வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சிங்களம் பிந்தையது தமிழ்மொழி மூத்தது சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 1 ஜூலை, 2018, முற்பகல் 11:39
பெறுநர்: எனக்கு
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே
- கெளரவ சி வி விக்கினேஸ்வரன் -
ஒரு முழுமையான மொழியாக சிங்கள மொழி பரிணாமம் பெற்றது கி பி 6 ஆம் அல்லது 7 ஆம் நூற்றாண்டில் அதற்குமுன் சிங்களமொழி இருந்ததில்லை மொழியே இல்லாமல் ஒரு இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை மேலும் இவவாறான நிலையில் பண்டைய இலங்கை பூராகவும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதனை பேராசியர் பத்மநாதனின் இலங்கைத்தமிழர் வரலாறு , கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் கி மு 250 கி பி.300 என்ற நூல்கள் மூலமாக வெளிக்கொணர்ந்து உள்ளமையினையும் அந்நூலின் பிரகாரம் இலங்கையின் தமிழர் சமுதாயம் கி மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியாக நிலப்பகுதியில் தமிழ்மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டிருந்தனர் என்று நிறுவக்கூடிய காலம் கனிந்துவிட்டது என்றும் தெரிவித்தார் . இலங்கையில் கிடைத்த தமிழி ( தமிழின் தொன்மை வடிவம் ) கல்வெட்டுக்களின் அடிப்படையில் இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே என்று கூறுவதில் தவறேதும் இருப்பதாக கூறமுடியாது சிறிலங்கா கார்டியன் என்ற பத்திரிகையில் 25-01-2013 பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது மூத்த பெளத்த நூலான தீபவம்சம் கி பி 4 ஆம் அல்லது 5 ஆம் மற்றும் மகாவம்சம் கி பி 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டுகளில் கூட பாளி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளம
ை சிங்கள மொழி பொதுவழக்கிற்கு பயன்பாட்டில் எடுக்கும் அளவிற்கு செழுமையடையாமை உட்பட செய்யுள் வடிவில் இயற்றும் தகுதியைக் கொண்டிராமையே காரணமாகும் என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளார். யாருக்கும் சினத்தினை உண்டாக்கும் என்பதற்காக உண்மையான வரலாற்றை மறைத்தல் அவை என்றைக்கும் வெளிவராமல் போவதற்கு காரணமாகிவிடும் என்பதனையும் கடந்த வராந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்

சிங்களவர் ஈழம் விக்னேஸ்வரன் மண்மீட்பு பழமை இலங்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக