வியாழன், 21 செப்டம்பர், 2017

மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை பட்டம் போட்டுக்கொண்டதில்லை வேளாளர் வெள்ளாளர்

நேற்று எனக்கு பயங்கரமான குழப்பம்.
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினது யாரு?. இந்த குழப்பத்துக்கு காரணம்
பிக்பாஸ் / முக நூல் காமெடி பதிவுகள் அல்ல. நெல்லை மாவட்ட த.மு.எ.ச
செயலாளர் இரா.நாறும்பூநாதன் அவர்கள் தான்!.
நான் அறிந்த / படித்த எந்த இடத்திலும், விக்கிபீடியா... வரை மனோன்மணியம்
சுந்தரம் "பிள்ளை" என்ற பெயர் இல்லை!.
(தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை
எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய
புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம்(லார்ட் லிட்டென் பிரபு என்பவர் எழுதிய
"ரகசிய வழி" எனும் நுாலின் மொழிபெயர்ப்பு) நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு
பகுதி இப்பாடலாகும்.)
ஊருக்கு பாடம் எடுக்கிற பலரும் இப்படி உள்ளுக்குள் சுய சாதி பெருமை
பீத்தலும் செய்கிறார்கள். என்ன தான் கொண்டையை மறைத்தாலும் அவ்வப்போது
மீசை முறுக்கி தங்கள் சுயத்தை காட்டி விடுகிறார்கள்.
பட்டாச்சாரியாக்களையும், யெச்சூரிகளையும், நம்பூதிரிகளையும்
ஏற்பவர்களுக்கு இது சாதாரணமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக