடு
படவேண்டும்,நாம் வடகிழக்கு மக்கள், நாம் தமிழ் பேசும் மக்கள், ஒற்றுமையே
எமது பலம், ,,,ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்
தாழ்வு,
திருத்தப்பட்டது · 4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் ·
17 ஆக., 2018

Jawhary Abdul Azeez
கிண்ணியா, ,,மக்கள் வங்கியை அன்றைய யுத்த காலத்தில் கொள்ளையடித்தவர்கள் யார்,?
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
,,ENDLF ,EPDP எபோது ஆரம்பிக்கப்பட்டது,
1982 ,1983,1984,1985,1986,,1987,1988, ,,,,1989 ,1990:,,, களில்
,,,இந்தியாவின் ஆதரவுடன் வடக்கு கிழக்கை ஆண்டவர்கள் அந்த
வரதராஜப்பெருமாள்,,,ஜோர்ஜ்,, பந்பநாபா, ,ஆலங்கேணி நாதன்,,,போன்றவர்கள்
எந்தக்கட்சியைச்சேர்ந்தவர்கள்,அத்துடன் ,அத்துடன், ,இந்தியாவுக்கும்
இலங்கை பேரினவாத அரசுக்கும் தமிழ் பேசும் மக்களை காட்டி க்கொடுத்து
கூட்டிக்கொடுத்தவர்கள் யார்?,,,அத்துடன் கிண்ணியா மக்கள் வங்கியை
கொள்ளையடித்தவர்கள் யார்,????யார் ,,,யார்,???ஆலங்கேணி,,தமபலகாமம்
பிரதேசங்களில் இருந்து கொண்டு அட்டகாசம் பண்ணிய, ,அலோசியஸ்,மற்றும்
தம்பலகாமம் ரவி,,,போன்றவர்கள் LTTE,மற்றும் EROS இயக்கங்களில் இருந்த
பொழுது அவர்களை காட்டி க்கொடுத்தவர்களே,,,,,,இந்த EPDP,,ENDLF,,
தான்கின்ற,,கருத்து தமிழ் மக்களிடம் உள்ளது,,ஆனால் இப்பொழுது வரலாறு
மாறிவிட்டது, ,தமிழர் போராட்டத்தில், தமிழர்களையும் ,தமிழர் விடுதலை
இயக்கங்களையும், மாறி மாறி தமிழர்களே காட்டிக்கொடுத்து ,பரஸ்பரம்
தமிழர்கள் தமிழர்களுக்கே எதிரியாகவும், துரோகியாகவும் மாறிவிட்ட பரிதாப
நிலை,„
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 17 ஆக., 2018

விடியல் தமிழ்
நான் அறிந்த வரை
1: அவர்கள் தங்கள் தொழிலை பிரச்சினைகள் இன்றி தொடர்ந்து செய்ய உதவுவது
போல் உதவியும் இலாபம் எடுத்தும் செய்தனர்.
2: உதவி செய்வது போல் நம்பவைத்து இராணுவ புலனாய்வு பிரிவு க்கு புலிகள்
பற்றிய தகவல் கொடுத்தனர். அதனால் அவர்கள் இருவரையும் கொன்று இருக்கலாம்.
1992ம் ஆண்டாக இருக்க வேண்டும் புல்மோட்டையில் நடந்த சம்பவம். .. ஒரு
முஸ்லிம் நபர் வழமையாக பொருட்கள் வாங்கி தருவது இரவில் போராளிகள்
புல்மோட்டைக்கு சென்று பணத்தை கொடுத்து பொருட்களை எடுத்து வருவது
வழக்கம். அன்று திரியாய் பகுதிக்கு தளபதியாக இருந்த மேஜர் ஜெயம் வருவதை
உறுதிப்படுத்தி இருந்த அந்த முஸ்லிம் நபர் இராணுவத்துடன் பதுங்கி இருந்து
தாக்குதல் செய்தனர். அதில் மேஜர் ஜெயம் குறிதவறாது கொல்லப்பட்டார். இதில்
என்னவென்றால் அவன் ஜெயத்துடன் மிகவும் நெருக்கமாக நம்பிக்கையாய்
பழகியவன். பின்னர் தான் தெரியும் அவன் ஒரு இராணுவ புலனாய்வு பிரிவு
க்குரியவன் என்று.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி

Thiruchchelvam Kathiravelippillai
அவ்வாறான செயற்பாடுகள் பல நடைபெற்றன என்பதனை தெரியப்படுத்த வேண்டும்.
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரை இராணுவம் என நோக்க வேண்டுமே தவிர அவரை
முஸ்லிமாக நோக்கக்கூடாது, தமிழர்களும் இப்படியான காட்டிக்கொடுப்புகளை
செய்திருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

விடியல் தமிழ்
நீங்கள் கூறுவது உண்மை தான். ஆனால் ஒப்பீட்டளவில் முஸ்லிம் மக்களை இலங்கை
அரசு படைகள் விடுதலை போராட்டத்தை ஒடுக்க பாவித்தனர். பல அழிவுகளுக்கும்
காரணமாக இருந்தனர் . அதற்காக முஸ்லீம் இனத்தை குறை கூற முடியாது.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · மேலும் · 17 ஆக., 2018

விடியல் தமிழ்
இராணுவ புலனாய்வு பிரிவுகளால் நன்கு பயிற்றப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்கள்
புலிகள் பற்றிய தகவல்களை பெறவும் நாசகார செயல்களை செய்யவும் புலிகள்
இயக்கத்தில் இணைந்து பின்னர் சந்தர்ப்பங்களில் பெறுமதிமிக்க ஆயுதங்கள்,
தொலைதொடர்பு சாதனங்கள், பணம் போன்றவற்றுடன் தப்பி சென்று இராணுவ
முகாம்களில் இருந்து கொண்டு காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்தனர். முஸ்லிம்
இளைஞர்களை இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழருக்கு எதிராக பாவித்தனர்
என்பது மறுக்க முடியாத உண்மை.
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 17 ஆக., 2018
Mjm Suaib
அறியாதவை, அறியப்படுத்தியமைக்கு நன்றி ஐயா.

நடந்தவற்றை நடுநிலையொடு தெரிவிக்கும் உங்களைப் போன்றவர்களைக் காண்பது
இக்காலத்தில் கடினம் என்பதை நினைக்க கவலையளிக்கிறது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 17 ஆக., 2018


Siva Murugupillai
ஈபிஆர்எல்எவ் இனால் மேற்கொள்ளப்பட்ட கிண்ணியா வங்கியிலிருந்து நிதி
சேகரிப்பு றொபேட் என்ற சுபத்திரன் தலமையில் நடைபெற்றது இதற்கான குழு
யாழ்ப்பாணத்தில் இருந்தே சென்றது இதில் திருகொணமலை மாவட்டத்து
போராளிகளும் இணைகப்பட்டிருந்தனர். றொபேட் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா பிரிவின்
செயலாளர் நாயகமாக செயற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி
வீதியில் ஜுன் 14, 2003 ம் ஆண்டு புலிளின் சினைப்பர் தாக்குதல் மூலம்
கொல்லப்பட்டார். இலங்கை இந்தி ஒப்பந்தத்தின் பின்பு அமைந்த பத்மநாபா
தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் ஆட்சி ஆரம்பத்தில் சகல ஈழவிடுதலைப்
போராளிகளும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை
இந்தியா ஊடாக இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதன்
அடிப்படையில் சிறையில் இருந்து அனைத்து விடுதலை அமைப்புகளின் போராளிகளும்
பொது மக்களும் விடுவிக்கப்பட்டனர். இது போன்றதொரு கோரிக்கை 2009ம் ஆண்டு
மே மாதம் 18 இற்கு பின்னர் ஏற்பட்ட சூழலில் தமிழ் தலைமைகளினால் இராதந்திர
அடிப்படையில் சரியான நேரத்தில் சரியாக முன்வைக்கப்படவில்லை என்ற வரலாற்று
பதிவுகளையும் இவ்விடத்தில் பதிய விரும்பு கின்றேன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 26 ஆக., 2018

Siva Murugupillai
பணக் கொடுப்பனவு அடிப்படையில் பண்ட பரிமாற்றங்கள் நடைபெற்றனவா? அல்லது
அல்லது ஆதரவு அடிப்படையில் நடைபெற்றதா? ஆதரவு அடிப்படை என்பதே
பெரும்பாலும் என்பது என் மதிப்பீடு இதனை தொடர்ந்து வந்த காலங்களில்
புலிகள் அமைப்பு அதனை சரியாக கையாளவில்லை என்பது அவர்களின் செயற்பாட்டில்
இருந்து அறிய முடிகின்றது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 26 ஆக., 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக