ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

முத்தரையர் பற்றி சாதி

aathi tamil aathi1956@gmail.com

24/9/15
பெறுநர்: எனக்கு
துரை. இராசகுமரன் வடகாடு
“முத்தரையர்கள் மூத்த குடியென்று நிறுவமுடியாது”.
.. தேவேந்திர நண்பர் ஒருவர் திடீரென்று முகநூளில் இப்படியொரு அதிரடி
அறிவிப்பை வெளியிட்டுள்ளார், மேலும் ‘முப்பரையர் என்போரே பின்னாட்களில்
மருவி முத்தரையர் என்றாகிவிட்டனர்’ என்ற புதியதொரு வரலாற்றுச்
செய்தியையும் அவர் கண்டறிந்துள்ளாராம் !
பொதுவாக முத்தரைய மக்கள் தமிழ்த் தேசிய உணர்வு மிக்கவர்கள், எல்லா
சாதியினரையும் தோழமைச் சாதியாக கருதுபவர்கள். குறிப்பாக இன்றைய சமூக
நிலையில் தாழ்வு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் மீது கரிசனம்
கொண்டவர்கள். அண்மையில் பள்ளர் சமூகத்தினர் பட்டியல் வகுப்பிலிருந்து
மீண்டு “தேவந்திரகுல வேளாளர்” என்றத் தமது சுயத்தை மீட்டிட வேண்டி
நடத்திய போராட்டங்களில் கூட முத்தரையர்களின் பங்களிப்பும் இருந்தது.
பள்ளர்கள் மட்டுமல்ல பறையர் சமூக உறவுகள் கூட நாளை அத்தகைய போராட்டங்களை
நடத்தினாலும் முத்தரைய மக்கள் அவர்களோடு தோள் சேர்த்து நின்று
களமாடுவார்கள்,அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் கிடையாது. தம்மை மதித்து
நம்பிவந்தோரை கைவிட்ட வரலாறு இன்றைக்கு நேற்றல்ல தன்னரசு கட்டி தனியாட்சி
புரிந்த எம் முப்பாட்டன்களின் காலத்திலிருந்தே எமக்கு கிடையாது.
என்றாலும் அந்த நண்பருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு
முத்தரையர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் முத்தரையர்களாகிய நாங்கள்
எங்களை முதுபெரும் தமிழினத்தின் மூத்தகுடிகளில் ஒன்றாகவே இதுவரை கருதி
வந்துள்ளோம். எனவே அதை அவர் மறுக்கும்போது அவருக்கு தக்க பதிலைத் தர
வேண்டியது எங்களது பொறுப்பு...
நாங்கள் எங்களை மூத்த குடியென்று கருதுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது, சில சமூகத்தினரைப் போன்று நாங்கள் மூவேந்தர்களின்
வழி வந்த ‘இந்தக் குலம்’ ‘அந்தக் குலம்’ என்றெல்லாம் கட்டுக்கதையைக் கட்ட
வேண்டிய அவசியம் கிடையாது. மற்றும் சேரப் பரம்பரை, சோழப் பரம்பரை,
பாண்டியப் பரம்பரை என்று எத்தகைய கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியச்
சான்றுகளும் ஏன் செப்புப் பட்டயச் சான்றுகள் கூட இல்லாமல் ‘இந்தக் கரம்
அந்தக் கரமாய்த் திரிந்துவிட்டது’ என்று கூவித் திரிந்து வரலாற்றைத்
திரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனென்றால் ஆயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்னரே எம் முப்பாட்டன்கள் எனது சாதிப் பெயரான
“முத்தரையர்” என்ற பெயரிலேயே ஆட்சி அமைத்துவிட்டனர். தமிழ் மண்ணில் எந்த
சாதியினருக்கும் இல்லாத அந்தச் சிறப்பு எமக்கே உண்டு!
எம் சாதியின் பெயரிலேயே எம் முப்பாட்டன்கள் ஆண்டனர், அந்த நாட்டுக்கு
“முத்தரையர் நாடு” என்று எம் சாதியின் பெயரிலேயே பெயருமிட்டனர்,
அன்றைக்கே எமக்கென்று எம் சாதியின் பெயரில் ஆட்சி இருந்தது, அதிகாரம்
இருந்தது, நாடு இருந்தது, படையணி இருந்தது, படைவீரர்களாய் மாவீரர்கள்
இருந்தார்கள், கொடி இருந்தது, கோட்டை இருந்தது, பரிவட்டமும் பல்லக்கும்,
செங்கோலும் மணிமுடியும் எம் ஆளுமையை நிறுவிட அணிசேர்த்து நின்றது! அப்படி
அவர்கள் அமைத்துக்கொண்ட கல்வெட்டுகளும்,சாசனங்களும் அன்று அவர்கள் கட்டிய
தன்னாட்சிச் சரித்திரத்தை இன்றும் எடுத்துச் சொல்லுமே!
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல, பல்லவனுக்கு
பங்காளியாய் இருந்து எம் முப்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையன் பாண்டியனை
மணலூர்,கண்ணனூர்
,திங்களூர்,கொடும்பாளூர்,காந்தள
ூர்,காரை,அழுந்த
ியூர்,அண்ணல்வாய
ில்,செம்பொன்மார
ி,வென்கோடல்,புகழி என்று எத்தனையோ பல களங்களில் தனித்தே நின்று விரட்டி
அடித்ததை வரலாறு மறக்குமா?.
குடவரை,கற்றளி,ஏ
ரி,குளம்,கண்மாய்,குமிழி, இறையிலி நிலம் என்று நாங்கள்
எடுத்ததும்,கொடுத்ததும் எத்தனை தெரியுமா..? முதன் முதலாய் வெண்பாவில்
மெய்கீர்த்தி கண்டவன் யாரென்று தெரியுமா..? பகைவரின் செங்குருதியால்
நனைந்த நிலத்தை காளை கட்டி உழுதால் மாளாது என்று சொல்லி யானை கட்டி உழுத
வேந்தன் யாரென்று தெரியுமா..? இன்றைக்கு இருக்கும் “பெரிய கோயில்களில்”
எத்தனை கோயில்கள் முன்னம் எம் முன்னோரின் அரண்மனையாய் இருந்ததென்று
தெரியுமா..? முத்தரையரீசுவரங
்கள் சோழீஸ்வரங்கலான வரலாறு தெரியுமா..? கோனாட்டுச் சண்டையில் தலைப்பலி
கொடுத்த பள்ளருக்கும்,பறையருக்கும் தனியிடம் வழங்கவேண்டி வாணதிராயரிடம்
கையொப்பமிட்ட தந்திரிமார்கள் யாரென்று தெரியுமா..?
அது மட்டுமா...? எமது செந்தலை மரபை எந்தச் சோழர்கள் வீழ்த்தினார்களோ அதே
(பிற்காலச்)சோழர்களுக்கு சோழ விச்சாதிர முத்தரையன், முடிகொண்ட சோழ
முத்தரையன், சுந்தரச் சோழ முத்தரையன், சத்ருபயங்கர சோழ முத்தரையன்,சங்கர
நாராயண சோழ முத்தரையன், எதிரில்லாதனான சோழ முத்தரையன், விக்கிரம சோழ
முத்தரையன், மும்முடிச் சோழ முத்தரையன், மேருச் சோழ முத்தரையன்,கருணாகரச்
சோழ முத்தரையன் என்று எண்ணற்ற பலர் தண்டநாயகர்களாக இருந்து சோழகுலத்தைக்
காத்த எம்முடைய பெருந்தன்மையைப் பற்றித் தெரியுமா?. யாருக்கு உண்டு இது
போன்ற வரலாறு..?
மேலும் தாளாண்மை பற்றிப் பாடிய நாலடியாரோ இரந்து உண்ணாத
மக்களும்,வறுமையிலும் அடுத்தவரிடத்தில் இரவாதவரும்
“பெருமுத்தரையர்களுக்கு நிகரானவர்கள்...” என்று இரு பாக்களால் (200,296)
விளக்குவதிலிருந்தே எமது பெருமை யாவருக்கும் விளங்குமே...
எம் குலத்தின் மூத்தவன் கண்ணப்ப வேட்டுவன் கடவுளுக்கே கண்ணைக்
கொடுத்ததும், திருமங்கை ஆழ்வான் கடவுளிடமே கத்தியைக் காட்டியதும் எம்
ஈரத்தையும், வீரத்தையும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் எடுத்துச்
சொல்லும்.
நக்கீரன் காலத்திலேயே எம் முன்னோர் முத்தரசராய் ஆண்டதை “தமிழறியும்
பெருமாள்” கதை சொல்லும்.
முத்தரைய மரபினர் யாரென்பதையும், யாரின் கால்வழி வந்தோர் என்பதையும்
ரேனாட்டில் கிடைத்த முற்காலச் சோழரின் ஏற்றகுடிப்பாகு கல்வெட்டு
சொல்லும்.
வனவேட்டை ஆடிய காலத்தில் வலையனாய் இருந்து, அரையம் கட்டி அரையராய்
உயர்ந்து, அரையருள்ளும் மூத்த அரையராய்த் திகழ்ந்து முத்தரையராய்
முடிசூடி ஆண்ட நாங்கள், பின்னாட்களில் எங்கள் கொடி இழந்து, கொற்றம்
இழந்து, நாடிழந்து நாதியற்றுப்போன பின்னரும் கூட வாளையும்,வேலையும்
தூக்கிக்கொண்டு வெள்ளாளர் வீட்டுக்கு காவல்காரனாய் நின்றோமே தவிர
களவுக்குச் சென்றோ, வழிப்பறி செய்தோ வாழவில்லை. அதனால்தான் அரசாங்கமே
எங்களுக்கு காவல்காரர், அம்பலகாரர், அரையர் என்று சான்றிதழ் வழங்கிக்
கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட எங்களுக்கு “மூத்த குடி”ச் சான்றிதழை
எவரும் தரவேண்டிய அவசியமில்லை. அதேவேளையில் கேட்பாரற்ற சமூகம் என்று
கருதி எவரும் எமது வரலாற்றைத் திரித்திட முனைந்தால் அதை நாங்கள் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்போம் என்று நினைத்திட வேண்டாம். மறந்திட வேண்டாம்...
உங்களுக்கு வரலாற்றை சொல்லித் தரும் அதே தமிழ்த் தேசியக் களத்திலே
எங்களுக்கும் வரலாற்றைச் சுட்டிக்காட்டும் ஆட்கள் இருக்கிறார்கள்.

1 கருத்து: