வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மூவேந்தர் ஒற்றுமை ஒரே பாடலில் பாடிய ஔவையார்


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 3 ஜூலை, 2018, பிற்பகல் 10:18
பெறுநர்: எனக்கு
ஒரே பாடல் மூவேந்தருக்கும்
புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில்,
பாடல் 367 மட்டுமே மூவேந்தர்களும்
ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.
பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோர்: சேரமான்
மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த
உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
கருத்துச் சுருக்கம்:
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக
வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க.
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த
நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச்
செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக
வருவது வேறொன்றுமில்லை.
நன்றி: Nanjil Peter

புறநானூறு இலக்கியம் ஔவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக