செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அண்ணாதுரை விமர்சனம் அண்ணா லாட்டரி ஆங்கிலம் தெலுங்கு பிராமண ஆதரவு

aathi tamil aathi1956@gmail.com

15/9/15
பெறுநர்: எனக்கு
அண்ணாத்துரை பிறந்தநாள்
தந்தை காட்டிய தில்லுமுல்லு வழியில்
அண்ணன் நடத்திய புரட்டு அரசியல்.
“திராவிடர்“ என்பது ”திராவிட” என்று ஆனதால் ”பார்ப்பனர்” எதிர்ப்பைக்
கைவிட்டுப் ”பார்ப்ப்னிய”த்தை எதிர்ப்பதாகத் திராவிட முன்னேற்றக்
கழக்கத்தினர் தங்களது இலக்கை மாற்றிக்கொண்டனர். கடவுள் மறுப்பைக்
கைவிட்டு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்று திருமந்திரத்தில் சொல்லப்பட்ட
திருமூலரின் வாக்கைத் தங்களது கடவுள் கொள்கையாக வைத்துக்கொண்டனர்.
அத்துடன் ”வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது!” என்று வடவர் எதிர்ப்பை
முன்வைதனர். ஆனால், அண்ணாத்துரை தனது வாழ்நாளின்போதே “பார்ப்பனிய”
எதிர்ப்பையும் வடவர் எதிர்ப்பையும் கைவிட்டார்
1957இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வேற்றுமையில்
தோல்வியடைந்த நெடுஞ்செழியனுக்காகத் தேர்தல் முடிவை எதிர்த்து இலவயமாக
வழக்கை நட்நத முன்வந்த ”பார்ப்பனிய”த்தைக் கைவிடாத பிராமணராகிய
வழக்குறைஞர் வி.பி. இராமனை சி.என். அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக்
கழகத்தில் இணைத்துக்கொண்டத
ு மட்டுமன்றித் திமுக. தலைவர்களில் முகாமையான தலைவராகவும் அவருக்கு
ஒப்புதல் வழங்கினார்.
தி.மு.க.வின் முகாமையான கருத்தாய்வுக் கூட்டங்கள் வி.பி. இராமன்
இல்லத்திலேயே நடந்தன. முகாமையான முடிவுகள் பிராமணரான வி.பி. இராமனைக்
கலந்தாய்ந்த பின்னரே எடுக்கப்பட்டன. இதுதான் ”பார்ப்பனிய எதிர்ப்பா”?
1959ஆம் ஆண்டில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம்
பெரும்பான்மையான வட்டங்களைக் கைப்பற்றியது. அண்ணாத்துரையின் ஆணைப்படி
”சுழற்சி முறை” என்னும் பெயரில் காமாட்சி செயராமன் என்ற பிராமணப் பெண்,
மேயராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். பிராமணப் பெண்ணை மேன்ம(மேய)ராக்கிய
பெருமை அண்ணாத்துரையையே சாரும்!
1967இல் தமிழக ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்ட அண்ணாத்துரை, அதுநாள் வரை
தாம் குல்லூகப்பட்டர் என்று ஏசி வந்த பிராமணராகிய இராசகோபாலாச்சாரியை
“மூதறிஞர்“ என்று பாராட்டினார்.! அப்படியானால் இராசாசி பிராமணிய தன்மையை
விட்டுவிட்டாரா? பு நூலைக் கழட்டிவிட்டாரா? தான் பிராமணர் அல்ல என்று
அறிவித்துவிட்டாரா?
கொல்லைப்புற வழியில் முதலமைச்சரானவர் என்று இராசகோபாலாச்சாரியைக் கேலி
பேசிய அண்ணாத்துரை, பிராமணராகிய இராசகோபாலாச்சாரி வந்த அதே
கொல்லைப்புறவழியில் தமிழக முதல்வரானார்!
அண்ணாதுரையாரால் வந்த பெருங்கேடு:-
1. 1944 சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை தமிழர் கழகம் என்று
பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது
சி.என்.ஏ தீர்மாணம் மூலமாக திராவிடர் கழகம் என்ற பெயரை மாற்றிய
பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.
2. தான் சாகும்வரை திராவிட இனக் கொள்கையை கைவிடாமல் காமாஇட்சையை தூண்டும்
வகையில் மேடையில் பேசியவர்.
3. தான் சாகும்வரை அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று கேடு செய்தவர்.
4. தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டை)
திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி பரிசு விழுந்தால் வீட்டுக்கு,
விழாவிட்டால் நாட்டுக்கு என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ்
மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.
5. ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி
கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.
6. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அண்ணாத்துரை நிச்சயம் ஒருபடி
இலட்சியம் மூன்றுபடி என்று அடுக்கு மொழியில் பேசி தமிழர்களை ஏமாற்றினார்.
7. பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும்
ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மாணம் ஆக்கி, ஆங்கிலத்தை
கட்டாயமாக்கி தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல். முதல் வகுப்பு முதல்
முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்நாட்டில் தமிழை ஒழித்துக்கட்டியவர்.
8. தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற 7 கட்சிக் கூட்டணியை
உருவாக்கியவர் அண்ணாத்துரை.
9. இவற்றையெல்லாம் மறைக்கவே தான் உயிருடன் இருக்கும் வரை திராவிடநாட்டு
கோறிக்கையை கைவிடாத அண்ணாத்துரை.
10. ஈ.வெ.ரா. தமிழினத்திற்கு எவ்வளவு கேடு செய்தாரோ அதில் எள் முனை
அளவும் குறையாமல் கேடு செய்தவர் அண்ணாத்துரை. ஆகையால் தமிழரின் இனப்பகை
ஈ.வெ.ரா. பட்டியலில் அண்ணாத்துரையையும் சேர்ப்போம்.
திராவிடத்தால் வீழ்ந்தோம்! தமிழ்த் தேசியத்தால் எழுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக