திங்கள், 3 ஏப்ரல், 2017

கெட்டிபொம்மு எடுபிடி பரம்பரை

aathi tamil aathi1956@gmail.com

27/11/15
பெறுநர்: எனக்கு
Jaleel Aleem
கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன்
காட்ர கட்டப் பிரமையாதான். இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்
எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக் காரனாக இருந்தவன்.
அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்க
ு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை 'புளிச்'
எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக் கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற
ராஜபணிகள்!
கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும்
நாடோடிகள் எனப் பொருள். கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள்
இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். எட்டப்ப நாயக்கருக்கு
அடப்பக் காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா
ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தின் விளக்கி வைத்த
சொம்புகளுடன் ஐக்கியமானான்.
காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே
தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.
1.காட்ர கட்டப்பிரமையா
2.கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன்(1709-1736).
3.பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்(1736-1706).
4.இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).
5.வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799). இதில் ஐந்தாவதாக வருபவன்தான்
பிஆர் பந்துலுநாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த 'வானம் பொழிகிறது பூமி
விழைகிறது' சிவாசிக்கனேச கட்டப்பொம்மன்!
அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு
தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியனை ஏறினான்?
-தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக