திங்கள், 16 மார்ச், 2020

மருதிருவர் கோட்டை பராமரிப்பின்றி சீரழிகிறது

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 12:22
பெறுநர்: எனக்கு
#நாம்_தமிழர்_பிள்ளைகள்_கவனத்திற்கு....

இன்று, காலை முதல் நண்பகல் வரை
கவலையுடனும் கனத்த நெஞ்சுடனும்
சுற்றினேன்!

மாவீரர்கள் மருதிருவரின் சங்கரபதிக் கோட்டை!காரைக்குடி-தேவகோட்டை சாலையில்.

1700களில் கட்டப்பட்டது.
பராமரிப்பில்லை.
தமிழ் மறவர்கள் நினைவிடம் என்பதால்
திராவிட ஆட்சியரால் புறக்கணிக்கப்பட்டுக்
கேட்பாரற்றுக்க் கிடக்கிறது,

நம்மை அடிமைகொண்ட நாயக்கரின்
அரண்மனைகள் புத்துருவாக்கம்பெற்றுப்
பொலிவுடன் திகழக்காண்கிறோம்.

இந்தக் கோட்டையிலிருந்துதான் மருதிருவர் மற்றும் அறுநூறுபேர்
விலங்கிட்டுக் கைதுசெய்து தூக்கிலிடப்பட்டனர்.

இக்கோட்டை வீரமங்கை வேலுநாச்சியாருடையது.
வரலாறு பலகூறும் மாவீரர்
வாழ்விடம் இது.

மருது மாமன்னர் வெளியிட்ட
ஜம்புத்தீவுப்(இந்தியத் தீவு) பிரகடனத்திற்கு
இணையான வீர அறிக்கை போன்று இதுவரை
வேறெவரும் வெளியிட்டதில்லை.
--------------------------------------------------------------------
(1801இல் திருச்சி கோட்டையில்
ஒட்டப்பட்ட அந்த அறிக்கையின் சுருக்கம்)

"வெள்ளையர் நயவஞ்சகமாக நமது
மண்ணைக் கைப்பறிவிடனர்.

நம் மக்களை நாய்களைப்போல் நடத்துகின்றனர்.என்றாலும் நம் மக்களுக்கு உணர்வு வரவில்லை.

சாவு அனைவருக்கும் உண்டு.எனவே
மக்கள் அனைவரும் போர்க்கோலம்
பூண்டு அயலாரை அழிக்கவேண்டும்.

மாறாக அவர்களுக்குத்தொண்டூழியம்
செய்வோருக்கு மோட்சம் கிட்டாது.

மீசை வைத்துள்ள தமிழர்கள் அவர்களைக் கொன்றொழிக்கவேண்டும்.

இதை ஏற்காதவர்கள்
வைத்துள்ள மீசை என்
அடிமயிருக்குச் சமம்.

அவர்களுடைய பிள்ளைகள்,தங்கள் தங்கள் மனைவியை அயலானுக்குக் கூட்டிக்கொடுத்துப்
பெற்ற ஈனப்பிள்ளைகள்.

அயலாரின் பெயர்கள்கூட இம்மண்ணில்
எஞ்சியிருக்கக்கூடாது.அழிக்கவேண்டும்"
-------------------------------------------------------------------
இந்த அறிக்கை இன்றைய தமிழக அரசியல் அவலத்திற்கும் அப்படியே
பொருந்திப்போவதை,விதி என்பதா?
விபத்து என்பதா!?

இந்தக் கோட்டையைப்போல் தமிழகத்தையும் திராவிடம் சிதைத்துச்
சீரழித்ததை வெட்கமுடன் வெளிப்படுத்துவோம்.தலைகுனிவோம்.
அப்போதுதான் நிமிரமுடியும்!

பதிவு_ ஐயா பேராசிரியர்.தா.மணி அகமுடையார் தேவர் பாளையக்காரர் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக