Palani Deepan
தீபாவளி.
தமிழகத்தின் மதுரைக்கு வடக்கே ஒரு பகுதியான மீன்புகார் என்ற நாட்டை
நாவலன் என்கிற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான்.
ஆட்சி நன்றாகப் போய் கொண்டிருந்த போது தேவதத்தன் என்கிற ஒரு அரச குரு
வந்து சேர்ந்தான். கூடா நட்பு. என்ன செய்வதென்று அரசன் அறியவில்லை.
இந்தக் கூடா நட்பால் பேருக்குத்தான் நாவலன் மன்னன். அவனை ஆட்டிவைததது
யாவும் அரச குருவான தேவதத்தனே.
நாவலனுக்கு தீபாவதி என்கிற அழகிய மகள் இருந்தாள். தீபா என்று செல்லமாக
நாட்டு மக்கள் அழைத்தனர்.
நல்ல கல்வி கேள்விகளில் ஈடுபட்டு, அரண்மனை வானில் முழு நிலவென உலாவந்து
கொண்டிருந்தாள்.
பார்த்தான் தேவதத்தன். ”இவளால் நமக்கும் நமது குலத்திற்கும் ஆபத்து
ஏற்பட்டுவிடுமே...” தமிழ்” போற்றப்படுமே...? தமிழர்க்ள உச்சத்திற்கு
சென்றுவிடுவார்களே என்கிற அச்சத்தில், மன்னனிடம், ”அரசே..., உமது மகள்
தீபாவதிக்கு தமிழ் தோசம் தாங்கி உள்ளது. இதனால் இந்த நாடு எதிரிகளின்
படையெடுப்பால் அழிக்கப்பட்டு, நீர் சிறை செல்ல நேரிடும்” என
அச்சுறுத்தினான்.
அரசன் ஏற்கனவே பகுதி மூடன். இதனை அப்படியே நம்பி, ”சுவாமி, என்ன
செய்யலாம்” என்றான்.
தேவதத்தன், ” உனது மகளை தங்கப்பெட்டியில் வைத்து, ஆற்றில் இறக்கி, இந்த
நாட்டைவிட்டே துரத்தி விடுவதுதான், இந்த தோசத்தைப் போக்குவதற்கு ஒரே வழி”
என்றான். அச்சப்பட்ட அரசன் அப்படியே செய்தான்.
நாவலனின் அடுத்த நாடான சோழபுரி இளவரசன் அருள்வர்மன். தீபாவதியின்
அழகையும் அறிவாற்றலைையும் அறிந்து ஒருதலையாக அவள் மீது காதல்
கொண்டிருந்தான்.
தனது உளவுத் துறையின் மூலமாக தேவதத்தனின் சூதினையும் தீபாவதிக்கு
ஏற்பட்டிருந்த ஆபத்தையும் அறிந்தான். அவனுக்கு பாடம் புகட்ட ஒரு திட்டம்
தீட்டினான்.
ஒரு வாலிப பசித்த புலியை, கொண்டுவந்தான். ஆற்றில் பெட்டியில் மிதந்து
வந்த இளவரசியை பாதுகாப்பாக மீட்டெடுத்தான், அந்தப் பெட்டியில் தான்
கொண்டு வந்த புலியை அடைத்து அனுப்பிவிட்டான்.
தேவதத்தன் எனும் அந்தக் கிழட்டு நரி, ஆற்றில் எப்படியும் இளவரசியை தாங்கி
வரும் தங்கப்பெட்டி ஒதுங்கிவிடும். அவளை பலாத்காரமாக அடைந்து,
கொன்றுவிட்டு, தங்கப்பெட்டியை அடைந்துவிட வேண்டியதுதான் என்கிற
மிதப்பில், குதிரையில் விரைந்து சென்றவன், பெட்டியை கைப்பற்றினான்.
திறந்தான்.
உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பசித்தப் புலி பாயும் புலியாகி,
தேவதத்தனை பதம் பார்த்து, பாவத்தின் சம்பளத்தை அவனுக்கு கொடுத்தது.
இதையாவற்றையும் அறிந்த நாவலன், தனது முட்டாள்தனத்திற்கு மிகவருந்தி, இனி
நம் நாட்டு மக்கள் யாவரும், நல்லறிவு பெற்று, மூடத்தனங்களை முழுமையாக
ஒழிக்க வேண்டும் என, ஒவ்வொரு வீட்டிலும், மூட இருளுக்கு எதிரான
குறியீடாக, தீபங்களை ஏற்றி, தீபாவதி நாளாக கொண்டாட வேண்டும் என
உத்தரவிட்டான்.
அன்று முதல் தமிழகத்தில் தீபாவளி கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூடத்தனங்களையும் முட்டாள்தனங்களை
யும் ஒழித்து ஒளி பெறுங்கள். உயருங்கள்.
அனைவருக்கும் தீபாவதி... மன்னிக்கவும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக