வியாழன், 21 செப்டம்பர், 2017

நகரத்தார் வீழ்ச்சி வடுகர் சதி கப்பல் தொழிற்சாலை வங்கி நாட்டுடைமை சாதி செட்டியார் ஆசாரி வணிகம் உப்பு

கார்த்திகேயன் ராஜு. இந்தப் புகைப்படம் எங்கள் கடல் வணிகத்தில் ஈழம்
சென்ற நகரத்தார்களின் புகைப்படங்கள். இதுபோல பர்மா, சைகோன், சாவகம்,
புட்பகம், வியட்நாம், லாவோஸ், அதற்கும் முந்தைய கடாரம் ( கிடா )
ஆகிய நாடுகளிலும் மேற்கில் அண்மைக் காலங்களில் மொரிசீயஸ் போன்ற
நாடுகளும், சங்க காலம் தொட்டு கடல் வணிகமும், உள்ளூர் வணிகத்தில் சிறு
வணிகர்களின் தொழிலை நாசியும் வகையில் அவர்களின் காய்கறி / விளைபொருள்
வணிகத்தில் ஈடுபட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கச் செய்தல் கூடாது.
கடல் வணிகம் போர்க்காலங்களில் தடைபட்டால் ஏரகம் எனப்படும் மாளிகைக் கடை
போன்ற வணிகம் செய்யலாம், உழவு என்பது நிலம் தங்களுக்கு முழு உடமையே
ஆனாலும் குடியானவர்களின் உழவடை பங்கு பகிரப்படவேண்டும்.
கொண்டி விற்றால், அதாவது பணத்தை வட்டிக்கு விடுதலும், கணக்கில் மிக
நுணுக்கமாய் வட்டியில் மட்டுமே சாப்பிட வேண்டும், முதலீட்டைக்
கரைத்துவிடக் கூடாது என்பதற்காக தங்களின் உணவருந்தும் பாத்திரத்தின்
பெயர் கூட வட்டி என்றே வைத்தனர். அசலுக்கு மோசம் என்றால் வயிற்றைக் கட்டு
என்பது தினசரி பேசிச்சு வழக்கு.
தற்போது தெலுங்கு எழுத்தாளர்களே எங்களை பற்றி அதிகம் எழுதி தமிழ்குடிகளை
நாடோடிகள் என்று கட்டம் காட்டுகின்றனர். கிடைக் காலத்தில் தனவைசிய என்ற
அடையாளத்தை வடுக அணுக்கத்தால் ஒட்டிக் கொண்டனர்.
தமிழர் இனக்குழு சாராதவர்கள் எங்களை பற்றி ஆயகிறேன் பேர்வழி என்று இருந்த
கொஞ்சம் நஞ்சம் அடையாள ஆவணங்களையும் அழித்தாகி விட்டது.
உப்புக்கு குறவரா ?? உப்புக்கு குரவரா ??
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கடல் வணிகம் செய்து, தரைவழி வணிகத்தில்
வணிகச் சாதுக்களையும், தணிக்க காவற்படைகளையும் கொண்டிருந்த எங்களின்
கடலாடிய பெருவழியில் உப்பு தவிர்க்கமுடியாத வாழ்வியல் சான்று. அதாவது
ஈழத்தில் ரத்தினைப் படிவங்களை முதன் முதலில் எடுத்து கடல்வழி வணிகத்தில்
பற்பல நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
கடலாடிய ஒரு பெறுவணிகக் குடி, கரையோரம் விடுத்து உள்ளே குடிபெயரும் போது
தங்களின் வாழ்வியல் அடையாளமாக, சடங்குகள், செயல்பாடுகள் ஆகிய வற்றில்
உப்பு முதன்மை மங்களபொருளாகக் கொண்டனர். உப்பும் - அப்பும் இரண்டராக்
கலக்கும் தனமாய் கொண்டது. உப்பினைக் கொண்ட அப்பினில் தங்கள் வாழ்க்கை
நெடிது வளர்ந்து வந்ததால் உப்பு சடங்கு சார்ந்த மங்கள பொருள். இதனை
மடைமாற்றம் செய்வதே ஒரு சில வடுக-வெள்ளையர் கூட்டிணைவு.
இன்றளவும் எங்கள் பாட்டனார் துளசிபாகை, காவத்தை போன்ற இடங்களுக்கு வணிகம்
செய்யப் போகும் போது தமிழ்ப் பெருந்தச்சகர்கள் உடனும், காவலுக்கு, தொழில்
நிமித்த வேலைகளுக்கு எங்கள் காலங்களில் வந்தார்கள். பெருந்தச்சர்களின்
முதன்மைப் பணி மரம் - கற்படிவங்களை சரிபார்த்தல், அதனை வார்க்கவும்,
வடிக்கவும் அவர்களின் முதல் முறை முயற்சிகள் தொடங்குதல்.
தொழில் ஈட்டு வருவாயில் முதலில் குலதெய்வங்களும் ( ஊரில் உள்ள
காவல்தெய்வங்கள் ) ஏரகத்து முருகன் என்றும் செட்டி முருகன் என்றும்
நகரத்தார்கள் பெருமைகொள்ளும் தண்டாயுதபாணிக்கே முதற் கோவிலும், வழிபாடும்
நடக்கும். செட்டிக் கப்பலில் செந்தூரன் துணை வருவதாகவே எங்கள் ஐய்யாக்கள்
உடன் அழைத்துச் செல்வர்.
ஊரில் விட்டுச் சென்ற பெண்டு பிள்ளைகளுக்கு கருப்பர், அய்யனார்,
பொய்சொல்லா மெய்யர், சோணையன், சங்கிலிக்கு கருப்பர், வாசனைக்கு கருப்பர்
ஆகியோர் என்றும் துணையிருப்பர். வீட்டின் ஆச்சிமார்கள் கூப்பிட்ட
குரலுக்கு ஏவலனாய் வந்து நிற்க காவல் தெய்வங்கள் காத்திருக்கும்.
ஐயனாரும் / கருப்பரும் / சோணையன் / பொன்னன் தெய்வங்களும் வெட்டவெளியில்
நின்று, நகரத்தார்கள் வாழ்வாங்கு வாழ அவர்கள் நாட்டிலே கோட்டை கட்டி
வாழ்ந்த காலங்கள் தமிழர் இனக்குழுக்களுடன் இணைந்து வாழ்ந்த காலங்களே.
இன்று யார் எங்களுடன் உள்ளனர், யாருடன் எங்கள் நகரத்தார்கள் உள்ளனர்
என்பதே அவர்களுக்குத் தெரியாத வகையில் இந்தீயம், நடுக்கம் இரண்டும்
கைகோர்த்து நகரத்தார்கள் புலம் பெயர் கட்டமைப்பை ஓடித்தனர். முதலீடுகளை
முடக்கினார்.
காரணம், பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்னர் நகரத்தார்கள் அந்நியர்
ஆட்சிகாலங்களில் தமிழ்ப் பெருந்தச்சர்களை தங்களுடன் சேர்த்து, கோவில்கள்
புனரமைத்தல், தமிழர் பண்பாட்டின் எச்சங்களை ஆன்மீகம் என்ற போர்வையில்
மார்ச் சிற்பம், கற்சிற்பம், கோவில் என்று தொடர்ச்சியாக தமிழர்
பண்பாட்டைப் பாதுகாக்க பல வழி முறைகளைக் கையாண்டனர்.
வடுகர்கள் கணிப்பு, நகரத்தார்களை ஒதுக்கினால், எஞ்சிய தமிழக குடிகளை
எளிதில் அழிக்கலாம். தலையற்ற - பொருளாதார பின்புலமற்ற இனமாக வீழும் என்று
திட்டமிட்டு கட்டுடைத்தனர். காரணம்,
நகரத்தார்கள் கைகளில் பணம் இருந்தால், தமிழிசை கொட்டி முழக்குகின்றனர்,
தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடுகின்றனர், இசைக்க கல்லூரி, பல்கலைக்
கழகம் / ஆரம்பப் பள்ளிகள், ஊர் தோறும் ஊரணி ( நகரத்தார்கள் சிறு வணிகள்
கடன் கொடுக்கும் வட்டிக்கு கடை வைத்த இடங்களில் எல்லாம் தங்களின் ஈட்டு
வருவாயில் ஒரு பகுதி குளம் தொட்டு வலம் பெருக்குவதே ), என்று மனித
குலத்திற்கு விரோதமான செயல்களையே செயகின்றனர், இவர்களை ஒழித்தால் நாடும்,
மக்களும் நலம் பெறுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் நடுவண் நேரு அரசும்,
ராமசாமி நாயுடுவின் கருஞ்சட்டைக் கூட்டமும் அவிழ்த்த முடிச்சுகளே இன்று
நகரத்தார்கள் கடந்த என்பது ஆண்டுகளாய் இடம் தெரியாமல் துடை
எறியப்பட்டுள்ள நிலை.
பிரிட்டிக் இந்தியாவில் ஏற்படுத்திய வங்கிகளில் மிக அதிகமாய் சர்வதேசக்
கிளைகளை அதிகம் கொண்டிருந்தது நகரத்தார்கள் உருவாக்கிய வங்கிகளே.
இவற்றையும் நாட்டுடைமையாக்க
ினார்.
முதலாம் உலகப்போரில் இந்துமாக் கடலில் நகரத்தார்களின் சொந்தக் கப்பல்கள்
மிக அதிகமாய் மிதந்தது. நேரு அதனை 1956 ல், நாட்டுடைமையாக்கினார் -
காரணம் வடவரின் முத்ரா ஊழல் என்று சாக்கினை வைத்து கபளீகரம் செய்தனர்.
தமிழகத்திலும் நூற்பாலைகள் பலவற்றை வைத்திருந்த நகரத்தார்கள், கம்யூனிசம்
என்ற வடுக மாபியாக்களின் தூண்டுதலால் அனைத்தையும் நாயர்களிடமும்,
நாயுடுகளிடமும் கையளிக்குப்படி வடுக்கப் போராட்டம் நடத்தி அழித்தனர்.
மாறிவிட்ட அரசியல் சூழலில் யார் தமிழர், யார் தமிழர் அல்லாதவர் என்ற
தெளிவின்மை, யார் யாருக்கு எதிரி, உறவு என்ற நம்பிக்கையின்மையும் தமிழர்
குடிகள் அழிந்து படக் காரணமாயின.
--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசி விசுவநாதன். 18-07-2016.
18 ஜூலை 2016 ·

Ajith Kumar
ஈழத்து தமிழில் மலையாள சொல்லாதிக்கம் இருப்பினும் இது வரையும் தமிழைக்
கெடாமல் பாதுகாக்கும் உப்பு நகரத்தார் வழக்கு எனலாம்.இது மிக உண்மை.100
வீதமான ஈழத்தமிழிலும் நகரத்தார் சொல்லாதிக்கம் அதிகம்.அப்படி எனில் இந்த
சமூகம் ஈழத்திலும் தன் செல்வாக்கைக் கொண்டிருந்திருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக