திங்கள், 16 மார்ச், 2020

கேரளா இயற்கை அழிப்பு முன்பே எச்சரித்த சுற்றுச்சூழல் அறிஞர் அடுத்தது கோவா




aathi1956 <aathi1956@gmail.com>

செவ்., 21 ஆக., 2018, முற்பகல் 10:48





பெறுநர்: எனக்கு











அடுத்தது கோவாதான்! கேரள பேரழிவை முன்பே கணித்த சூழலியலாளர்
news18
Updated: August 19, 2018, 4:54 PM IST


கோப்புப்படம்
கேரளாவைப் போல் கோவாவும் மிகப் பெரிய பேரழிவைச் சந்திக்கும் என சூழலியலாளர் மாதவ் கட்கில் எச்சரித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் மாதவ் கட்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைக் குறித்து மேற்கொண்ட ஆய்வு பல திடுக்கிடும் தகவல்களை வெளிகொண்டு வந்தது. கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசிய மாதவ் கட்கில், ``மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவாவில், கேரளாவில் இருப்பது போல் உயரமான மலைகள் இல்லையென்றாலும், கோவாவும் கேரளாவைப் போல் இதேபோன்ற பேரழிவைச் சந்திக்கும் என நிச்சியமாக என்னால் கூற முடியும்” என்று தெரிவித்தார்.


சூழலியல் சார்ந்து எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் பெரும் லாபத்தின் மீதான பேராசைதான் எனவும் கட்கில் தெரிவித்தார். மத்திய அரசு அமைத்த நீதிபதி எம்.பி. ஷா கமிஷன் கோவாவில் ரூ.35,000 கோடிக்கு சட்டத்துக்கு புறம்பாக கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய மத்திய அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தை செயல்படாமல் பார்த்து கொள்வதிலேயே குறியாகவுள்ளது. கோவாவில் செயல்படும் கனிம வள நிறுவனங்கள் சமர்ப்பித்த ‘சூற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில்’ குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு புறம்பானது எனவும் கட்கில் தெரிவித்தார்.

கோவாவின் சமவெளிப் பகுதியில் நிறைய நீரோடைகள் உள்ளன. ஆனால், அதுகுறித்த எந்தப் பதிவும், 2011-ம் ஆண்டு கனிமவள நிறுவனங்கள் சமர்பித்த அறிக்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 2011-ம் ஆண்டு, கட்கில் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இப்போது பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவின் பல பகுதிகளைச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

First published: August 19, 2018
வெள்ளம் மலையாளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக