செவ்வாய், 10 அக்டோபர், 2017

திருமுருகன் காந்தி நாயர் உளவாளி மே17

NGO போராளி திருமுருகன் யார்?
ராவுக்கும் NIBக்கும் இவருக்கும் என்ன உறவு?
-----------------------------------------------------------------------------------
1) சில பல மாதங்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில்
என்ஜினை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றார்
என்ற செய்தி உங்களுக்கு  நினைவு வருகிறதா?

2) அந்தக் குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா?
இல்லை. இனிமேலாவது பிடிப்பார்களா? மாட்டார்கள்.
ஏன்? அந்த ரயில் என்ஜினை ஓட்டிச் சென்றவர் ஒரு
ரா (RAW) அதிகாரி. ரயில்வே போலீஸ்
அந்த வழக்கின் கோப்பை (FILE) மூடிவிட்டது என்ற
உண்மை மக்கள் அறியாதது. இவையெல்லாம்
ராவின் ரகசிய நடவடிக்கைகள். மக்களால் எளிதில்
புரிந்து கொள்ள முடியாது.

3) NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தி இரண்டு உளவு
அமைப்புகளுக்கு நெருக்கமானவர். ஒன்று ரா. இது
இந்திய உளவு அமைப்பு. இன்னொன்று NIB. இது
இலங்கையின் உளவு அமைப்பு.
(NIB =National Intelligence Bureau).

4) இவ்விரு உளவு அமைப்புகளின் ஈழம் குறித்த
செயல்திட்டத்தை நிறைவேற்றித் தருவதே
திருமுருகன் காந்தியின் அரசியல். இவ்விரு உளவு
அமைப்புகளின் முகவர் மற்றும் சேவகரே திருமுருகன்.

5) ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில்
இருந்தபோதெல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சிலில்
(UNHRC) கண்டனங்கள் எழும். மனித உரிமை
கவுன்சில் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்களை
வழங்கும். அப்போதெல்லாம் ராஜபக்சே ஆதரவு
சிங்கள புத்த பிக்குகள் UNHRC அறிக்கையை
தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்கள்.
மறுநாள் அதே போராட்டத்தை (UNHRC அறிக்கை எரிப்பு)
திருமுருகன் தமிழ்நாட்டில் நடத்துவார். இது சர்வதேசப்
பத்திரிகைகளில் UNHRC அறிக்கைக்கு இந்தியா
இலங்கையில் எதிர்ப்பு என்று செய்தியாக வெளிவரும்.
(விரிவான விளக்கம் தனிக் கட்டுரையில்).

6) ஈழ அரசியல் அறிந்தோர் வெளிநாட்டில் வாழும்
நெடியவனை அறிவார்கள். மே 17 இயக்கத்திற்கு
தேவையான நிதியை வழங்கியது ஆரம்பத்தில்
நெடியவனே.

7) லண்டனில் உள்ள TTC  மற்றும் BTF அமைப்புகளுடன்
நெருங்கிய உறவு கொண்டவர் திருமுருகன். BTF அமைப்பு
(BTF = British Tamil Forum) ராஜபக்சேவுடன் சமரசம்
செய்து கொண்டதை அடுத்து அதன் மீதான தடையை
ராஜபக்சே அரசு நீக்கியது. இந்த அமைப்பு தற்போது
சிங்கள இனவெறி ராஜபக்சே/மைத்திரிபால அரசின்
அரவணைப்பைப் பெற்ற அமைப்பு. திருமுருகனின்
மே 17 இயக்கமும் BTF அமைப்பும் சிங்கள இனவெறி
அரசுக்குச் சாதகமாக ஈழப் பிரச்சினையைக்
கையாளும் அமைப்புகள்.

8) தோழர் உமர் அவர்களை உங்களில் எவருக்கேனும்
நினைவு இருக்கிறதா? மே 17 இயக்கத்தில் திருமுருகன்
காந்தியுடன் இணைந்து செயலாற்றியவர் தோழர் உமர்.
திருமுருகனின் பித்தலாட்டங்களை அறிந்ததும் அவர்
கடுமையாகச் சண்டையிட்டார். விளைவு: மே 17இல்
இருந்து வெளியேற்றப் பட்டார். அவர் திருமுருகனின்
சிங்கள ஆதரவு மற்றும் நிதி மோசடிக் குற்றங்களை
விளக்கி 450 பக்க அளவிலான ஒரு ஆவணத்தை
வெளியிட்டார். இந்த ஆவணம் அவரின் வலைப்பூவில்
(blog) இப்போதும் உள்ளது. வாசகர்கள் அருள்கூர்ந்து
அந்த ஆவணத்தைப் படிக்கவும்.

9) இன்னும் திருமுருகனின் பித்தலாட்டங்கள் குறித்து
நிறையவே சொல்ல வேண்டும். ஒரே கட்டுரையில்
எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது. தீக்குளித்து
உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி என்னும்
இளம் பெண்ணின் இறுதிச் சடங்கின்போது,
திருமுருகன் எவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்டார்
என்பதை ஈழ ஆதரவாளர்கள் அறிவார்கள்.
அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

10) மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன்,
எழுத்தாளர் பாமரன், நடிகர் சிவகுமார் ஆகியோர்
பல்வேறு காலக்கட்டங்களில் திருமுருகனின் மோசடிகளை
அம்பலப் படுத்தியும், வன்மையாகக் கண்டித்தும்
மேடைகளில் பேசி உள்ளனர்.அவற்றையும் அடுத்துக்
காண்போம்.
**********************************************************
முகநூல் பகிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக