|
12/9/15
| |||
Nakkeeran Balasubramanyam
அறிவீர் சென்னைச் செந்தமிழ்...
"கொஞ்சம் நவுருபா / கொஞ்சம் ஒத்துபா"
மேலே குறிப்பிட்டுள்ள நவரு (நகரு) ஒத்து போன்ற சொற்களை ஏதோ இழிதமிழ் போல்
ஏனைய மாவட்ட மக்கள் நோக்குகுன்றனர். ஆனால் அவர்கள் "கொஞ்சம்
தள்ளிக்கோங்க" என்கின்றனர். இந்த நகரு, ஒத்து போன்றவை உண்மையில்
இழிதமிழா? சரி, 'தள்ளு' என்பதனை ஆங்கிலத்தில் 'Push' என்கின்றனர். அதே
இந்த நகரு, ஒத்து என்பவற்றின் பொருளைப் பார்த்தோமானால் அவை 'Move' என்றே
ஆங்கிலத்தில் பொருள் தருகின்றன. என்னடா இவன், தமிழுக்கு ஆங்கிலத்தில்
பொருள் தருகிறானே என்று வரிந்து கட்டிக்கொண்டு யாரும் வரவேண்டா. என்ன
செய்வது, இன்றைய சூழ்நிலையில் தமிழையே ஆங்கிலத்திலல்லவ
ா கற்பிக்க வேண்டியிருக்கிறது!
ஒன்று கவனிக்க. இந்த நகரு அல்லது ஒத்து என்கிற சொற்களும், தள்ளு என்கிற
சொல்லும் ஒரே பொருளைத் தருபவை அல்ல. உண்மையில் இவையிரண்டும் எதிரெதிர்ப்
பொருளைத் தருபவையே.
வண்டியைத் தள்ளலாம், ஒரு பொருளைக் கீழே தள்ளலாம், மனிதனை எப்படியய்யா
தள்ளுவது? ஆக, 'தள்ளு' என்பது தவறான சொல், சென்னையில் வழங்கும் 'நகரு,
ஒத்து' என்பவை மிகச் சரியான சொற்களே, இவை தூய தமிழே.
செம்ம, நாட்டிகிச்சு, குந்து, மிடறு, அப்பால, தொலவு, வலிச்சுகினு,
இசுத்துகினு, அட்டு, தாராந்து பூட்ச்சி, இப்படி இன்னும் பல சொற்கள்...
அவையனைத்தும் வட்டார வழக்கின்படிச் சற்றே 'நாக்கு மடித்து உருட்டிப்
போடப்பட்ட' செந்தமிழே...
வட்டார வழக்கின்படி இவற்றை உச்சரித்தல் தவறென்றால், 'ஏனுங், என்னாங்,
பாக்குறீங்' என்று ஈற்றெழுத்தான 'க' வெட்டப்பட்டுப் பேசப்பட்டு வரும்
கொங்குத் தமிழ் மட்டும் எப்படி ஐயா சுவைக்கிறதாம்! அதுவும் ஒருவகை வட்டார
வழக்கே. அதுபோல் சென்னைத் தமிழ் பேசுதலும் ஒருவகை வட்டார வழக்கே.
முதலில், தமிழில் ஆங்கிலச் சொற்கள், வந்தேறிச் சமைத்த மொழிச் சொற்கள்
போன்றவற்றை விலக்கித் தூய தமிழில் உரையாடக் கற்போம், பிறகு எது நற்றமிழ்
எது இழிதமிழ் என்பதனைப் பார்ப்போம் ஐயா.
(ஒன்னுமில்லிபா, ஒர்த்தராண்ட பேசினிருக்க சொல்லோ 'ஒத்து'ன்னுட்டேம்பா,
அதுக்கு அவரு என்ன மேய கீயன்னு ஒரு பார்வ பாத்தாரு பாரு, சொம்மா
கூசீறிச்சிபா. அத்தா, இத்த எய்திகிறேன். இன்னும் இன்னான்னா வோணும்?
கேட்டுக்க, நம்ம கைல இன்னும் நர்ரியா க்குதுபா.
மாமு, நாங்க அல்லாரியும் வா, போன்னுதாம் பேஸ்வோம், ஆனாக்கா இன்னா
பேஸ்னாலும் சாதி எத்தியும் பாத்து வயசுல பெர்சுங்கள வாடா போடான்னு கூப்ட
மாட்டோம், மத்த எடத்துங்கள்ள கீசாதின்னுகிட்டு வயசுல பெர்சுங்களக்கூட
'டேய் ***** பயலே, அப்புடி இப்புடின்னு கூப்ட மாட்டோம், எங்குளுக்கு
சாதின்னா இன்னான்னு தெர்ரியாது, தெர்ஞ்சுக்க நைனா... வர்ட்டா?)
Aathi Prakash Savetamilpeople
'எடுத்துக்கொண்டுவந்து விட்டுவிடு' இதை 'இட்டாந்துரு' என்று சுருக்கிய மாமேதைகள்.
பிடித்திருக்கிறது · திருத்து ·
இப்பொழுது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக