|
15/9/15
| |||
தமிழ்ச் செல்வன் தமிழ் என்பவர் Samy மற்றும் 65 பேர் ஆகியோருடன்
சாதி மத அடிப்படையில் நாடு பிரியலாமாம்;
மொழி அடிப்படையில் பிரிவினை கூடாதாம்.
செயல்திட்டம் ஏதுமின்றித் ’திராவிடநாடு’ கோரிக்கையை முன்வைத்துத்
’தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும், ’திராவிடநாடு திராவிடருக்கே’ என்றும்
மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரணாக ஈ.வெ.ரா. பேசியும் எழுதியும்
வந்தார். மொழிவழித் தேசிய அடிப்படையற்ற ஈ.வெ.ரா.வின் பார்வை பிழையானதும்
குழப்பமானதும் அல்லவா?

”இனி, மொழிவாரி என்பதைப்பற்றிச் சில சொல்லுகிறேன்: மொழியின்மீது ஒரு நாடு
எதற்காகப் பிரியவேண்டும்? சாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின்மீது
பிரிவது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. ஏனெனில், அவை ஒவ்வொன்றுக்கும்
மாறுபட்ட, பொருத்தமற்ற கொள்கைகள் திட்டங்கள் உண்டு.
அவைகளால் இலாப நஷ்டம், சாதக பாதகம் அடைபவர்கள் இருப்பார்கள். அவர்கள்
இலாபத்தைப் பெருக்கவோ நஷ்டத்தைக் குறைக்கவோ தாங்கள் ’மெஜாரிட்டியாய்’
இருக்கும் நாட்டைப் பிரித்துக் கொண்டால் நல்லது என்று ஆசைப்படுவார்கள்.
இது இயற்கை.
’மொழிகளில் அப்படிக் கொள்கையோ திட்டமோ அனுபவமோ கலாச்சாரமோ பழக்க வழக்கமோ
மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியுமே இல்லை. மொழியினால்
பெருமை, சிறுமை, இலாப நஷ்டம் ஒன்றுமே இல்லை.
ஆதலால், இதைக் காரணம் காட்டிப் பிரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
’பிரிவினை கூடாது; ’சாதி, மத, வகுப்பு பேதமற்ற தேசியவாதிகள், தியாகிகள்
நாங்கள்’ என்று பேசுகிற காங்கிரசாருக்கு அல்லது சர்க்காருக்கு
மொழிக்காகப் பிரிய வேண்டும் என்பதும், மொழிவழியாகப் பிரிய வேண்டும்
என்பதும் சுயநலமில்லாமல் இதில் பொதுநலம் என்ன என்று கேட்கிறேன்”
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 3 அரசியல் 1, பக்கம் 1344.)

ஈ.வெ.ரா, நாடு எப்படிப் பிரியவேண்டுமென்கிறார் பாருங்கள்!
முதலாவாக, மொழி அடிப்படையில் கண்டிப்பாகப் பிரியக் கூடாது. மொழி
அடிப்படையில நாடு பிரிவது சுயநலம்; மொழி அடிப்படையில நாடு பிரிவதால்
பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை; மொழி சார்ந்த கலாச்சாரமோ
பழக்கவழக்கமோ இல்லை.
ஈ.வெ.ரா.வின் கூற்றை அறிவார்ந்த தமிழர்கள் ஏற்பார்களா? மொழிவழித் தேசியப்
பார்வை இல்லாத்தால் மொழி அடிப்படியலான தமிழ் நாட்டுப் பிரிவினையை அவர்
எதிர்த்தார். அப்படிப் பிரிவதென்றால் சாதி, மத, இன அடிப்படையில்
பிரியவேண்டுமென்றார்.
’தமிழர்கள் சாதியால் ஒன்று சேரலாம்; மத்த்தால் ஒன்று சேரலாம்; மத
அடிப்படையில் நாடு கேட்கலாம்; ஆனால், தமிழராய் ஒன்று சேராதே; மொழி
அடிப்படையில மட்டும் நாடு கேட்காதே!” என்பதுதானே அதன் பொருள்?
சாதி அடிப்படையில் நாடு பிரிக்கப்பட வேண்டுமென்பது டாக்டர். அம்பேத்கார்
அவர்களிடமிருந்து ஈ.வெ.ரா. த்த்தெடுத்துக்கொண்ட கருத்து. அடுத்து, மத
அடிப்படையில் நாடு பிரியவேண்டும் என்பது முகமது அலி ஜின்னாவிடமிருந்து
தத்தெடுத்துக்கொண்ட கருத்து. இந்த எண்ணவோட்டத்தை எந்தப் பகுத்தறிவில்
சேர்ப்பது?
இல்லாத-கற்பிக்கப்பட்ட-’திராவி
வேண்டும் என்று கூறித் தமிழரின் தாயகத்தைத் தெலுங்கர்களுக்க
ு கன்னடர்களுக்கும் மலையாளிகளுக்கும் பங்குபோடும் ஈ.வெ.ரா.வின் இந்த
நிலைப்பாட்டை என்னவென்று சொல்வது?
திராவிடநாடு கிடைத்திருந்தால
், சென்னை மாகாணத்திலிருந்த எல்லாப் ’பார்ப்பனர்’களையும் வெளியேற்றி
வருணாசிரமம் இல்லாத நாடாக மாற்றியிருக்க முடியுமா? இந்தக் கூற்றை நம்பித்
தமிழர்கள் ஏமாந்துபோனார்கள்.
இனி தமிழர்கள் நாம் ஈ.வெ.ரா.வையும்-ஈ.வெ.ரா.வின் திராவிடக் கருத்தையும் ஏற்கலாமா?
திராவிடத்தையும்-ஈ.வெ.ரா.வையும் மறுப்போம்!
வேரருப்போம்! கருவருப்போம்! தமிழ்த் தேசியம் படைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக