முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று
நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய்
பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது
காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு
தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான்
கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை
புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள
வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து.
என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள்
சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என
நம்புகிறேன்.
ஜனவரி 29 வியாழக் கிழமை
நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு
”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம்
மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.
கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார்
என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர்
எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு
40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன்,
திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்)
ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ்
தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று
மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன்
முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என
மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).
அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது
அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத்
தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும்
என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர்
பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும்
என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.
அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க்
ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து
கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு
ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார்.
தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி
ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க
கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின்
தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ்
ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.
மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம்
ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி
இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர்
கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில்
போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று
முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய்
இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம்
வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள்
ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம்
அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல்
செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும்
மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள்
கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று
விட்டிருந்தார்கள்)
ஈகா திரையரங்க சிக்னலில் இருந்து சிறிய சந்திற்குள் நுழைந்த பின்
தலைவர்கள் தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ள வேகமாய் ஊர்வலத்தை நகர விடாமல்
நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து
கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ
ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின்
தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40
கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற
அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என
எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான
வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான
பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து
கொள்ளவில்லை.
மாலை 6 மணியளவில் கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்கு அருகில் இருந்த
சாலையில் முத்துக்குமாரனின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த
வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி
அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள்
கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே
நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக
திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக்
கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி)
மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம்
அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த
முடிவைக்கூறினார்.
நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.
”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.
2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி
இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப்
பாதுகாக்க வேண்டும்.
3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல்
சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம்
குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.
4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல
வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு
எழுச்சியை ஏற்படுத்த முடியும்.
திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக்
கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை
தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய்
இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார்.
இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால்
கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம்
அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார்.
மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச்
சென்றார்கள்.
நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன்.
இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல்
கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை
உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.
முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு
விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம்.
தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.
ஜனவரி 30
வெள்ளிக் கிழமை
மெல்ல அந்த இரவு விடிந்தது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி,
தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
புரட்சிகர இளைஞர் முன்னணி
பெரியார் தி.க
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)
புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம்
போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர
வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த
வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம்
கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள்.
குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது
காலை 9 மணி.
ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச்
சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர்
சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக
இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக்
கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள்
முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை
மேற்கொண்டனர்.
”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால்
இன்றே தகனம் செய்ய வேண்டும்” – திரு.பழ.நெடுமாறன்.
திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு
செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது,
எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு
பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.
திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.
“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே
இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ்
”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு
வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட – திரு.திருமாவளவன்.
திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால்
இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக
முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”,
தலைவர்களை.
இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப்
போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார். திரு.திருமாவளவன்
தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை
பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி
அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை
அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக
வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம்
கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன்.
மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன்.
அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது.
தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும்
மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும்
பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர். பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு
பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை.
திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த
இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று
கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம்
தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது
என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம்
இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன்.
வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே
கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ
பேச முயற்சி செய்தார்.
”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள்
ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.
”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி
விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச்
சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ
கூட்டத்திற்கு முன் வாசித்தார்.
மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.
மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க
வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர்
வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை
முழுவதும் அடங்காத கூட்டம்.
கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ
முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க)
வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க
அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி
செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான்
செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.
முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல்
கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.
தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார்
நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல்
கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய்
மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.
வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை
முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள்
மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன்
மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.
ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர்
அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து
ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.
இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை
எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல்
ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து
முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன்
இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ
வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார்,
தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி
உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய
வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள்.
.
ஜனவரி 31
சனிக்கிழமை
மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது.
கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன்
வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று
கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக்
கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை.
குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள்.
திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள்
இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின்
பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.
நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில்
பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா,
சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம்
என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த
அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக்
கொண்டே இருந்தார்கள். இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார்.
முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக்
கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக்
கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக்
கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான்
ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார்.
மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.
3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார்.
அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது,
வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த
வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல்
ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின்
மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.
3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார்.
ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே
எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி,
புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக
மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி.
காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப்
போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி
30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார்.
அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை
செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம்
முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர்
தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய்
சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற
பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.
ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற
அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர்
முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில்
அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம்
கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம்
என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய
சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம்
விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து
இறங்கினார்.
அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின்
இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர
திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில்
நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும்
தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது.
அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால்
மூடப்பட்டிருந்தன.
பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன்
ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச்
சாலைக்குத்திருப்பினார்.
முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின்
வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும்
அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம்
வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை
தடுத்தார்கள்.
மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர்
சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து
இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில்
மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள்.
இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார்,
புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி
செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன்
என்றார்.
நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது
குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என
அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச்
சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம்
ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது.
சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல்
துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை
தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத
ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச்
சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.
அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம்
ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு
வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு
M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக்
கடந்தார்.
அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன
காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ” புரசைவாக்கத்தில்
இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது. புரசைவாக்கம்
எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை
என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார். அவரின் சகோதரர்
புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற
மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே”
என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர்
சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள்
அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த
திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை
தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச்
சொன்னார்.
எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும்
அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி
இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில்
சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த
பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல்
செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள்
தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள்.
இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி
மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய்
முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால்
வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர்
சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல்
செய்து கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற
விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக
எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர
இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம்
விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச்
செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும்
என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள்
திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது.
வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை
இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.
நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில்
அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ.
நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ
அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த
ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர
உரையாற்றினார்கள்.
முத்துக்குமார் மன்னித்துவிடு.. சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப்
போனோம் !! : வெண்மணி
Share this:
74 THOUGHTS ON “முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் :
இயக்குனர் ராம்”
03/19/2010 AT 18:20
இதை எழுதுவதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதா? இப்போது தெரிகின்றது யார்
இலங்கைத் தமிழரை கொத்துக் கொத்தாக கொலை செய்ய உடந்தையாக
இருந்திருக்கிறார்கள் என. தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் மாத்திரமில்லை
பிணத்தை வைத்தும் பிழைப்பு நடத்துவார்கள் என்பது இப்போது எமக்குத்
தெரிகிறது. என்னே கேடுகெட்ட ஜென்மம் இந்த துரோகக்க் கும்பல்! இவங்களை
நம்பி தமிழன் போராட வெளிக்கிட்டானே வெட்கம் வெட்கம்.
03/22/2010 AT 06:23
இயக்குனர் ராம் காலம் கடந்து எழுதியுள்ளதாகவும் சந்தர்ப்பவாதி என்றும்
சூர்யா போன்ற இணையதள கட்டுரையாளர்கள் புலம்பலாம்.. பல கூட்டங்களில் இதை
சொல்லியுள்ளார்.. திருப்பூர் பதியம் சிற்றிதழ் இதை செய்தியாக பதிவு
செய்துள்ளது.. கருணாநிதி சோனியா கும்பலுக்கு பல்லக்கு தூக்கும் ஊடகங்கள்
இதை பதிவு செய்ய முன்வரவில்லை… முத்துக்குமரன் மரணத்தைக்கூட
கொச்சைப்படுத்த செய்தன இதை சூர்யா போன்றோர் உணர வேண்டும்.. இன்றும்
கூட ஈழத் தமிழர் ஆதரவு தோழர்கள் ஆங்காங்கே கருங்காலி கருணாநிதியின்
காவல்துறையால் பொய் வழக்குகளால் பந்தாடப் படுகின்றனர். நொ
03/22/2010 AT 11:02
இங்கு கருத்து எழுதிய பலர் நான் கேட்டதைத்தான் கேட்டுள்ளார்கள். நீங்கள்
கூடப் படித்ததினால் என்னைப் போன்றோருக்கு திரு ராம் அவர்களால் ஏற்கனேவே
பதியப்பட்டுள்ளது என முன்பே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவ்வளவு முக்கிய
விடயம் தான் சொல்லியும் பலருக்குத் தெரியாமல் போகப் போகுதே என்று திரு
ராம் எதற்காக முயற்சி எடுத்து உலகம் பூராகவும் தெரியப் பண்ணவில்லை.
இதனால்தான் இதைப் பிந்திப் பதிவு செய்துள்ளார் என்று கேட்டேன். ஏமாறும்
தமிழர்கள் மேலும் ஏமாறாமல் இருக்க.
03/24/2010 AT 06:54
ராம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலராக மட்டுமே கருதுபவர்.. கருணாநிதி..
கனிமொழி..திருமா..கஸ்பர்..நக் கீரன்..போல சுயநல வாதியல்ல…
ராமதாஸ்,வைகோ, போல் நிறம் மாறும் அரசியல் வாதியல்ல.. ஜெ போல சந்தர்ப்ப
வாதியுமல்ல… உண்மையின் உரைகல்-நேர்மையான நாளிதழ்-நடுநிலை நாளிதழ்.. என்று
சொல்லிக்கொண்டுள்ள தமிழ் நாளிதழ்கள் முத்துக்குமரன் இறுதி ஊர்வல
விசயத்தை மூடிமறைக்க.. முடிந்தளவு மேடைகளில் பேசிய ராம் இப்போது பதிவு
செய்துள்ளார்.. தமிழர்களே ஓட்டுப் பொறுக்கிகளையும்.. துரோகிகளையும்
இனியாவது இனம் கண்டு ஒதுக்குங்கள்
03/19/2010 AT 18:45
திருமாவளவன் வை.கோ எல்லாம் இவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதிகளா? உண்மையில்
அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தக் கயவர்கள் எல்லாம் புலம் பெயர்
நாடுகளுக்கு வந்த்தால் இனி செருப்பால் அடிக்கவேண்டும்!!
03/19/2010 AT 23:40
சந்தர்ப்பவாதிகளா? சந்தர்ப்பவாதிகலேதான்.சிவாஜி படத்து வசனம் மாதிரி பேசி
விட்டு அடுத்த காட்சிக்கு ஒத்திகை பார்ப்பவர்கள்.இதில் வைகோ லண்டனில்
தெலுங்கு மட்டும்தான் பேசுவார்,சீனிவாசன் நாயுடு வீட்டில் அவரது வேற்றூ
மொழி என்னை அதிசயிக்க வைத்தபோது சீனிவாசன் சொன்னார் அவர் தெலுங்கு
பேசுகிரார் என்றூ.
07/03/2013 AT 23:29
It’s true …
03/19/2010 AT 19:51
காலம் கடந்தாவது உண்மையை வெளிக்கொணர்ந்த ராமுக்கு நன்றிகள். இப்படிப்பட்ட
துரோகிகளை நம்பிக்கொண்டு இருக்கும் ஈழ மக்களை குறிப்பாக புலம் பெயர்
தமிழர்களை செருப்பால் மட்டுமல்ல துடைப்பத்தாலும் அடிக்க வேணும். இனியாவது
திருந்துவார்களா பாப்போம்.
03/19/2010 AT 21:42
நன்றி ராம். இந்த உண்மைகள் காலம் கடந்தாலும் வெளிவந்ததே என்று சந்தோசப்
படுகிறேன் இந்திய தலைவர்களின் வீராவேசப்பேச்சை கேட்டு
மயங்கி இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நன்றாகவே இவர்கள் வேசம்
தெரிந்துகொ்ள உங்கள் இந்தப்பணியை நான் பராட்டுகிறேன் நன்றி சொல்கிறேன்
உங்கள் துணிவான பணிக்கு எனது வாழ்த்துக்கள்
பொன்னண்ணா டென்மார்க்
03/19/2010 AT 21:01
சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது..
இது புலிகளுக்கு மட்டும் இல்லை..இந்த கூட்டத்துக்கும் தான்…
03/19/2010 AT 22:35
அண்ணாக்கள் தம்பிக்கள் கூட முத்துக்குமாரன் இறக்கும் வரை
கொத்து,கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டும் பேசா மடந்தைகளாகவே
இருந்தார்கள்.முத்துக்குமார் மரணமே புலம்பெயர் மண்ணீலும் புயலைக்
கிளப்பியது.தமிழக அரசியல் வாதிகளீல் சிலர் தமது நலனிற்காக அப்பாவிகளீண்
உயிரை தீக்குளீப்பு பெயரில் எடுப்பவர்கள் இதில் அதிசயித்து நிற்க
எதுவுமில்லை ஆனால் உண்மைகலை அறீதல் தொடர்ந்தும் உண்ர்ச்சி வசப்பட்டு
ஏமாறாதிருக்க நம்மவர்க்கு உதவும்.
03/20/2010 AT 03:05
திருமாவிடம் ரியல் எஸ்டேட் முதலீடுகள், வை.கோ விடம் வங்கிப் பணம்,
நெடுமாறனிடம் அச்சகம், சீமனிடம் சினிமுதலீடுகள் என்று புலிகளின் பணத்தை
அதாவது ஈழத் தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சவே இந்த அரசியல் முதலைகள் ஈழ
தேசியம் பேசுகின்றன.
03/20/2010 AT 07:35
/3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார்.
அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது,
வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த
வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல்
ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின்
மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது./– இந்த
அராஜகத்தின் பின்னால்,”கனடிய தமிழ்க் காங்கிரஸின்”
ஆதரவும்,திட்டங்களும்,”அரசு சார்பற்ற நிறுவன நிதி பாய்ச்சுதலும்” உள்ளன!.
03/20/2010 AT 08:46
திருமாவளவன் கருணாநிதியின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்குபவன்.
ஈழத்துக்கும் சென்று தனது கொச்சைத்தனமான அரசியல்நாடகத்தை ஆடியவன்.
மகிந்தவின் செல்லப்பிள்ளை. கருணா புலியில் இருந்தும் விலகியும்
தமிழாகளைக் கொன்றான். திருமாவளவன்போன்றவர்கள் புலி
ஆமரவுக்கோசம்போட்டுக் கொண்டு தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு துணை
போபவர்கள். பதவியும் பணமுமே அவர்களின்நோக்கம்.
03/20/2010 AT 14:54
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றூ யார் மீதும் நாம் குற்றப்பத்திரிகை வாசித்து
விடமுடியாது கலைஜரை போன்ற தமிழ் உணர்வாளரை பெற்றது நம் பாக்கியம் அவரும்
இந்தியக் குடிமகன் என்ற எல்லையில் நின்றூ தாண்ட முடியாத தமிழனாய்
அவஸ்தைப்படுகிறார் தல முடின்சது அவருக்கு ஆறாத கவலையே,தல யும் பிழைக்கு
மேல பிழையாய் விட்டு ஊர், உலகத்தை பகைச்சுப்போட்டுது.ஊரே பகையானாதால்
ஒளீக்க இடமில்லாமல் போட்டுது கலைஜர் என்னதான் செய்வார்?
03/21/2010 AT 03:46
தமிழ் மாரன்,
னீங்கல் என்ன பிராமண ஒழிப்பே குறிக்கோள், மற்றபடி தமிழன்
காட்டுமிரான்டி, செத்தால்தான் என்ன என்றுநினைப்பவரா?
http://www.youtube.com/watch? v=zxa2d2QqDus பார்த்துக்கொள்ளுஙல் உங்கல்
கலைஞரின் மகள் போடும் வெஷம்.
03/21/2010 AT 15:55
புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் காசை அடித்து பெட்டிக்கடை போட்டு மாவீரர்
நாளீல் கொத்து ரொட்டி வித்ததை தவிர என்னத்தை செய்தார்கள்,வணங்கா மண் என
வசூலித்தார்கலே என்னாயிற்றூ? தமிழ் உணர்வை தமது சுய நலங்களூக்காக
உபயோகித்து தாயகத்தில் தமிழரைக் கொல்ல காரணீயாய் இருந்த புலிப்
புரோக்கர்கலை பிடித்து இழுத்துக் கேளூங்கள்.காசு இருக்கிறவன் எல்லாம்
தலைவனாகி,அரசியல் தெரியாதவன் எல்லாம் அரசியல் வாதி ஆனது தமிழன் தலைவிதி.
03/21/2010 AT 20:17
ஒரு காரணம் சொல்ல முடியுமா? ஏன் தமிழ்நாட்டு முதன் மந்திரி தனது
படாளத்தை இலங்கைக்கு அனுப்பியவர். இவர் என்ன முதன் மந்திரியா அல்லது
மத்திய அரசின் எடுபிடியா?
தமிழரைக்கொண்டவனை பொன்னாடை போர்திக் கொண்டாடிய பன்னாடைகள். தன்னுடைய
தாதா மக்கு மகனுக்கு மந்திரி பதவி இல்லை எனில், மத்திய அரசுடன் கூட்டு
இல்லை என சொல்ல முடியும். ஆனால் ஈழதமிழர் இன அழிப்பு நிறுத்தாவிடில்
மத்திய அரசின் கூட்டு இல்லை என்று சொல்லமுடியாதா? என்ன வக்காலத்தா???
பண்டிக்கூட்டங்களா.
03/24/2010 AT 03:13
தமிழ் மாரா, யார புலம்பெயர்ந்தது? புலிகளா? இல்லை..புலம்பெயர்ந்த
தெலுஙுகு நாவிதன் கருனானிதி, திருத்த வேன்டியவன் , வரலாரையே
திருத்திவிட்டானே? இதுதான் புறனானூற்று வீரமா?
03/24/2010 AT 08:59
ஊர், உலகத்தை பகைச்சுப்போட்டுது.ஊரே பகையானாதால் ஒளீக்க இடமில்லாமல்
போட்டுது கலைஜர் என்னதான் செய்வார்.
சரியான வார்தைகள்
03/28/2010 AT 03:25
என்ன சொல்றெள்? ஏன் கனிமொழி அந்த ராஜபக்சே கிட்ட சிரிச்சு வழியறா? சொல்லுங்கொ?
03/29/2010 AT 13:59
இதுக்கு அர்த்தம் கஸ்பர் அடிகளிடம் தான் கேட்கவேண்டும்.
03/21/2010 AT 00:38
திருமாவளவன்,வை.கோ ,நெடுமாறன்,ராமதாஸ்,சுப.வீ பற்றி ஐரோப்பா புலிகள் இனி
என்ன சொல்லபோகிறார்கள் ?
03/21/2010 AT 03:06
Very much thanks to Director Ram. His witness will make history in
Tamil nadu.Everybody who with MUTHUKUMAR must write their witness
03/21/2010 AT 04:40
யாரைதான் நம்பவதோ
03/21/2010 AT 04:55
வணக்கம்,
இயக்குனர் இராம் அவர்கள் அற்புதமான ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறார்.
திருமா போன்ற அரசியல் சக்திகள்,
அவ்வீரனின் இறப்பில், தன் சுயலாபத்தை நாடியே பங்கேற்றன என்பது நிதர்சனமான உண்மை.
கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் தீக்குளித்தனர்.
கடலூரில் இக்காட்சியை கண்டேன்.
அதற்காக இம் மாவீரர்களின் தியாகத்தை கொச்சப்படுத்துவது
என் நோக்கம் அல்ல…..
உண்மையை யாவரும் அறிய வேண்டும் என்பதே,,,,,,,,,,,,,
‘ ஈழமின்றி இறப்பதில்லை ‘
03/21/2010 AT 08:34
தனி மனிதக் குறிப்பீடும்,கோபங்களும் இல்லாமல் உரிமைக்காக தோள்
கொடுப்பதில் தமிழகம் தவறி விட்டதென்ற வரலாற்றுப் பிழையை இனி நிமிர்த்த
முடியாது.பூகோளம்,மொழியென்ற இரு நிரந்தர ஆயுதங்கள் இருக்கின்றன..கூடவே
பிரித்தாளும் சூழ்ச்சியில் பிரிந்து செயல்படும் ஈழ மக்கள்,புலம் பெயர்
மக்கள் எதிர்காலத்தை எப்படி நிர்ணயிக்க இயலும் என்ற
விரக்தியிலும்,நம்பிக்கையிலும் ஒளிந்து கிடக்கின்றது ஈழம் என்ற
கனவும்,இலங்கை என்ற கூட்டுக்குள் சமரசங்களோடு இயங்குவதும்.
03/21/2010 AT 12:45
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. என்று அதே
முத்துக்குமரன் எழுதிய வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தது.. இந்தப்
பதிவைப் படித்து முடித்த போது.!
ஏன் இப்பொழுது இதை பதிவு செய்தீர்கள் என்று விளக்குவீர்களா?
03/21/2010 AT 13:58
ஏன் இப்பொழுதாவது இதைப் பதிவுசெய்யக் கூடாது என்று விளக்குவீர்களா?
03/22/2010 AT 06:01
இப்பொழுதாவது சொன்னாரே இல்லையேல் அங்கு நடந்த அவலங்கள் எதுவும்
தெரியாமலே போயிருக்குமே. இவனுங்களை நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இது
ஒரு விழிப்புட்டும் செயல்தானே. ராமின் தைரியம் என்று சொல்வதைவிட இந்த
பொருப்பான செயலுக்கு பாராட்டுவோம்.
03/21/2010 AT 14:08
nandri,
ONCE AGAIN THANKS MR. RAM.(YOUR ALREADY MENTION IN COIMBATORE SPEECH)
LEADERS VIEWS AND THOUGHTS NOT GROW UPON THIS ELECTION POLITICS.
THIRU.VAIKO AND THIRU.NEDUMARAN IS DOING LOT FOR EELAM TAMIL.
BUT THEY CAN’T IMAGINE REVOLUTE ACTION IN THE LAND OF TAMIL NADU.
IN THAT MR.MUTHUKUMAR SITUTATION THERE WAS LOT OF CHANCES WAS THERE
BUT THEY DON’T
HAVE PRACTICE FOR THAT SITUTATION. IF ITS HAPPEND IN KASHMIR THAT
LEADERS IS DONE LOT OF THINKS.
BECAUSE OF PRACTICING. I DON’T KNOW ABOUT OTHERS LEADER. BUT ABOVE TWO LEADERS
DON’T HAVE ANY PREJUDICE CONCLUSION. IN FUTURE WE WILL GROW TO ADOPT
ANY SITUATION.
WE ALREADY KNOW ABOUT MR. SUBAVEE(THUTHEE PAADE).
03/22/2010 AT 11:09
உண்மைதான், இவர்கள் ஒன்றுமே தெரியாத பால்குடி குழந்தைகள். நம்பிக்கைத்
துரோகம் நடந்துள்ளது. போட்ட திட்டம் எங்கே குழம்பிவிடுமோ எனப்
பயந்தமாதிரி இவர்களின் நடபடிக்கைகள் இருந்திருக்கிறது.
03/21/2010 AT 15:34
சும்மா வந்து இணயத்தில் இப்பதான் விள்ங்கினதுமாதிரி விடாதையுங்கோ,புலம்
பெயர் தமிழர் செய்யும் சுத்துமாத்துக்களில் இவர்களும் ஒரு சிறிய
பங்கு.தாங்கள் செய்யும் அனைத்து மோசடிகளுக்கும் இவர்களையும்
பாவிக்கின்றார்கள்.ஏதோ வைகோ.வும்,திருமாவளவனும் தான் தமிழீழம் எடுத்து
தருவதா சொன்ன மாதிரி இருக்கு பலரின் கருத்துக்கள்.
புலம் பெய்ர்ந்த தமிழனே
அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பு அது இன்னமும் தொடருது.நல்ல சேர்ந்து
நின்று கூத்தடித்து விட்டு இப்ப ஏதோ ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் மாதிரி
கதைவிடாதையுங்கோ.
03/21/2010 AT 17:11
நீங்கள் இந்தியாவின்டையும் தமிழ் நாட்டுக் கள்ளக் கூட்டத்தின்ட பங்கையும்
குறைச்சு மதிப்பிடக் கூடாது.
இப்பவும் பலர் வைகோ, திருமாவளவன் எண்டு அலையினம்.
வேறை ஆக்களும் ஏதேதோ சாட்டுக்களிலை இலங்கைக்கு வந்து போகினம்.
நாங்கள் கவனமாயிருக்க வேணும்.
03/21/2010 AT 18:32
இனிமேல் தமிழ்நாட்டு சினிமாக் குப்பைகளையும் புலம் பெயர் நாடுகளில்
புறக்கணிப்போம். இயக்குனர் ராம், சேரன் போன்றோரின் திரைப்படங்களுக்கு
முன்னுரிமை வழங்குவோம். ராமின் தமிழ் எம்.ஏ படம் சீரழிந்த சினிமா
சூழலில் சிறப்பான படம். அஜித், விஜய், கமல், ரஜனி போன்ற வியாபாரிகளின்
படங்களுக்கு சல்லிக்காசு கூட இங்கிருந்து போகக் கூடாது.
03/21/2010 AT 23:11
ஈழம் ஒளிரத் தன் உடலை எரியூ்ட்டிய வீரப் போராளி முத்துக்குமார் விழைந்த
வண்ணம் அவரது உடலை ஆயுதமாக்க ஈழ உணர்வு அரசியல் தலைவர்களே எதிராக
இருந்தமை வேதனை அளிக்கிறது. கட்சித் தலைவர்களை அப்புறப்படுத்தி விட்டு
முடிவெடுததிருப்பின் மாணாக்கர் உலகம் சரியான முடிவெடுத்து மக்களிடையே
கொழுந்து விடடெரிந்த ஈழ விடுதலை உணர்வை மேலும் வளர்த்திருக்கும். திருமா
திமுக கூட்டணியின் காரணமாக இந்த முடிவை எடுத்தார் என்றால் வைகோவும்
நெடுமாறனும் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ
வீரப் போராளி முத்துக்குமாரின் ஈகத்தை வீணடித்து விட்டார்கள். இனியேனும்
விழி்த் தெழுவார்களாக! ஊர்கள தோறும் ஒரே நாளில் நினைவு ஊர்வலம் நடத்தி
அவரின் கனவு நனவாக ஈழம் விடுதலை அடைய உதவுவார்களாக! வெல்க தமிழ் ஈழம்!
தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழக் குடியரசு
அமைக! வீரப் போராளி முத்துக்குமார் புகழ் ஓங்குக!ஈழ உலக நட்புறவு ஓங்குக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
03/22/2010 AT 04:41
Mr. Ram, I don’t agree that Muthukumar’s action was a sacrifice for
the sake of Tamil People’s cause. If he cannot influence the name of
his nephew (I remember reading it as “Monesh” which is not a tamil
name per se) how does he expect to influence his nation for a
particular cause with his death.
At best, a stupid action by a weirdo has been exploited for a sensitive issue.
03/22/2010 AT 08:40
தன்னைத்தானே அழிப்பது விரக்தியின் உச்சம் அது விடிவைப் பெற்றூத் தரும்
என்ற எண்ணம் அவரது தீர்மானம்.உணர்சியின் வடிவம் தானே எழுத்தாளன்
அதனால்தான் முத்துக்குமார் தீயானான் அவனைத் தீ தின்றது.இந்த
அர்ப்பணீப்பும், தியாகமும் அவனைத் தெய்வம் ஆக்கியது.தெய்வமாதல்
எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
03/22/2010 AT 11:19
Hi Chennaivaasi, are you really living in Cennai or in a dream world?.
Your argument is in fact a stupid one rathar than Maaveeran Muthukuma’
s action. What a nonsense to force someone to change his name ´cos it
is not a Tamil one. To have a name for a person is not his fault, may
be a mistake of his parents or some else.
03/22/2010 AT 05:22
weelll…unbelivable…people like Ram should comefowad to lead the youth
03/23/2010 AT 04:03
இந்த கட்டுரையை படிக்கும் பொது கோபமும் வேதனையும் தான் வருகிறது .
அட்ரக்கு இருந்த மாணவர்களின் எழுச்சியை இந்த அரசியல் வாதிகள் சரியாக
பயன்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து செல்லவில்லை என்பது அப்பட்டமாக
வெளிபடுகிறது .
ஜன 31 அன்று ஊர்வலம் தொடங்கும் வரை அங்கு நான் இருந்தேன், அங்கே சிறு
சிறு சல salapukkal நிகழ்ந்தவண்ணம் இருந்தன , அபோதே என் மனதில் ஒரு ஐயம்
வந்தது. என்ன செய்ய எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் போனது தான் மிச்சம்
.
ராம் அண்ணா உண்மைகளை வெளி கொண்டுவந்ததிற்கு மிக்க நன்றி .
03/23/2010 AT 07:35
நல்ல பதிவு.அந்த நாட்களில் கொளத்தூரில் நானும் அநிக நேரம்
செலவிட்டேன்.மாணவர்கள் பின்னே இந்த தலைவர்கள் ஈகோ பார்க்காமல்
வந்திருந்தால் தமிழகமே கொந்தளித்திருக்கும்.தமிழகத்தி ல் புதிய அரசியல்
புரட்சிக்கு வித்தாகவும் அமைந்திருக்கும்.ஆனால் நம்ம தலைவர்கள்
கூட்டணி தலைமைகளுக்கு பயந்தும்இதங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல்
போய்விடும் என்று நினைத்தும் எல்லாவற்றையும் சொதப்பி விட்டனர்.இவர்களுடன்
தியாகங்கள் பல செய்த பழ.நெடுமாறன் அய்யாவும் சேர்ந்த்துதான் மிகவும்
வேதனை-அருள்செழியன்
03/23/2010 AT 08:25
ராமின் கருத்து சினிமாக்காரர்கள் ஏதோ முத்துக்குமாருக்க்கா தங்கள்
வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் போல் தன் எழுததில் பதிவு செய்துள்ளார்.
அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் தான். அதில் மாற்று கருத்துயில்லை. ஈழ
போராட்டத்தின் ஆதரவு தளத்தை உடைத்தவர்கள் அரசியல்வாதிகள் தான். அதை விட
கேவலமானர்கள் சினிமாக்காரர்கள் என்பது ராம்க்கு தொpவித்துக்கொள்கிறேன்.
பதிவு சர்யானது தான். ஆனால் சினிமா பிரபலங்கள் விழுந்து விழுந்து
முத்துக்குமாருக்காக உழைத்தார்கள் என்பது கேவலமான எண்ணப்பாடு. உங்களை விட
அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல் ராம். முதலில் அதை பூரிந்துகொள்ளுங்கள்.
அதன் பின் கட்டுரையை எழுதுங்கள். பதிவாகட்டும்.
வைகோ பற்றி உங்களை விட அரசியல் ரீதியாக அதிகமாக விமர்ச்சித்தவன் நான்.
ஆனால் ஈழ போராட்டத்தில் அவாpன் பணியை யாராலும் குறைத்து மதிப்பிட
மூடியாது. நெடுமாறன் பணி வைகோவை விட அதிகமானது. முத்துக்குமார்
விவகாரத்தில் தவறு செய்தார்கள் என்பதற்காக அவர்கள் மோசமானவர்கள் இல்லை.
நடந்தை எழுதினிர்கள். ஒருவரை பற்றி எழுதும் போது அவர்கள்pன் முன்
காலங்கள் பற்றி நினைவில் கொள்ள வேண்டும். உங்களது எழுத்து சினிமாவுக்கு
வேண்டுமானால் சிறப்பாகயிருக்கும். வீண் பிரபலம் ஏன். வேறு ஏதாவது ஒரு
வழியில் ஈழத்திற்க்கு உதவ முற்படுங்கள்.
03/23/2010 AT 10:25
தோழமையுடன், டீ.ராஜா அவர்களுக்கு,
வை.கோ, நெடுமாறன் போன்ற நான்காம் தர பிற்போக்கு தேசிய வாதிகள் எப்படி
ஈழத்திற்கு சேவை செய்தார்கள்? ஈழப் போராட்டத்தைக் காட்டிக்க்
கொடுத்தவர்கள் அல்லவா அவர்கள்? உலகின் ஒரு மூலையில் வைத்து ஐம்பதாயிரம்
பொதுமக்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்ட வேளையில் பார்த்துக்கொண்டு
இருந்ததைத் வெறும் “தவறு” என்று சொல்வது எப்படிச் சரியாகும்?
துரோகமல்லவா?
தேசிய வாதத்திற்கான போராட்டத்தில் முற்போக்குத் தேசியவாதம் என்ற பக்கத்தை
கம்யூனிஸ்டுக்கள் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். சரி, ஈழத்தில் மக்கள்
கொத்துக் கொத்தாகக் கொலைசெய்யப்பட்ட வேளைகளில் தமிழ் நாட்டில்
ஏற்பட்டிருக்கக் கூடிய எழுச்சியை உங்களால் தலைமை வகிக்க முடியாமல் போனதன்
காரணம் என்ன?
ராம் எழுதியிருப்பது ஒரு சம்பவம் மட்டும் தான் ஆனால் அது எத்தனையோ
பிரச்சனைகளின் ஆழமான த்த்துவார்த்த உரைகல்.
இப்போது புலிகளிலிருந்த ஐயர் எழுதுவதை படிக்கும் போது தவறுகளின்
பின்புலத்தில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ராமின்
சாட்சியும் அப்படித்தான்.
03/23/2010 AT 14:09
தோழர் பரதன் அவர்களுக்கு.
50 ஆயிரம் ஈழ மக்கள் கொல்ல்ப்படுபோது அதை வைத்து அரசியல் செய்ய
நினைத்து ஈழத்துக்கு தவறான தகவல் தந்து போரை நடத்த சொன்னவர்கள் வைகே
ராமதாஸ் போன்றோர் தான் மறுப்பதற்கில்லை. முத்துக்குமார் விவகாரத்தில்
தவறு செய்தார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.
அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு தவறு செய்தார்கள் புலிகள் என்பது
ஒரளவுக்கு உண்மை தான். ஆனால் ஈழத்தில் நடந்த போர் மத்தியரசின் துணையோடு
நடந்த பண்ணாட்டு போர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த
போருக்கு இந்தியா உதவவில்லை என்றால் கூட உலகம் உதவியிருக்கும். இதில்
வைகோ நெடுமாறன் நினைத்திருந்தால் கூட போரை நிறுத்தியிருக்க முடியாது.
அதோடு ஒரு விவகாரத்தை வைத்து ஒருவரை துரோகி என முத்திரை
குத்துவதாகயிருந்தால் கருணாநிதி சோனியா வைகோ நெடுமாறனுடன் நாமும்
துரோகி தான் என்பதை மனதில் கொள்ளுங்கள் ஏனெனில் ஈழ விவகாரத்தில் நாம்
அனைவருமே தவறு செய்துள்ளோம்.
03/31/2010 AT 11:11
அப்பாடா கருணாநிதி சோனியா டி.ராஜா உட்பட எல்லோரும் துரோகிகள்தான்
என்பதை வாதத்திற்காகவாவது ஏற்றுக் கொண்டமைக்கு நண்றி…. இது உண்மை என்பதை
காலம் உறுதி செய்யும் அதன் ஒரு பகுதிதான் ராமின் பதிவு. … தோழரே உங்கள்
சிவப்புச் சாயம் கூட வெளுக்களாம்
03/23/2010 AT 12:27
இதுவரையிலான இலங்கையின் தமிழ்த் தேசியவாதம் முற்போக்கானதா என்பது ஒரு கேள்வி.
மர்க்சியவாதிகள் (வோட்டுப் பெட்டிக்குள் குடி புகுந்த செஞ்சட்டைகளான
சி.பி.ஐ., சி.பி.எ ம். அல்ல) தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்
போராட்டத்தை ஆதரித்தே வந்துள்ளனர். எனினும், புலிகள் பற்றிய சிலரது
புரிதல் கோளாறானது (உதாரணமாக, புலிகளின் ஜனநாயக விரோதம் அவர்களுக்குத்
தெரியவில்லை).
“தேசிய வாதத்திற்கான போராட்டத்தில் முற்போக்குத் தேசியவாதம் என்ற
பக்கத்தை கம்யூனிஸ்டுக்கள் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்” என்று
வாய்ப்பாடு ஒப்பிபது நல்லதல்ல.
வைகோ, நெடுமாறன் போன்றோர் சுய லாபத்திற்காகச் செயற்பட்டனர் என்று பல
காலமாக இலங்கையின் மார்க்சிய லெனியவாதிகள் கூறி வந்துள்ளனர். இந்த
நிகழ்வு அதை உறுதிப்படுத்தி யுள்ளது.
03/23/2010 AT 10:22
அப்பொழுதே போட்டிருந்தால் சிறிய அளவிலாவது ஒரு சலசலப்பு அல்லது ஒரு
எழுச்சி, ஒரு சிறிய மாற்றமாவது…. அல்லது மக்களிடம் ஒரு புரிந்துணர்வாவது
ஏற்பட்டிருக்கேயென்பதற்காகத்தா ன்.
03/23/2010 AT 15:15
//ஈழ விவகாரத்தில் நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம்./
/
ஒரு கம்யூனிசஸ்டின் முதலாவது தகமை தன்னைச் சுய விமர்சனத்திற்கு
உட்படுத்திக் கொள்வதுதான். மக்கள் மட்டத்தில் இறங்கி வேலைசெய்து,
தவறுகளை சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு து.ராஜா அவர்கள், தான்
ஒரு உண்மையான கம்யூனிஸ்டு என்பதை நிரூபித்துள்ளார். அவர் மட்டும்தான்
டில்லி வரை ஈழத் தமிழர்களுக்காகப் பேசியவ்ர் என்பதையும் மறக்கவேண்டாம்.
03/25/2010 AT 13:48
து. ராஜா தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டாரா? சி.பி.ஐ.
போல அவரது கட்சியும் இன்னமும் இந்தியக் குறுக்கீடு பற்றிப் பேசுகிறதே
ஒழிய இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை.
இலங்கைத் தமிழரின் சுயநிர்ணயம் பற்றி ராஜாவின் நிலைப்பாடென்ன?
சி.பி.ஐ.இன் நிலைப்பாடென்ன?
இரண்டும் வெவ்வேறென்றால் ராஜா கட்சியிலிருந்து விலகுவாரா? கட்சி அவரை விலக்குமா?
இலங்கைத் திரிபுவாதிகள் போடாத வேஷமா?
உலகெல்லாம் திரிபுவாதிகள் ஒரே மாதிரித்தான்.
03/25/2010 AT 05:16
the sacrifice of prabakaran has gone waste..
03/25/2010 AT 11:12
தோழர்களுக்கு வணக்கம்,
என்போன்றவர்கள் இனி ஒரு இணையத்தை வாசித்து அறிந்ததில் இருந்து தான் ஈழம்
தொடர்பான அரசியலைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது. என்னைப்போல் பலர்
புதிய மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பாரகள் என்பது உண்மையே. சபா நாவலன்,
ஐயப் போன்றவர்களின் கட்டுரைகள் விழிப்புணர்வை ஏற்படுதியதை ந...
https://www.youtube.com/watch?v=zxa2d2QqDus&feature=youtu.be

கனிமொழி..திருமா..கஸ்பர்..நக்

http://www.youtube.com/watch?

வந்திருந்தால் தமிழகமே கொந்தளித்திருக்கும்.தமிழகத்தி

ஏற்பட்டிருக்கேயென்பதற்காகத்தா
03/23/2010 AT 15:15
//ஈழ விவகாரத்தில் நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம்./
/
ஒரு கம்யூனிசஸ்டின் முதலாவது தகமை தன்னைச் சுய விமர்சனத்திற்கு
உட்படுத்திக் கொள்வதுதான். மக்கள் மட்டத்தில் இறங்கி வேலைசெய்து,
தவறுகளை சுயவிமர்சன அடிப்படையில் ஏற்றுக்கொண்டு து.ராஜா அவர்கள், தான்
ஒரு உண்மையான கம்யூனிஸ்டு என்பதை நிரூபித்துள்ளார். அவர் மட்டும்தான்
டில்லி வரை ஈழத் தமிழர்களுக்காகப் பேசியவ்ர் என்பதையும் மறக்கவேண்டாம்.
03/25/2010 AT 13:48
து. ராஜா தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டாரா? சி.பி.ஐ.
போல அவரது கட்சியும் இன்னமும் இந்தியக் குறுக்கீடு பற்றிப் பேசுகிறதே
ஒழிய இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை.
இலங்கைத் தமிழரின் சுயநிர்ணயம் பற்றி ராஜாவின் நிலைப்பாடென்ன?
சி.பி.ஐ.இன் நிலைப்பாடென்ன?
இரண்டும் வெவ்வேறென்றால் ராஜா கட்சியிலிருந்து விலகுவாரா? கட்சி அவரை விலக்குமா?
இலங்கைத் திரிபுவாதிகள் போடாத வேஷமா?
உலகெல்லாம் திரிபுவாதிகள் ஒரே மாதிரித்தான்.
03/25/2010 AT 05:16
the sacrifice of prabakaran has gone waste..
03/25/2010 AT 11:12
தோழர்களுக்கு வணக்கம்,
என்போன்றவர்கள் இனி ஒரு இணையத்தை வாசித்து அறிந்ததில் இருந்து தான் ஈழம்
தொடர்பான அரசியலைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது. என்னைப்போல் பலர்
புதிய மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பாரகள் என்பது உண்மையே. சபா நாவலன்,
ஐயப் போன்றவர்களின் கட்டுரைகள் விழிப்புணர்வை ஏற்படுதியதை ந...
https://www.youtube.com/watch?v=zxa2d2QqDus&feature=youtu.be
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக