|
24/9/15
![]() | ![]() ![]() | ||
துரை. இராசகுமரன் வடகாடு
நேற்றைய தினம்,எட்கர் தர்ஸ்டன் என்ற ஆங்கிலேயர் 1890 காலகட்டத்தில்
தென்னிந்தியச் சாதிகளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு இருபதாம்
நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிட்ட நூலான “castes and tribes of the
southern india” என்ற நூலின் தமிழாக்கத்தை (தென்னிந்திய குலங்களும்
குடிகளும்) படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் ஏழு தொகுதிகளாக
அவரால் வெளியிடப்பட்ட அந்நூலில் அன்றைக்குத் தென்னிந்தியாவில
ிருந்த அனைத்துச் சாதிகளைப் பற்றிய தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
நூலினுடைய ஏழாம் தொகுதியில் வளை எறி வீச்சில் வல்லோரான வலையர்களைப்
பற்றிய விரிவான பதிவும் உள்ளது. அதைப் படிக்கின்ற தருணத்தில் அன்றைய
வலையரின மக்களின் ஏழ்மையையும், பொருளியல் ரீதியாக அவர்கள் சமூக நிலையில்
தாழ்வுற்றிருந்த தன்மையினையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. மூன்றாம்
நூற்றாண்டிலேயே “முத்தரையர்” என்று முடிசூட்டப்பட்டு, ”பெரு முத்தரையர்
பெரிது உவந்து ஈயும் கருணைச் சோறு”என்று போற்றப்படும் விதமாக வல்லாண்மை
கொண்டு,நல்லாட்ச
ி செலுத்தியவொரு பேரினத்தின் நிலை இடைக்காலத்தில் இந்தளவு தாழ்வுற்றுப்
போயிற்றே என்ற வருத்தமே எஞ்சி நின்றது. ஒரு சமூகம் சமகாலத்தில் அரசியலில்
செலுத்துகின்ற ஆளுமை, பொருளியலின் தன்மை, பொதுத் தளங்களில் அது
ஏற்படுத்துகின்ற தாக்கம், அச்சமூக மக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு,ச
ிதைவுற்றிடாமல் பாதுகாக்கப்படும் அவர்தம் பண்பாடு இவற்றைப் பொறுத்தே ஒரு
சமூகத்தின் நிலையானது வரையறுக்கப்படுக
ின்றது,இவ்வரையரையிலிருந்து நோக்கும் போது இன்றளவும் நாம் பின்தங்கியோராகவ
ே தமிழகமெங்கும் வாழ்ந்து வருகின்றோம் என்பதே மறுக்க இயலாத உண்மை.ஆனாலும்
ஆசிரியர் எட்கர் தர்ஸ்டன் அவர்கள் வலையர்களுக்கென்றே உரிய சில தனித்துவம்
கொண்ட,தொன்று தொட்டு அவரிடையே தொடர்ந்து வருகின்ற பழக்கவழக்கங்களின்
பெருமைகளையும் சொல்லி அதன்வாயிலாக “இவர்கலோர் பழம்பெரும் தமிழ்க்குடி
என்று நிரூபணமாகின்றது” என்கின்றார். அவற்றுள் சிலவற்றை நான்
பதிவிடுகின்றேன்....
இவர்கள் கடின உழைப்பினை மேற்கொண்டு,கிடைத்ததை உண்டு வாழ்ந்தோர்.வேட்
டையாடுவதிலும்,காட்டில் வலைவிரித்து மிருகங்களைப் பிடிப்பதிலும் திறன்
பெற்றோராவர். 1901ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தஞ்சைப் பகுதியில்
வாழ்ந்த வலையர்களுக்கு வேட்டைக்காரன்,க
ாவல்காரன்,சேர்வை,அம்பலக்காரன்,
சிலியான் உள்ளிட்ட பட்டப் பெயர்கள் உண்டு. அம்பலக்காரர்,வல
ையர்,முத்தரையர் இவர்கள் அனைவரும் ஒரே சந்ததியின் வழிவந்தோராகத்தான்
இருக்க வேண்டும். கண்ணப்ப நாயனாரைத் தம் குலத்தின் தோற்றுவாயாகக்
கருதுவதைக்கொண்டு இது நிரூபணமாகின்றது. மேலும் அம்பலகாரர்கள் மிகுதியாக
வாழுகின்ற இடத்தில் வலையர்கள் குறைவாகவும்,வலையர்கள் செறிந்து வாழுகின்ற
பகுதியில் அம்பலகாரர்கள் குறைவாகவும் வாழுவதாகப் பதிவிட்டுள்ளார்.
திருச்சி பகுதியியிலிருந்த வலையர்,முத்தரையர் நாடுகள்
சருகு,எட்டரைக்கோப்பு,தானம நாடு(அ)வழுவாடி நாடு(எங்கள் பகுதி), நடு
நாடு(அ) அசல்,குறும்ப,வன்னிய(புதுக்கோட்
டை மாவட்டத்தின் ஒரு பகுதி),அம்பு நாடு,புனல் நாடு உள்ளிட்டவை என்று
விளக்குகின்றார்.
மதுரைப்பகுதி வலையரிடத்தில் வகினி,வலத்து,பரடி,கங்கு உள்ளிட்ட
அகமணக்கட்டுப்பாடு கொண்ட பிரிவினர் இருந்ததாகவும்
குறிப்பிடுகின்றார்.மேலும் இப்பகுதி வலையர்கள் மாசி மாத அம்மாவாசைக்கு
மறுநாள் ஓன்று கூடி வேட்டையாடி,அவற்றை எல்லாம் தம் குல தெய்வங்களுக்கு(
பெரும்பாலும் சிங்கப் பிடாரி,பதினெட்டாம் படி கருப்பு,ஐயனார் போன்ற
கடவுள்) இட்டு மகிழுவதாகவும்,மூப்பன் என்பது இவர்களது பொதுவான பட்டம்
எனவும் பதிவு செய்துள்ளார். இவர்களுக்குள் ஏதாவது சண்டை,சச்சரவுகள்
ஏற்படும்போது தம் சாதித் தலைவனான “கம்பளியானை” அருப்புக்கோட்டை
யிலிருந்து வர வரவழைப்பார்களாம
்.அவர் குதிரை மீதமர்ந்து,ஒருவர் குடை பிடிக்க,மற்றொருவர் ஆலவட்டம் வீச
விரைந்துவந்து பிரச்னைக்கு தீர்வு கான்பாராம்.
திருமண விழாக்களில் மணமகனின் உடன் பிறந்தாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்
றது.தை மாதம் முதல் வைகாசி மாதம் வரை மணவிழாக்கள் நடைபெறும்.மறுமணம்
அனுமதிக்கப்பட்டுள்ளது,சில சமையங்களில் தாலிக்குப் பதிலாக வளரியும்
பயன்படுத்தப்பட்
டுள்ளது.சில பிரிவினர் தாய் வழி முறையைப் பின்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக