செவ்வாய், 11 ஏப்ரல், 2017

நேரு தென்னிந்தியா பற்றி கடல் வணிகம் கப்பல் பெருமை

aathi tamil aathi1956@gmail.com

16/9/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
“வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது.
வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று
வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து
காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள்,
முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன" (பக்: 184).
"தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந
்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும்
குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும்,
உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்(தமிழர்)களால் ஓட்டப்பட்ட
இந்தியக்கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும்
கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை
வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் (பக்: 153)”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக