சனி, 29 ஏப்ரல், 2017

ஹிந்தியாவில் ஏமாறுவது எப்படி?

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு
ஹிந்தியாவில் ஏமாறுவது எப்படி?

முதலில் நீங்கள் ஹிந்தியன் என்ற உணர்வுடன் இருக்கவேண்டும். ஏமாற இது மிக அவசியம்.
இரண்டாவது ஹிந்தி தெரியாத தமிழனாக இருப்பது ஏமாறுவதற்கு மிகமிக அவசியம்.

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து டெல்லிக்கு ரயில் டிக்கட் எடுக்க அரசு
இணையதளத்திற்கு செல்லவேண்டும்.

அது உலகத்திலேயே மிகமிக மோசமான அடிமாட்டு இணையதளமாக இருக்கும் சட்டையைக்
கிழித்துக்கொள்ளும் நிலைவந்ததும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு ஏஜன்டிடம்
செல்லவும்.
டிக்கெட் ஒருமாதம் முன்பே நிரம்பியிருக்கும் எனவே ஏஜன்டிடம் கூடுதலாக
300ரூபாய் அழவும்.

துணிமணிகளைக் கட்டிக்கொண்டு ரயில் நிலையம் சென்றால் அங்கே வண்டி
குறைந்தது ஒன்றரைமணி நேரமாவது தாமதமாக வரும்.
சிலசமயம் 7,8மணிநேரங்கள் கூட தாமதமாகலாம்.
வந்ததும் வண்டியில் ஏறினால் உங்கள் இடத்தில் பாக்கை குதப்பிக்கொண்டு ஒரு
இந்திக்காரன் உட்கார்ந்திருப்பான்.
அவனிடம் சண்டைபோட்டு விரட்டி உங்கள் இடத்தை நீங்களே பிடிக்கவேண்டும்.
 ரயிலில் அதிகபட்ச வேகம் 60கி.மீ/நிமி தான். அதாவது மதுரையிலிருந்து
டெல்லி செல்ல முழுதாக இரண்டுநாட்கள்.
கழிவறைக்குச் சென்றாலும் உங்கள் பையை எடுத்துச்செல்லவும். இது ஏனென்றால்
கழிவறையில் கழுவ வைத்திருந்த உலோக பாத்திரத்தைக்கூட சங்கிலியை உடைத்து
திருடிவிட்ட புண்ணியவான்கள் தங்கள் வேலையைக் காட்டிவிடக்கூடாது இல்லையா?
புலிகளோடு போர்புரியும்போது யாழ்ப்பாணத் தமிழ்மக்கள் துவைத்து
காயப்போட்டிருந்த வெளிநாட்டு உயர்தர உள்ளாடைகளைக்கூட திருடிய ஹிந்திய
படையின் தாய்நாடு வேறு எப்படி இருக்கும்?
பிச்சைக்காரர்களுக்கு கொடுக்க 200 ரூபாய்க்காவது சில்லரை வைத்திருக்கவும்.
அதிலும் அரைவாணிகள் பத்துரூபாய்க்குக் குறைவாகக் கொடுத்தால் சேலையைத்
தூக்கிக்காட்டி கண்ணைக் குருடாக்கிவிடுவார்கள்.
டெல்லிக்கு முன்பு ஆக்ராவில் இறங்கி (குறைந்தது ஒரு மணிநேரம் தாமதம்)
அங்கே ஏதாவது கடைக்காரனிடம் விசாரிக்கவேண்டும்.
ஏதாவது அவனிடம் வாங்கினால்தான் அவன் வாயைத்திறப்பான். இல்லையென்றால்
எவனும் வழிசொல்லமாட்டான்.
ஒரு முறை விசாரிக்க குறைந்தது ஒரு டீயாவது வாங்கவும்.
விசாரித்துவிட்டு வெளியேவந்தால் பத்து ஆட்டோக்காரனாவது மொய்ப்பான்.
வெளியாள் என்றதும் யானை என்னவிலை குதிரை என்னவிலை என்று அவன் சொல்வான்.
பேரம் பேசி முடிந்தவரைக் குறைத்து வண்டியில் ஏறவும்.
போகும் வழியெல்லாம் குண்டும் குழியுமாக குப்பைமேடாக இருக்கும்.
வெள்ளைக்காரர்களிடம் பிச்சைக்கேட்டு பின்னாலேயே போகும் குழந்தைகளையும்
வெள்ளைக்காரிகளை கையைப்பிடித்து இழுக்காதகுறையாக தொந்தரவு செய்யும்
ஆட்டோக்காரர்களையும்
நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் அப்போது வாய்க்கும்.
சாப்பிட கடைக்குச் சென்றால் சாப்பிடும் முன் ஒரு விலையும் சாப்பிட்ட
பிறகு இருமடங்கு விலையும் சொல்வான்.
அதனால் எதாவது பலகாரம் தின்றே அரைவயிறும் குறைவயிறுமாகவே சுற்றவும்.
அந்த ஊரிலேயே யமுனை ஆறு என்ன பெயரில் ஓடும் சாக்கடையின் கரையில்
தாஜ்மகால் இருக்கிறது.
சுற்றிபார்த்துவிட்டு படம் எடுத்துக்கொண்டு செங்கோட்டை இருக்கும்
இடத்திற்கு கிளம்பவும்.
அதற்குள் ஆட்டோக்காரன் வெயிட்டிங் சார்ஜ் பார்க்கிங் டிக்கெட் என
கணக்கெழுதியிருப்பான்.
செங்கோட்டைக்கு எதிரிலேயே திருட்டு பஜார் இருக்கிறது.
நீங்கள் இறங்கியதுமே உங்கள் காதருகே வந்து மொபைல்வேண்டுமா பைக்வேண்டுமா
என்று கேட்பான்.
உடனடியாக ஓட்டம் பிடிக்கவும்.
குப்பையாக கிடக்கும் செங்கோட்டையைப் பார்த்துவிட்டு இந்தியா கேட் செல்லவும்.
நீங்கள் பஸ் ஏறிப்போனால் கட்டணம் குறைவு ஆனால் பர்ஸை எப்படியும்
அடித்துவிடுவார்கள்.
அதிலும் நியூடெல்லியைத் தாண்டியதும் உங்கள் பர்ஸை ஏழேழு பிறவிக்கும்
உங்களால் திரும்ப பார்க்கவேமுடியாது.

எனது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக