| ![]() | ![]() ![]() | ||
|
Mathi Vanan
ஒழிந்தார் நக்சல் தீவிரவாதி.
(The week, sep 1987)
பொன்பரப்பியில் அன்று பாரத ஸ்டேட் வங்கி சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மிதிவண்டியில் வந்த அந்த ஐந்து பேரை யாருமே கவனிக்கவில்லை. வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். காசாளர் இறந்து போனார். உடனிருந்த பணியாளர்கள் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு வங்கி கொள்ளை செய்தி காட்டு தீயென பரவியது. பொன்பரப்பி மக்கள் மளமளவென குவிந்தனர்.
வங்கி கொள்ளையர்கள் தமிழரசன் குழுவினர் என போலிசால் தேடப்பட்டோர் படம் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததால், அடையாளம் கண்டனர் பொதுமக்கள். தமிழரசன் தலைமையிலான வங்கி கொள்ளையர்கள் பொது மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அவை வெடிக்கவில்லை. பொதுமக்கள் தைரியம் வந்து வங்கி கொள்ளையர்களை தாக்க துவங்கினர். வங்கி கொள்ளையர்கள் தங்கள் பணத்தை வாரி இறைத்தும் பொது மக்கள் விடவில்லை. சரமாரியாக தாக்கினர். கொள்ளையர்களில் மூவர் அந்த இடத்திலேயே தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவர் ஆம்புலன்சில் எடுத்து செல்லும்போது உயிரிழந்தனர்.
வங்கி கொள்ளையர்களை தாக்கி கொன்ற பொன்பரப்பி மக்களை அமெரிக்காவிலிருந்து தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்த்தினார். பாரத ஸ்டேட் வங்கி பரிசு தந்தது.
தமிழரசன் மரணம் வங்கிகளுக்கு நிம்மதியை தந்தது. ஏனெனில் தமிழரசனின் முதன்மை இலக்கு வங்கி கொள்ளையாய் இருந்தது. தமிழக போலிசுக்கும் பெருத்த நிம்மதி. கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழரசன் பிடிக்கமுடியாத தேடப்படும் நக்சலைட்டாக இருந்தார். ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றாலும் எங்களால் தமிழரசனை பிடிக்க முடியவில்லை என்கிறார் தமிழக ஐஜி.
நக்சல்பாரி இயக்க தலைவரான சாருமசும்தார் போல தமிழ்நாட்டில் உருவெடுத்த தமிழரசன் ஆபத்தானவர். பொறியியல் கல்லூரி படிப்பை பாதியிலே விட்டு நக்சல் தீவிரவாதியானவர்.
தமிழ்நாட்டு நக்சல்களை 1980களில் போலிஸ் கடுமையாக ஒடுக்கியபோது தமிழரசன் தலைமறைவானார். அவரை பற்றிய தகவல்கள் இல்லை. அவரை கண்டுபிடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. அவர் சார்ந்த வன்னியர் சமூக மக்களிடம் பெரும் ஆதரவு இருந்தது. முந்திரி காடுகளில் தமிழரசனை கண்டுபிடிப்பது முடியாததாய் இருந்தது.
1986ல் தீவிரவாத தாக்குதலால் உள்கோட்டை வங்கியை கொள்ளையடித்தார். அரசு துறையில் 40 ஆயிரத்தை கொள்ளையடித்தார்.
ஆனால் ஒரு லட்சம் பரிசோடு, தேடப்படும் நக்சல் தீவிரவாதி என தமிழரசன் அறிவிக்கப்பட்ட காரணம் அவரின் இந்திய அரசு மீது எதிர் நடவடிக்கைகளாலே. ராசிவ் காந்தி திருவையாறு வருவதற்குமுன் குடமுருட்டி பாலத்தை குண்டுவைத்து தகர்த்தது தமிழரசனின் தமிழ்நாடு விடுதலை படை. அரியலூர் ராக்போர்ட் எக்ஸ்பிரசை பாலத்தில் குண்டு வைத்து கவிழ்த்தார். அதில் அப்பாவி மக்கள் 25 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து கம்பெனி ஆயுத படைகள் தமிழரசனை, தமிழ்நாடு விடுதலை படையை ஒழித்து கட்ட இறக்கிவிடப்பட்ட
ன.
மக்கள் போர்க்குழு கொண்டபள்ளி சீத்தாரமய்யா ஆதரவாளரான தமிழரசன், வன்னியர்கள் பெரும்பான்மையான திருச்சி, தஞ்சை, தென் ஆற்காடு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உள்ள தாக்குதல் படையை உருவாக்கினார்.
கிராம மக்களுக்கே முந்திரி காடுகள் என பெரும் காண்டிராக்டர்களுக்கு எதிராக மக்களை திரட்டி வென்றது அந்த மக்களிடம் ஆதரவை அதிகரித்தது. அவரை பற்றி எந்த தகவலையும் மக்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்றார் ஒரு காவல்துறை அதிகாரி.
1970ல் தீவிரவாத செயல்களை துவங்கிய தமிழரசன், நிலச்சுவான் தார்கள் கொலை, கொள்ளை என்று, போலிசில் பல முறை தப்பி, 1977ல் போலிசால் பிடிக்கப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய தமிழரசன் மீண்டும் பிடிக்கப்பட்டார். பின் பெயிலில் வந்தவர் கடந்த ஆறு ஆண்டுகளாக போலிசால் பிடிக்கமுடியாமல் தலைமறைவானார்.
வங்கி கொள்ளை, குண்டுவெடிப்பு, கொலை என அரசுக்கு பெரும் அச்சுறுத்தலான தமிழரசன் பொன்பரப்பி மக்களால் அடித்து கொல்லப்பட்டது பெரும் வெற்றி. ஆனாலும் இன்னும் 50 தமிழரசனின் தமிழ்நாடு விடுதலை படையினராவது இருப்பார்கள். அவர்களையும் ஒடுக்கிவிடுவோம் என்றார் தமிழக ஐ.ஜி. ராஜசேகரன் நாயர்.
நேற்று அன்று PM 7:53 மணிக்கு

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக