புதன், 8 ஜூலை, 2020

டி.கே.ரங்கராஜன் தமிழக நிதி யிலிருந்து கேரளா வுக்கு ஒரு கோடி

aathi1956 aathi1956@gmail.com

திங்., 3 செப்., 2018, பிற்பகல் 8:17
பெறுநர்: எனக்கு
[3/9, 10:33] kathir nilavanFb: டி.கே.ரங்கராஜன்

தமிழக எம்.பி.யா?
கேரள எம்.பி.யா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன். இவர் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை கேரள அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

டி.கே.ரங்கராஜன்  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநிலங்களவை உறுப்பினரேயன்றி, கேரளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநிலங்களவை உறுப்பினர் அல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அவர் சம்பளத்திலிருந்து நிதி தருவதையோ, தமது கட்சியிலிருந்து நிதி தருவதையோ நாம் எதிர்க்க வில்லை.

ஆனால் தமிழ்நாட்டு மேம்பாட்டு நிதி என்பது தமிழ்நாட்டு மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிதியாகும். இதை கேரள அரசுக்கு அள்ளிக் கொடுப்பது என்பது தார்மீக அடிப்படையில் தவறான ஒன்றாகும்.

டி.கே.ரங்கராஜன் தாம் குறுக்கு வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலும் தொகுதி ஒன்றும் இல்லாத படியாலும் கேரள அரசுக்கு கொடுத்தாரா என்று தெரியவில்லை.

டி.கே.ரங்கராஜன் தம்மை தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர்களிடமோ அல்லது மக்களிடமோ அனுமதி எதுவும் பெற்றாரா என்றும் தெரிய வில்லை.

ஒரு வேளை, கேரளத்தில் காங்கிரசு தலைமையிலான உம்மன் சாண்டி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால்  இவ்வளவு பெரிய தொகையை தூக்கித் தந்திருப்பாரா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

கேரளாவைப் போலவே, காவிரி மண்டலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து, கடும் பாதிப்பு உருவாகியுள்ளது. இதற்காக  தொகுதி மேம்பாட்டு நிதியை
பாதிக்கப்பட்ட   மக்களுக்கு வழங்கிட டி.கே.ரங்கராஜனுக்கு ஏனோ மனம் வரவில்லை.

சென்னை நகரம் சுனாமியாலும், அதன் பிறகான காலங்களில் வெள்ளத்தாலும்  கடும்  பாதிப்புக்கு உள்ளான போது எந்தவொரு மலையாளியும் ஓடோடி உதவிக்கு வர வில்லை என்பது கடந்த கால வரலாறு..

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எவராவது  தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழகத்திற்கு டி.கே.ரங்கராஜனைப் போல அள்ளிக் கொடுக்க வேண்டாம்: கிள்ளியாவது கொடுத்தார்களா?

பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழக அரசு வழங்கியதோ வெறும் 5 கோடி ரூபாய் தான்.  ஆனால் சி.பி.எம். கட்சியின் ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு ஒரு கோடி ரூபாயை தூக்கி கொடுக்க இவருக்கு எப்படி துணிச்சல் வந்தது? இது கேரளப் பாசமா? கம்யூனிஸ்ட் கட்சி பாசமா? இந்தியப் பாசமா? ஒன்றும் விளங்க வில்லை

முல்லைப் பெரியாறு அணை நீரால் கேரள மக்களுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு விட்டதாக உச்ச நீதி மன்றத்தில் கேரள அரசு  பொய்த்தாக்கல் செய்து 142 அடி நீரை 139 அடி நீராகக்  குறைக்க உத்தரவு பெற்று விட்டது. இதற்குக்  காரணம் கேரள முதல்வர் பினராய் விஜயன். தமிழர்கள் நீண்ட காலம் போராட்டம் நடத்தி பெற்ற உரிமையை காவு வாங்கிய மலையாள இனவெறியர் பினராய் விஜயனைக் கண்டித்து  மாநிலங்களவையில்  ஒரு வார்த்தை டி.கே.ரங்கராஜன் பேசியதுண்டா?

மாநிலங்களவையில் பேச முடியாவிட்டாலும்,  தமது கட்சி மேடையிலாவது பினராய் விஜயனுக்கு எதிராக ஒரு முக்கலோ, முனகலோ உண்டா?

இன்று வரை தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு பேருதவிகளை பெற்றுக் கொண்டு, துக்க வீட்டிலும் கூட தமிழ்நாட்டின் மேல் பழியைப் போடும் ஈனத்தனமான காரியத்தை மலையாள கம்யூனிஸ்ட் கட்சி கைவிடவில்லை. இது தெரிந்தும் டி.கே.ரங்கராஜன் ஒரு கோடி ரூபாயை தூக்கிக் கொடுக்க என்ன நெஞ்சழுத்தம் வேண்டும்!

தமிழர் நலன் காக்க "தமிழர் உரிமை மாநாடு" நடத்துவது ஒருபுறம்! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கேரளாவோடு கொஞ்சிக் குலாவுவது மறுபுறம்! இப்படி இரட்டை வேடம் போடுவதை நிறுத்தும் வரை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்;
[3/9, 15:01] vapimumu saktivlrjFbH: இதுமட்டுமல்ல...
நீட் தேர்வில் தவறான தமிழ்வினாத்தாளுக்காக மதுரைகிளையில் தொடுத்தவழக்கில் தாற்காலிக தடையாணை கிடைத்ததிற்காக ஆர்ப்பாட்டஞ்செய்தார்.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் சரியானபடி வாதத்தை எடுத்துவைக்காததால் வழக்கு தோல்வியில் முடிந்தது

தமிழர்களது உரிமையை சட்டத்தின்பேரால் விட்டுக்கொடுத்துவிட்டார்.

இதேபோல்தான் வைகோவும் செயல பட்டுவருகிறார்.

பொதுவுடைமை கம்யூனிஸ்ட் பார்ப்பனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக