|
செவ்., 21 ஆக., 2018, முற்பகல் 10:47
| |||
பூவுலகு
கேரளா வெள்ளத்திற்கான முக்கிய காரணங்களும்,அரசின் அலட்சியப் போக்கும்
மருத்துவர் வீ புகழேந்தி
இக்கட்டுரைக்கு முன்னர் கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்திற்கான காரணங்களையும் ,9 கேள்விகளையும் கேரளா அரசிடம் கேட்டிருந்தோம்.
சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்திகள் அரசின் அலட்சியப்போக்கையே சுட்டிக் காட்டுவதாக உள்ளத
1.... வெள்ளத்திற்கான மிக முக்கிய காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் சூழல் பாதுகாப்பு மிக்க இடங்களில் பின்பற்ற வேண்டிய உரிய பாதுகாப்பு விதி முறைகள் பின்பற்றப்படவில்லை உம் இடுக்கி மாவட்டத்தில் 15 தாலுக்காக்கள் மாதவ் காட்கில் குழு அறிக்கையின்படி பகுதி 1ல் இருந்தும் ,அங்கே கட்டடங்கள் எதுவும் இருக்க கூடாது என்பது விதியாக இருந்தும் அவை மீறப்பட்டுள்ளன
2.... கேரளாவில் மொத்தம் உள்ள 44 அணைகளில் 39 அணைகள் முழுவதும் நிரம்பி வழிந்த நிலையில் ,ஏறக்குறைய ஒரே நேரத்தில் 35 அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது ஏன் என முக்கிய கேள்வி எழுகிறது. அரசு விடையளிக்குமா?
3... மேலும் வளர்ச்சி என்ற பெயரில் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்பட்டதும்,
காடுகள், மலைகள் அழிக்கப்பட்டதும
் ,பாறைகள் உடைக்கப்பட்டு சுரண்டப்பட்டதும் ( QUARRYING) இவ்வெள்ளத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கேரளாவில் 1700 சட்ட விரோத கிரானைட் உடைப்பு நிலையங்கள் செயல்பட்டு வந்துள்ளன என்பது புள்ளி விபரமாக உள்ளது.
அரசு குடியிருப்பு பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளேயே இதை அனுமதித்தது எப்படி சரியாகும்?
4... இந்தியாவில் 30மாநிலங்கள் ,யூனியன் பிரதேசங்களில் பேரிடரின் போது செயல்படக்கூடிய 1100 பெயரை கொண்ட அரசு பேரிடர் நிவாரண உதவிக்குழுவை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் மட்டும் அது நடைமுறை படுத்தவில்லை.ஏன்?
ஆக உடனடி நிவாரணம் என்பது தேவையாக இருப்பினும் வெள்ளத்திற்கான காரணங்களை நீக்க கொள்கை ரீதியான முடிவுகளை விரைந்து எடுக்க அரசு முன் வருமா?
1 மணி நேரம் · பொது
சுற்றுச்சூழல் மலையாளி
எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக