சனி, 1 ஏப்ரல், 2017

இசுலா இலக்கியம் தமிழக அரபு தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

7/1/16
பெறுநர்: எனக்கு
Kamala Balachandar > Kurinjiகுறிஞ்சி
ப்பாட்டில் மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..
இஸ்லாமும் தமிழிலக்கியமும்
முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்
இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை
உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு
சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது
மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை
பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய
இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும். இவ்வகையில் இன்றைக்குத்
தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச்
சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம்
தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை
உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும்
ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு
நோக்கமாகும்.
தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல
நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு
நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான
அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம்.
இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்
தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமி
டையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு
பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின்
வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும்
வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.
அரபு மக்கள் கிழக்கு, மேற்கு வணிகத் துறையில் பெரும் முனைப்பாக இருந்ததை
வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில்
பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினங்களே தூர கிழக்கு நாடுகளுக்கும் மேலை
ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகத் தொடர்பிற்குக் களனாக விளங்கின.
அவற்றுள் முக்கியமானது பவுத்திர மாணிக்கப் பட்டினம். மன்னார் வளைகுடாவில்
அமைந்துள்ள புவுத்திர மாணிக்கம்பட்டினம் ராமேஸ்வரம் அல்லது
தனுஷ்கோடியுடன் முடியும், இதற்கு நேர் வடக்கில் அமைந்துள்ள
வியாபாரத்தலமாக விளங்கியது தேவிபட்டினம். தென்காயல் என்று அழைக்கப்பட்ட
புத்திர மாணிக்கப்பட்டினம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வியாபாரத்
தொடர்புகளுக்கும் வடகாயல் என்று அழைக்கப்படும் தேவிபட்டினம் தூர கிழக்கு
நாடுகளின் வியாபாரத் தொடர்புகளுக்கும் மையமாக விளங்கின. பாண்டியர்
ஆட்சிக் காலத்தில் பவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய இரு
துறைமுகங்களும் வெளிநாட்டவரின் வியாபாரத் தொடர்பிற்கு இடமாக விளங்கியதை
வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.
பாரசீக வளைகுடாவில் உள்ள கைஸ் என்னும் தீவு இந்நாளைய ஹாங்காங் துறைமுகம்
போலப் பெரும் வணிகத் தலமாக விளங்கியது. அன்றைய வணிகத் தலமான கைஸ்
துறைமுகம், புவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் முதலானவைகள்
ஐரோப்பியர்களுக்கும் அரபு தேசத்தவர்களுக்கும் பண்டமாறறு
வியாபாரத்திற்குரிய மையமாகத் திகழ்ந்தன. அன்றைய பாண்டிய நாட்டில் அரபு
தேத்து வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அதன் பயனாய் அவர்கள்
பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களிலே குடியேறத் தொடங்கினர். அரபு
நாட்டு மக்கள் தமிழகத்துடன் சங்க கால இலக்கியங்களிலே நிரம்பக் காணலாம்.
சங்க இலக்கியங்களில் அரபு தேசத்து வணிகர்கள் ‘யவனர்’ என்னும்
சொல்லாட்சியில் குறிக்கப்பட்டுள்ளனர். யவனரின் தமிழக வருகை வியாபார
நோக்கமாகவே அமைந்தது. இதனை அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிக்கிறது.
யவனர்கள்..........
கப்பலோட்டிகள் /கம்மகாரர் /
நெய்தனிலமாக்கள்/ வங்கர்
கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினை மாண்கலம்
பொன்னெடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி… (149)
இங்குக் கறி என்னும் சொல் மிளகினையும் முசிறி என்பது
முசிறிப்படடினத்தையும் குறிப்பதாகும். எனவே மிளகு போன்ற வாசனைப்
பொருட்களால் ஈர்க்கப்பட்டே யவனர்கள் கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாகத்
தமிழகத்திற்கும் வருகை தந்தனர். அவர்களின் வியாபாரத் தொடர்பே நாளடைவில்
தமிழகத்தில் அரபு நாட்டவரின் குடியேற்றமாகத் தொடங்கியது. இந்தக்
குடியேற்றம், இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்கு முன்னரே நடைபெற்றிருத்தல்
வேண்டும். ‘கிறித்தவ ஆண்டு தொடங்கியதற்கு முன்னரேயே அரபிகள் இலங்கையிலும்
தென் இந்தியாவிலும் குடியேறினர்’ என்று பிளனி என்னும் வரலற்றாசிரியர்
கூற்றும் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்வதாக உள்ளது.
தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்பியவர்களும் இன்றைய முஸ்லீம்களுக்கு
முன்னோடியாக விளங்கியவர்களும் மேற்குறித்த வியாபார நிமித்தமாக இங்கு வந்த
குடியேறிய அரபியர்களே. அத்தகையவர்களின் குடியேற்றம் பெருமானார் நபிகள்
நாயகம் அவர்களது காலத்திலும் தொடர்ந்து வலுப்பெற்றது. வியாபார நிமித்தமான
குடியேற்றம் நபிகள் காலத்தில் சமயச்சார்பாகவும் அமைந்து தொடரலாயிற்று.
நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தோழர்களான தமீமுல் அன்சாரி அவர்களினதும்
அபீலக்காங் அவர்களினதும் கல்லறைகள் தமிழகத்தில் இருப்பது இஸ்லாத்துக்கும்
தமிழகத்திற்கும் உள்ள அப்போதைய நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வுறவு நிலையை எடுத்துக்காட்ட எத்தனையோ அகச் சான்றுகளைத் தமிழகத்தில் காணலாம்.
ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழக முஸ்லிம்கள் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே
அவர்களது கவனத்தைச் செலுத்தினர். பின்னர் நாளடைவில் குடியேற்றம்
அதிகரிக்க அதிகரிக்க அது மார்க்கத்திலும் அமையலாயிற்று. இறைநேயச்
செல்வர்களும், மார்க்கப் பெரியோர்களும் இஸ்லாமியக் கருத்துகளைப்
பரப்புவதை முதற்பணியாகக் கொண்டு செயலாற்றினார்கள். இதற்கு வரலாற்றுப்
பின்புலத்தில் தமிழகத்தில் இஸ்லாம் இஇருந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும்
ஏனைய பிற இந்தியச் சமயங்களுக்கும் உள்ள தொடர்பினை இங்குள்ள முஸ்லிம்
பெருமக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதன் பயனாகவே தமிழை
அடிப்படையாகக் கொண்டு தங்களது சமயக் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளும்
உத்தியையும் இங்குள்ள முஸ்லிம் சமயப் பெரியோர்கள் பின்பற்றத்
தொடங்கினார்கள். அதுவே இஸ்லாமும் தமிழும் இணையும் காலக்கட்டமாக உருவானது.
இதன் பயனாய் இஸ்லாம் தமிழகமெங்கும் பரவலாயிற்று. இஸ்லாமிய கருத்துக்களைப்
பரப்புவதற்கு மொழியின் தேவையை உணரத் தலைப்பட்ட பின்னரே இஸ்லாமியத்
தமிழிலக்கியங்களின் தோற்றம் தமிழிலக்கிய வரலாற்றில் உதயமாயிற்று.
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்தமாலை
என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்தமாலை என்பது இஸ்லாமியத்
தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய
முடிகிறதே தவிர நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இவ்விலக்கியத்துள்
இடம்பெற்றுள்ள எட்டுப் பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட
உரையிலேயே மேற்குறித்த எட்டுப் பாடல்களும் சான்றுச் செய்யுட்களாக
இடம்பெற்றுள்ளன. இவ்வகப் பொருள் நூல்கூட இன்னும் தமிழிலக்கிய
ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வகப் பொருள்
நூலினை வையாபுரிபிள்ளை ‘களவிற் காரிகை’ என்று பெயரிட்டு 1931இல்
பதிப்பித்துள்ளார். இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் படி சென்னையில் உள்ள
அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில்
இடம்பெற்றிருந்த ஆங்கிலக் குறிப்பினால் இ·து ஆழ்வர் திருநகரி
மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் படிகளுள் ஒன்றாக இஇருந்தது
என்பதும் அவ்வேட்டுப் படியின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதியில் படி எடுத்தார் என்பதையும் அறியலாம்.
அதுவே வையாபுரிப்பிள்ளை களவியல் காரிகை என்ற தலைப்பில் அவ்வகப்பொருள்
துறைகளைப் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.
இந்நூல் குறித்துப் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ள
ை கூறும்போது ‘கையெழுத்துப் பிரதியில் இறையனாரகப் பொருட்துறையைச் சங்கச்
செய்யுளாக உதாரணம் எழுதியது’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
‘இக்குறிப்பு’ இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும்
தலைக்குறிப்பாகவ
ே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்’ என்பதையும்
குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இவ்வகப்பொருள் நூலுக்கு இஇப்போது
இடப்பட்டுள்ள பெயரான களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்ட பெயர்
என்பதையும் தெளிவுபடுத்தியு
ள்ளார். எனவே தற்போது அவ்வகப்பொருள் நூலுக்குரிய பெயராக, வையாபுரிப்பிள்ள
ை சூட்டிய களவியற் காரிகை என்னும் பெயரே கொள்ளப்படுகிறது.
களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட் துறைகளுக்கு எடுத்துக்காட்டு
கள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு
எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச் செய்யுட்கள் மட்டும்
பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப்
பல்சந்தமாலை என்னும் தனித்ததொரு இஇலக்கியம் கிடைக்காவிடினும்
இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து
அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.
இனி, பல்சந்தமாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்குரிய காரணங்கள்
சிலவற்றைக் காண்போம். வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில்
மேற்கோள் நூல்கள் பற்றியக் குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார். அதில்
பல்சந்தமாலை குறித்து அவர் கூறும்போது பல்சந்தமாலை என்னும் பெயருடைய நூல்
ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலில்
பல்சந்தமாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல்
அப்பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு
வகுதாபுரியில் அரசு புரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முகமதிய
முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரிக்கு
இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என
ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்தமாலையின் ஒரு செய்யுளால்
புலப்படுகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்சந்தமாலைச்
செய்யுட்களாகக் கிடைத்துள

இசுலாமியர் இஸ்லாமியர் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக