சனி, 29 ஏப்ரல், 2017

தமிழர் திருமணம் தாலி சடங்குகள்

aathi tamil aathi1956@gmail.com

18/7/15
பெறுநர்: எனக்கு
தாலி தமிழர் பண்பாடே (தொடர்ச்சி)
வீரம் செறிந்த ஒரு புதல்வனைப் பெற வேண்டித் தவம் இயற்றும் இளம் தாய் ஒருத்தி,
தனது மேற்கைகளில் வைரமணியைப் பொதிந்து தைத்துக் கொண்டிருக்கிறாள்
தாலியின் மாற்று அடையாளமாக என்பது உற்று நோக்கத்தக்கது,
"நலம்பெறு திருமணி கூட்டு நல்தோள்,
ஒடுங்கு ஈர் ஓதி ஒள்நுதல் கருவில்,
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்,
காவற்கு அமைந்த அரசு துறை போகிய,
வீறுசால் புதல்வன் பெற்றனை.
(பதிற்றுப்பத்து -74:16-21,செம்மொழி-ம.வே.பசு-பக்-472)
மணநாள் அன்று மணமகளின் கழுத்தில் மணமகன் மாலை சூட்டுவதே முதன்மையான
இலக்கியச் சான்றாக உள்ளது,
அவனே தாலி கட்டினானா?அவனே முடிச்சுப்போட்டானா என்றெல்லாம் தேடினால் அது
விரிவான ஆய்வாக அமையும்,அதற்குத் தமிழ் இடம் தரும்,
"தொடியுடைய தோள் மணந்தனன்,
கடிகாவுல் பூச்சூடினேன்,
தன்கமழும் சாந்து நீவினேன்,
செற்றோரை வழி தபுத்தனன்,
நட்டோரை உயர்பு கூறினன்,
வலியர் என வழிமொழியலன்,
மெலியர் என மீக்கூறலன்.
(புறம்-239:1-7 செம்மொழி -ம.வே.பசு-பக்-903)
புறவாழ்வில் வெற்றிபெரும் ஒருவன் அகவாழ்வில் வெற்றிபெறப் படிக்கட்டு
அமைத்துத் தருவதே திருமணம் என்ற அளவுகோல் என்பது தமிழர் மரபில் ஏற்றுக்
கொள்ளப்பட்டது,
மணநாளில் அவன் மணமகள் கழுத்தில் அணியும் மாலையானது வெந்நூல் கொண்டு
கட்டப்பட்டது என்று தெரிகிறது,
வாகை கவட்டிலையோடு அறுகம்புல்லின் பாவை சேர்த்துத் தொடுக்கப்பட்டுள்ளது,
ஆண்டின் முதல் மழை பெய்யும்போது அறுகம்புல் பூக்கும்,அந்த பூக்களைச்
சேர்த்து வைத்திருந்து வாகை இலையோடு சேர்த்து மணமாலை தொடுத்தனர் என்று
தெரிகிறது,
மலரின் கதிர்நிலை அல்லது மலர்ந்த நிலையினையே பாவை நிலை,பூவை நிலை
என்றெல்லாம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன,
"மென்பூ வாகைப் புன்பறக் கவட்டு இலை,
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்,
தழங்கு குரல் வானின் தலைப் பெயற்கு ஈன்ற,
மண்ணு மணியன்ன மா இதழ்ப் பாவைத்,
தண் நறு முகையோடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி.
(அகநாணூறு 136-10-15,செம்மொழி-ம.வே.பசு-பக்-697)
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பாவை என்ற சொல் 'கிழங்கு'என்று புரிந்து
கொள்ளப்பட்டுப் பின்னாளில் மஞ்சள் கிழங்காக மாறியதும்,
வெந்நூல் மஞ்சள் கயிராக மாறியதும் ஆரிய வைதிகத்தாரின் திருப்பணியாக இருக்கலாம்,
அகநானூறு குறிப்பிடும் இந்தத் திருமணம் ஆண்டு நாட்களைக் கட்டுப்படுத்தும்
செம்மையான அறம் சார்ந்த ஆட்சியில் முறையாகத் தோன்றும்,
தைத் திங்கள் முழுநிலவின் முன் இரவில் நடந்த திருமணம் ஆகும்,அந்த
திருமணம் தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்ட விழாவின்,
12ம் நாளில் அமைந்தது என்பதும் அன்று நிலமகளாகிய திருமகளின் கணவனாக அரசன்
வெற்றி வாகை சூடுகிறான் என்பதும்,
தமிழர்களின் வரலாற்று வழிப்பட்ட அரச ஆளுமை,திருமணம் நடந்தேறி அந்த
முன்இரவில் எல்லையில் மணமகள் மணமகனிடம் ஒப்படைக்கப்படுகிறாள் என்ற பதிவு
உற்று நோக்கத்தக்கது,
"மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்,
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி.
(அகம் 136:16-19,செம்மொழி -ம.வே.பசு-பக்-697)
திருமணம் முடிந்த பின்னும் மண மக்களைச் சேரவிடாமல் பலப்பல சடங்குகளை
வற்புறுத்துவது தமிழர் பண்பாடு இல்லவே,
அச்சடங்குகளுக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
# # பெறுந்தச்சன் தென்னன் மெய்மன் ஐயா.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக