புதன், 7 பிப்ரவரி, 2018

வாளுக்குவேலி அம்பலக்காரர் சிவகங்கை ஆதரவு மருதுபாண்டியர் தூக்கு காப்பாற்ற வந்தார்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
பாரதி தமிழ்
சிவகங்கை நாட்டுக்கு ஆதரவாகவும் தன் நண்பர்களுக்கு ஆதரவாகவும் வெள்ளைய
இராணுவத்தோடு பெரும் சண்டையிட்டனர் பாகனேரி அம்பலகாரர்கள்.
சொந்த மண்ணையும் தலைவர்களையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்ய நாங்கள்
வியாபாரிகளல்ல வீரர்கள் பிழைத்து போ... என ஆங்கிலேயரை விரட்டியடித்தார்
வாளுக்குவேலி அம்பலம்.
ஆங்கிலேயர்கள் கனவில் கண்டால் கூட அச்சம் கொள்ளுவார்களாம், அப்படியொரு
தோற்றம் உடையவராம் வாளுக்குவேலி அம்பலம்.
தன் நண்பர்களை தூக்கிட்டு கொல்லப்போகிறார்கள். வீரர்களே நான் முன்னே
செல்கிறேன் என் பின்னே நீங்கள் வாருங்கள். செல்லும் வழியில் உள்ள அனைத்து
குடிமக்களையும் ஒன்று திரட்டி செல்லுவோம் தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு
திருப்பத்தூரில் பரங்கியர் பதறட்டும்..!
என கர்ஜித்து தன் நண்பர்களை காப்பாற்ற முன்னே சென்றார். பெரும் படை அவரை
பின் தொடர்ந்தது. குதிரையில் வேகமாக சென்ற அவர்.
கத்தபட்டு என்னும் இடத்தில் உறங்காபுலி வஞ்சகத்தால் குழியில் விழுந்து
மண்ணில் புதையுண்டார் படை நிலைகுலைந்தது. மண்ணை தோண்டிய படை
வாளுக்குவேலியை சடலமாக வெளியே எடுத்தது.
நண்பர்களுக்காக உயிர் நீர்த்த வாளுக்குவேலி அம்பலம் கத்தபட்டில் சிலையாக
அதே கம்பிரத்துடன்
நின்று கொண்டிருக்கிறார்.
அந்த மாவீரனுக்கு வீரவணக்க நாள் இன்று.
# நிவேதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக