|
திங்., 27 ஆக., 2018, பிற்பகல் 3:11
| |||
Thiruchchelvam Kathiravelippillai , Prashanth Tpr மற்றும் 60 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 07
அம்பாறை மாவட்டத்தில் தமது நிலையான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. 1985 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழ்கின்ற ஊர்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டவண்ணமிருந்தன. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சமடைவதுடன் முஸ்லிம் மக்களுடன் பகையுணர்வினையும் வளர்க்க வேண்டும் எனபது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.
1986 பெப்ரவரி 19 ஆம் நாள் உடும்பன்குளம் என்ற ஊரில் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பெரும் பங்காற்றியிருந்தனர். இந்நடவடிக்கைக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்தவர் 1983 இன் முற்பகுதியில் இராணுவத்தில் நியமனம் பெற்ற “சுரேஸ் காசிம்“ என்பராகும்.
சுரேஸ் காசிம் பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டியது தேவையானதாகும். மலையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜாவா இனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமாவார் சுரேஸ் காசிம். 1983 இல் இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மொசாட்டின் நடவடிக்கைகளுடன் நேரடித் தொடர்பாளராக இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் மொசாட்டின் செயற்பாட்டில் இணைந்து செயற்பட்ட முக்கிய நபர் சுரேஸ் காசிம். விடுதலை இயக்கங்கள் அஞ்சிய ஒரு இராணுவ வீரர் என்றால் அது சுரேஸ் காசிம் தான். தேவைக்கேற்றாற் போல் உருமாற்றம் செய்து களப்பணிகளில் ஈடுபடக்கூடிய திறன் உள்ளவர். கிழக்கு மகாணத்திலே திருக்கோணமலை மாவட்டத்தில் தான் அதிக காலம் பணியாற்றினார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களை பயிற்றுவிப்தற்க
ாகவும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்துவதற்காகவும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் இருந்து ஆரம்பத்தில் (1983 ஆரம்பப் பகுதி) மூன்று பேர் மொசாட் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிண்ணியாவிலிருந்து பசீர், மூதூரிலிருந்து மனாஃப் மற்றும் இன்னொருவர்(உயிருடன் அவர் இருப்பதால் பெயர் தவிர்த்திருக்கி
றேன்) மொசாட்டின் பயிற்சி வழங்கப்பட்டது. மனாஃப் அவர்கள் மூதூரில் பெரும் செல்வந்தர். அத்தோடு ஈரோஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர். கைத்துப்பாக்கியினை முதன்முதலாக ஈரோஸ் இயக்கத்திற்கு மூதூரில் காண்பித்தவர் என்றால் அது மனாஃப் தான். மொசாட் ஆயுதப் பயிற்சியும் எவ்வாறு செயற்படுவது என்ற பயிற்சிகளுமே கொடுத்தார்கள். அரச அநுமதிப்பத்திரத்துடன் உத்தியோகபூர்வமாக கைத்துப்பாக்கியினை மனாஃப் வைத்திருந்தார். யாருக்குமே தெரியாது அவர் ஒரு உளவாளி என்று. அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்பதே மூதூரில் அவருக்கு இன்றுவரை இருக்கும் பெயர். ஈரோசின் செயற்பாட்டாளராக அப்போது இருந்த தவராசா எனும் தோடம்பழத்துடன் மனாஃப் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தார். ”அரசிடமிருந்து கைத்துப்பாக்கி அநுமதிப் பத்திரம் பெற்று வாங்கியிருக்கிறேன்” என தோடம்பழத்திடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்ததே அவர் செய்த மாபெரும் தவறாகும். இவ்விடயம் தலைமைக்கு அறிவிக்கப்பட அவர் மொசாட்டினால் பயிற்றுவிக்கப்ட்டவர் என்ற தகவல் பழத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. யாரையும் எழுந்தமானமாக சுட முடியாது என்பதால் அவரது செயற்பாடுகளை விளக்கி பள்ளித் தலைவர்களுக்கு பழத்தினால் உத்தியோகபூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு 14 நாட்களுக்குள் அவர் மூதூரை விட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை சுரேஸ் காசிமிடம் மனாஃப் கூறிய போது எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறி ஒருவாரகாலம் அவரது வீட்டிற்கு நிழல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அரச புலனாய்வாளர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்த எண்ணி பாதுகாப்பினை மீளப்பெற்றுக்கொ
ண்டார்கள். சில நாட்களில் தோடம்பழத்தினால் மனாஃப் சுட்டுக்கொல்லப்படடார். இக்கொலையானது மூதூரில் முஸ்லிம் மக்களிடையே பலத்த எதிர்வலைகளை எழுப்பி யிருந்தது. எனினும் சிலநாட்களில் சம்பூரைச் சேர்ந்த தோடம்பழம் என்றழைக்கப்படும் தவராசாவும் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த சோ என்றழைக்கப்பட்ட பாலச்சந்திரனும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனால் முஸ்லிம் மக்கள் ஆறுதலைடைந்தார்க
ள்.
கிண்ணியாவில் பசிர் என்பவர் தலைமையில் ஊர்காவல்படை அமைக்கப்பட்டது. புலிகளின் தளபதி குரு மற்றும் உதயன் கொல்லப்பட்ட பின் கிண்ணியா எரியூட்டப்பட்ட பின் பசீரின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக வேகமாக்கப்பட்டது.கிண்ணியா மருத்துவமனைக்கு பின் பகத்தில் குடியிருந்த தமிழ் மக்கள் மீது பல படுகொலைகள் பசீரினால் நடத்தப்பட்டன. அம்மக்கள் இடம்பெயர்ந்து பைசல்நகரில் குடியேறும் வரை படுகொலைக் தொடர்ந்தன. கிண்ணியாவின் துறையடியைச் சுற்றி மூன்று சைவக் கோயில்கள் இருந்தன. அம்மன் கோயில், ஊற்றடிப்பிள்ளையார் கோயில், அம்மன் கோயிலுக்கருகில் ஏ.எஸ்.எம் (ASM) என்ற அரசசார்பற்ற நிறுவனம் தற்போது இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த காணியில் இருந்த பிள்ளையார் கோயில்.
ASM அருகில் இருந்த பிள்ளையார் கோயில் தனியார் காணியில் இருந்தது. முஸ்லிம் ஒருவரால் ஒரு கோயில் எரிக்கப்பட்டதென்றால் அது கிண்ணியா பிள்ளையார் கோயில் மட்டும் தான். அது மொசாட்டினால் பயிற்சியளிக்கப்பட்ட பசீரால் ஆகும். கோயில்காணி பின்னர் உரிமையாளரால் முஸ்லிம் ஒருவருக்கு விற்கப்பட்டது.
தற்போது கிண்ணியா மருத்துவமனை இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காணியில் அப்போது இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போ இருந்தது. இந்த இடத்தில் தான் பலநூறு தமிழ் மக்களை பசீர் குழுவினர் கொன்றனர். அதனால் அங்கிருந்த 400 இற்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கிண்ணியாவிலிருந்து இடம்பெயர்ந்தனர். தமக்கு உரித்தான காணிகளை விற்றுவிட்டு நிரந்தரமாக வெளியேறினர். தமிழ்மக்கள் வாழ்ந்த இடத்தில் தான் கிண்ணியாவிற்கே ஆரம்பத்தில் கல்வி அறிவை வழங்கிய அமரர் காசிநாதரும் வாழ்ந்திருந்தார். இவ்வாறு தமிழ்பேசும் மக்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்தனர். பசீர் பின்னர் தமது தேவைகள் முடிவடைந்தபின் மூதூரில் வைத்து சுரேஸ் காசிமினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூதூரின் மூன்றாவது நபர் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
சுரேஸ் காசிம் தமிழ் விடுதலை இயங்கங்களுக்கு பெரும் தலையிடியை திருக்கோணமலையில் கொடுத்துக் கொண்டிருந்த இராணுவவீரர்.
கிண்ணியா மணலாற்றில் விடுதலைப் புலிகளதும் ஈரோஸினதும் முகாம்களை முற்றுகையிட தரையிறக்கப்பட்ட இராணுவ அணியை வழநடத்தியவர் சுரேஸ்காசிம் தான். தரையிறக்கத்தினை அறிந்த போராளிகள் இராணுவம் தாக்குவதற்கு முன்பாகவே இராணுவதினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த இராணுவம் சிதறி ஓடியே தப்பினர். சுரேஸ் காசிம் வந்திருந்தது பின்னரே தெரிய வந்தது. விடுதலைப் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் இணைந்து நடத்திய ஒரேயொரு தாக்குதல் அதுவாகும் இத்தாக்குதல் “சாவாறுத் தாக்குதல்“ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் தான் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக ஈரோசினால் எறிகணைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் இராணுவம் சாவடைந்ததுடன். பெரும்தொகை இராணுவ சுடுகலன்கள் மற்றும் தளபாடங்கள் போராளிகளால் கைப்பற்றப்பட்டன.
எவ்வளவோ முயற்சியெடுத்தும் சுரேஸ் காசிமை எதுவும் போராளிகளால் செய்ய முடியவில்லை.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் கொழும்பு தெஹிவளையில் மெல்பூட் வீதியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்ப்பட்டார். அவ்வேளையில் அவர் இராணுவத்தில் இருக்கவில்லை. பொதுமக்களிடம் கப்பம் பெற்றமை நிருபிக்கப்பட்ட
மையினால் சுரேஸ்காசிம் பணிநீக்கம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியிருந்தது.
கப்டன் மொஹமட் சுரேஸ் காசிம் தனது 41 வயதில் புலிகளால் உயிர் நீத்தார். சாகும் போது புறக்கோட்டை, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு தேடப்பட்டவராகவும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புள்ளவராகவும் பேசப்பட்டார்.

மண்மீட்பு புலிகள் இசுலாமியர் ஈரோஸ் படுகொலை உளவுத்துறை இஸ்ரேல்
Manikkam Elango
உடும்பன்குளப் படுகொலை
நான் அக்கரைப்பற்றில் வசித்தேன்
சிறுவனாக இருந்தபோதும் இன்னும் மனதைவிட்டு நீக்கமுடியாத சம்பவம்.
சூடு அடித்துக்கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டு சூட்டுக்களத்திலேயே எரியூட்டப்பட்டிருந்தனர்.பாதி கருகிய உடல்கள் மீட்கப்பட்டு சிப்பித்திடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இப்படுகொலையின் போது. களத்திற்கு வந்திருந்த அளிக்கம்பைக் குறவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்று தமிழ்க்கிராமங்க
ளெங்கும் அழுகுரல் ஊரே அல்லோலகல்லோலப்பட்டிருந்தது.
எனது உறவினர்களையும் இப்படுகொலையின்போது இழந்தோோோ

CargoNizar Cargo
வரலாறு கொஞ்சம் மூதூரில் தடுமாறி கிண்ணியாவில் நிலைகுலைந்து தம்பலகமத்தில் தடம்புரண்டு போகாமல் இருந்தால் சந்தோஷம் தயக்கம் தேவையில்லை . கொஞ்சம் வேகத்தை குறைத்து வரலாறு வண்டியை கட்டுப்பாட்டுக்
குள் எடுங்கள். இந்த வரலாறு காலங்களில் எங்கள் வாழக்கை பின்னிப் பிணையப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதாவது விபரம் விடுபடுமாயின் அழையுங்கள் ஆதாரம் தருகிறேன்.
இதில் கசப்பான உண்மைகளை கூறியே அடுத்த கட்டத்துக்கு போகவேண்டிய சூழ்நிலை. அது தவிர்க்க முடியாது.
காரணம் இப்போது இரு இனத்தின் நடுவே இருக்கும் சில மனக்கசப்பை அது அந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் தெளிவுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 1987 முதல் 1991வரை மிக நிதானமாக வரலாறு வண்டி நகர்த்த வேண்டும். தயங்காது எழுதுங்கள் சில உண்மைகள் கூறும் போது கசப்பாக இருக்கும். அதுதான் வரலாறு.

Farhan Musthafa
வரலாற்றை கொஞ்சம் சரிபாருங்கள். மனாப் என்பவர் சுடப்பட்ட ஆண்டு பிழையானது. மானப் சம்பந்தமாக எந்த ஒரு பள்ளிக்கும் கடிதம் வழங்கப்பட வில்லை, மனாப் சுடப்பட்ட காலத்தில் சுரேஷ் காசிம் என்ற ஒருவர் மூதூருக்கு அனுப்பப்படவும் இல்லை மூதூரில் எந்த ஒரு இராணுவ முகாமும் இல்லை, மனாபிடம் இருந்தது கை துப்பாக்கி அல்ல அரச அனுமதி பெற்ற சொட்கன் துப்பாக்கியே. புலிகளின் படுகொலைகளுக்கு நியாயம் தேடுவதை இட்டு சந்தோசம். மனாப் சுப்பட்டது ( 1983)

Saravana Pavan
Farhan Musthafa உங்களது கட்டுரைகளில் வசந்தன் மாஸ்டர், சித்திரவேல் அதிபர், பொறியியலாளர் ஐயா , ஜீவரெட்ணம் மனேஜர், ரவி மருந்துக்கலவையாளர், அந்தோணி வைத்தியருடன் சேர்ந்து கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டவர்கள் சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லையே...

அத்தோடு. தம்பலகமம் பகுதியில் சுடப்பட்ட. எனது நண்பர்கள் உருத்திரமூர்த்தி மோகன். கிட்னன்கட்டடி . சௌந்திரன். ஈஸ்வரி. படுகொலை போன்றோர் இன்னும் உள்வாங்கப்படவில்லை . இயக்கத்தில் போராடிய எனது பள்ளித்தோழன் கசன் முஸம்மில். மற்றும் எனது மாமா இடிமன் முள்ளாஅப்பா மகன் சின்னவன். எனது தாய் மாமன் பொற்கேணியில் சுடப்பட்ட நூறுமுகம்மட் (கம்மாளை) இப்படி பல தகவல் வருமென எதிர்பார்க்கிறேன். எனது பூர்வீக வாழ்க்கை முள்ளியடி சிவத்தபாலம் தம்பலகமம் என்பதால். வரலாற்று பாதையில் என்னூடக பயணிக்க வேண்டிய சூழல் நிலை உள்ளது.

Saravana Pavan எனது பதிவுகளில் தமிழின படுகொலைகள் என்ற புத்தகத்தில் எழுதப்படாத தமிழர்கள் பற்றிய பதிவாகும். தமிழர்கள் என்பது மொழியால் அறியப்பட வேண்டுமே தவிர அவர்கள் மதத்தால் அறியப்பட வேண்டியவர்கள் அல்லர். நீங்கள் கூறுபவர்கள் அனைவரும் அதில் இடம்பெற்றிருக்கிறார்கள். நான் எழுதும் எவரும் அதில் இல்லை. ஆகவே அழிக்கப்பட்டவர்களின் பெயர்களை தேடி எழுதுகிறேனே தவிர நீங்கள் கூறும் நபர்களை எழுதக் கூடாது என்றில்லை.

CargoNizar Cargo நான் மனாப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இதில் 100% பிழையான தகவலுடன் எழுதி புலிகளின் அப்பாவிகளின் படுகொலைக்கு நியாயக் கற்பிக்க முயற்சிக்கும் தொடராகும். மனாப் என்பவரது காலத்தில் இராணுவமோ இராணுவ முகாமோ மூதூரில் இருக்க வில்லை. இங்கு அவரை இன்னும் இரண்டு வருடம் வாழ வைத்து 1985ல் இரணுவம் இருந்தபோது சுடப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.

Jawhary Abdul Azeez
,,,,,அண்ணா,?,,,,அந்த மொசாட்டினதும் கைக்கூலிகளாக ஒரு சிலர் இருந்தனர், அப்போது ஈரோஸ் இயக்கத்தில் கிண்ணியா மூதூரைச்சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து தமிழீழத்துக்காக போராடினர் அவர்கள் யார் என்று உமக்கு தெரியுமா? அதில் ஒருவர் கிண்ணியாவைச்சேர
்ந்தவர், தற்போது அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியுரிமை பெற்று நிரந்தரமாக. வாழ்கிறார்,கொஞ்சநாள் அவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் இருந்தவர்,இப்போது வருடத்திற்கு ஒரு முறை கிண்ணியாவுக்கு வந்து போவார்,அத்துடன் LTTE, EROSE,EPDP, ENDLF போன்ற இயக்கங்களில் திருமலை நகர்,குச்சவெளி, புல்மோட்டை கிண்ணியா,மூதூ முள்ளிப்பொத்தானை ,கந்தளாய், ,தோப்பூர் பிரதேசங்களைச்சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்களும் இந்த தமிழர் போராட்ட இயக்கங்களில் இணைந்து தமிழ் ஈழத்துக்காகநபோராடினர் அந்த நீண்ட. முஸ்லீம் இளைஞர்கள் பட்டியல் உம்மிடம் இருக்குமென நினைக்கிறேன்,அவர்கள் தமிழீழப்போராட்டத்திற்கு செய்த தியாகம் பற்றியும் இந்த தொடரில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் தமிழர் பொராட்டத்துக்கு உரம் கொடுக்க வந்தவர்களை பிறகு தமிழ் இயக்கங்கள் துரோகிகளாகப்பார
ப்பதற்கு வழி கோழிய காரணங்கள் தான் என்ன? தமிழர், ,முஸ்லீம் உறவு தூரமாவதற்கு இந்த LTTE ,EROS,,ENDP,,EP
RLF,,EPDP,,,,போன்ற தமிழர் இயக்கங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வடக்கு மாகாணத்தில் செய்த வரலாற்று துரோகங்களையும் ்தொடராக எழுத முடியுமா? அல்லது நாம் எழுதவா???

Thiruchchelvam Kathiravelippillai
அவை பற்றியும் எழுதப்படும். இது யாரையும் குற்றம் சுமத்தும் நோக்கமல்ல, மொசாட் எவ்வாறு இனங்களை துண்டாடியது என்பதை அறிவதற்காகவே ஆரம்ப விடயங்களை எழுதுகிறேன்.
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 10
Hafees Naleem
Thiruchchelvam Kathiravelippillai சகோ எமது முஸ்லீம் உறவுகள் ஏராளமானவர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்தார்கள்.அது போல் உயிர் நீக்கப்பட்டார்கள்.நாடு கடந்தும் வாழ்கின்றார்கள்.(உயர் பதவி வகித்தவர்களை ) நம்பிக்கைத்துரோ
கிகளால்.ஏன் அவைகளையும் சுட்டிக்காடலாமே?உம்மிடம் அவ்வாறான அதிக பதிவுகள் இருக்குமே?

Koneswaran Saro
காலத்துக்குத் தேவையான பதிவு…. தொடர்ந்து எழுதுங்கள். நான் மறந்துபோன சம்பவங்களை மீள் நினைவூட்டுகிறது. கிண்ணியாவில் நடந்த தமிழர் இனச்சுத்திகரிப்புப் பற்றிப் பாதிக்கப்பட்டவர்களை நேரிற் சந்தித்து சரிநிகர் பத்திரிகையில் விவேகி என்ற பெயரில் முழுப்பக்கக் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தேன். உப்பாறு பிரதேசத்தில் இல்லாத முஸ்லிம்களை அங்கு வசித்ததாகக் காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் போட்டுக்கொடுத்த அப்போதைய பிரதேசச் செயலரின் கேடுகெட்ட செயலையும் விபரித்து மீள்குடியேற்றம் நடைபெறுமிடத்து உப்பாறைக் கபளீகரம் செய்யும் தந்திரத்தின் முதல்ஏற்பாடு இது என்றும் பிறிதொரு கட்டுரையில் வலியுறுத்தி இருந்தேன். தற்போது அக்கட்டுரைகள் கைவசம் இல்லை என்பதாற் கவலையடைகிறேன். உங்கள் பதி;வு வரலாற்றைத் திரும்பவும் கண்முன்னே கொண்டுவருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட தோடம்பழம் என்பவருடன் எனக்க நேரடிப் பழக்கமில்லை. ஆயினும் அவர்மேல் நிறைய மதிப்பு வைத்திருந்தேன். அந்நாட்களில் மூதூரில் பணிபுரிந்தேன். தோடம்பழத்தின் உடலை ஜீப்பின் பின்னால் பாதி வெளியே தெரிய காவல்துறையினர் ஊர்வலம் கொண்டு திரிந்த காட்சி இன்றும் நெஞ்சில் வேதனையுடன் நிழலாடுகிறது. நன்றி தம்பி.

சரிநிகர் பத்திரிகை இரட்டை வாராந்தரி. தேதியோ ஆண்டோ நினைவில் இல்லை. பலகட்டுரைகள் என்னிடம் இருக்கின்றன. சில அன்றைய சூழலில் அக்கறைக் குறைபாட்டால் தவறிப் போயின. ஆர்வத்துக்கு நன்றி. விவேகி என்ற பெயரில் அநேகமாக எல்லாச் சரிநிகர் இதழ்களிலும் எனது கட்டுரைகள் வெளிவந்தன. திரிபுரன் என்ற பெயரிலும் சற்றே சிக்கலான விடயங்களை எழுதியிருக்கிறேன். கையில் இருந்த கட்டுரைகளைப் போட்டோப் பிரதிசெய்து புத்தகமாகக் கட்டித் திருக்கோணமலைப் பொதுநூலகத்தில் பிற்காலத்தில் வரலாற்று மாணவருக்கு உதவக்கூடும் என்ற குறிப்புடன் ஒப்படைத்துமிருந்தேன். அவர்கள் இப்போது பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. கையில் இல்லாத கட்டுரைகள் கிடைக்குமாயின் மகிழ்ச்சியடைவேன்

அண்ணன் தோடம்பழ அண்ணனை சுட்ட செய்தி அன்று மாலை தீயாகப்பரவியது... இதுவும் ஒரு காட்டிக்கொடுப்பின் மூலமே நிகழ்ந்ததென நினைக்கிறேன்... அன்று முழுக்கிராமமுமே சோகத்தில் மூழ்கியது.. அதை விட வாகனத்தில் தோடம்பழம் வேண்டுமா என்று அவர்கள் உடலத்தினை கொண்டு சென்ற விதம் இன்னும் கவலையை உண்டு பண்ணியது...

Sounthararajan Muthucumar
1984 காலப்பகுதியில் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் மூதூர் பிரதேசத்துக்கு வந்தவர்கள் மூதூர் பிரதேசத்தில் 1985 கட்டபறிச்சான் கண்ணிவெடிதான் அவர்களின் முதலாவது தாக்குதல்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·

Ponnuthurai Satchivanandam
1985.09. 9,10>11>12>13 Muthur east 12 people murder by Mozad project that time Ltte.erose also in the field
Mohamed Sulthan Najeem
கிண்ணியா பசீரை சுரேஷ் காசிம் சுடக்காரரனம் என்ன வரலாற்றில் தவறு நடந்திருக்கலாம் அது முழு முஸ்லிம் சமூகத்தின் தவறாகக் கொள்ளப்படலாகாது
கிண்ணியா பசீரை சுரேஷ் காசிம் சுடக்காரரனம் என்ன வரலாற்றில் தவறு நடந்திருக்கலாம் அது முழு முஸ்லிம் சமூகத்தின் தவறாகக் கொள்ளப்படலாகாது
Thiruchchelvam Kathiravelippillai
அதுதான் உண்மை. நபர்களின் தவறான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகமாகக் கொள்ளப்படலாது, அதனை இரு சமூகமும் புரியாது நடந்து கொண்டமையே பிரிவுக்கு காரணம், விடுதலைப் புலிகளின் இரண்டாம் மட்ட தலைமைகளும் தவறிழைத்திருக்கின்றார்கள், அவை பற்றி பின்வரும் தொடர்களில் பார்ப்போம

ஊர்க்காவல் படையினர் முஸ்லீம் சோனகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக