சனி, 1 ஏப்ரல், 2017

இசுலா இலக்கியம் தமிழக அரபு தொடர்பு முதல் இசுலாமிய நூல் 12ம் நூற்றாண்டு 2

aathi tamil aathi1956@gmail.com

7/1/16
பெறுநர்: எனக்கு
பல்சந்தமாலைச் செய்யுட்களாகக் கிடைத்துள்ளனவற்
றின் உள்ளடக்கக் கருத்துக்களை மையமாகக் கொண்டு இச்செய்யுட்கள் அடங்கிய
நூல் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த நூல் என்பதைத் தெளிவாக உணரலாம்.
இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.
இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே
இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் ‘அல்லாவென வந்து சத்திய நந்தா
தொழுஞ்சீர்’ என்பது பல்சந்தமாலை இலக்கியம் இஸ்லாமியச் சார்புள்ளது
என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின்
உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்தமாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே
என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக் கூறின் விரியும் என்ற
காரணம் தகுதி விடுக்கின்றோம்.
இனி, பல்சந்தமாலையின் காலக் கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக்
காண்போம். கால ஆராய்ச்சியைப் பல்சந்த மாலையின் மொழி இயல்பினைக் கொண்டு
ஓரளவு கணிக்கலாம். பல்சந்தமாலையின் காலம் தொடர்பாக மு. அருணாசலம் கூறும்
போது 14-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். ஆனால் இது பொருந்துவதன்று.
பல்சந்தமாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர்
தொல்காப்பியரின் மொழி மரபினைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில்
நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர்
சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இஇரு
இஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ‘இயவனராசன்’ என ஒரு செய்யுளை
ஆரம்பிக்கின்றார்.
‘இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்’…
என அமைகிறது இச்செய்யுள். இனி பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி
‘தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்’
என உள்ளது. இவ்விரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம்
செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர மற்ற செய்யுளில்
யகரத்தின் முன் வந்த குற்றயலிகரம் முற்றியலிகரமாக மாறி ‘இயவனர்’ என
வந்துள்ளது.
யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அம்மரபு தொல்காப்பிய மொழி
வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக்
கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய்
மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான்
பல்சந்தமாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே
பல்சந்தமாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்
காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் 13ம்
நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட
காலமான 12ஆம் நூற்றாண்டினையே பல்சந்தமாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
இஇக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.
பல்சந்தமாலை என்னும் தமிழிலக்கியத்தின் மூலமாக தமிழிலக்கிய உலகில்
கால்கோள் கொள்ளத் தொடங்கிய இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு இன்றளவு
ஒன்பது நுற்றாண்டு கால இலக்கியப் பாரம்பரித்தைத் தமக்கெனவுடையதாகக்
கொண்டுள்ளது.
இவ்வொன்பது நூற்றாண்டு கால எல்லையில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட பல்வேறான வகைப்பட்ட தமிழிலக்கியங்களைப் பெற்றுத் தமக்கெனச்
சுட்டிக்காட்டத்தக்க இலக்கிய வரலாற்றுப் பின்னணியை இஸ்லாமியத்
தமிழிலக்கியப் பிரிவு பெற்றுள்ளது.
பல்சந்தமாலைக்கு அடுத்த நிலையில் யாகோபுச் சித்தர் பாடல்கள் (15 ஆம்
நூற்றாண்டு) ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ் மாலை (கி.பி.1590),
திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன்
படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (17 ஆம் நூற்றாண்டின் இறுதி)
சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (17ஆம் நூற்றாண்டு)
முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம் பெறுவதாக அவற்றின் கால எல்லை
அடிப்படையில் வரையறை செய்யலாம் – பல்சந்த மாலையுடன் சேர்த்து இப்பத்து
இலக்கியங்களையும் தொடக்க கால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம்.
தொடக்க காலத்தில் இஸ்லாமும் தமிழும் இணைந்த நிலையிலேயே படைப்போர்
இலக்கியம் ஒன்றும் தோன்றி இருப்பது இங்கு குறிப்பிடற்பாலது. தொடக்க
காலத்தில் ஒருசில இலக்கியங்களே வரப்பெற்ற போதிலும் இஸ்லாமியத்
தமிழிலக்கியங்களின் வருகை நிலை காலப்போக்கில் பெருகலாயிற்று. கி.பி. 18,
19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள்
அனைத்தும் அடங்கும். இந்நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின்
பொற்காலமாகக் கருதலாம்.
இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு
தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக் கையில் காப்பியங்களைப்
படைத்தளிருப்பதாகும். கனகவிராஜரின் கனகாபிரேஷக மாலை, உமறுப்புலவரின்
சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகுமது மரைக்காயரின்
சின்ன சீறா, வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், சேகனாப் புலவரின்
குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம், பதுறுத்தீன்
புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப் புலவரின் திருமணி மாலை,
புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின்
தீன்விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு
நாவலரின் நாகூர் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத்
தமிழ்க் காப்பியங்களை இயற்றித் தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப்
புலவர்களைச்சாரும்.
காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய
வரலாற்றில் காலத்திற்கேற்ப தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளில் தங்களது
பங்களிப்பினை நிலைநாட்டியுள்ள
ார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய
வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச்
சாரும்.இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக
இடம் பெற்றுள்ளன. இங்ஙனம் இஸ்லாமும் தமிழும் இஇணைந்ததின் பயனாக
எண்ணிலடங்காத் தமிழிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இன்றும் தோன்றிய வண்ணம்
உள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவுத் தமக்கெனத்
தனித்ததொரு இலக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பெற்றுச் சிறக்கிறது. இத்தகு
இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தமிழிலக்கிய உலகிற்கு ஓர் உன்னதமான
கொடையாகவே விளங்குகிறது.
நன்றி : ஆறாம்திணை, முனைவர்.பீ.மு. அஜ்மல்கான

இசுலாமியர் இஸ்லாமியர் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக