வியாழன், 21 செப்டம்பர், 2017

TNPSC குரூப் 1 ஊழல் முறைகேடு அரசாங்கவேலை வேலைவாய்ப்பு

2013 - ஆம் ஆண்டு நேரடி GROUP 1  அதிகாரிகளாக பதவி பெற்ற இளம் வயது
அதிகாரிகளின் ஊழல் பட்டியல்

1) இன்று (JUNE 29, 2017) தினமலர்  செய்தி தாளில்     திருவாரூர் R.D.O
முத்துமீனா போலி பட்டா மாற்றுவதற்கு 20  லட்சம்    ருபாய் லஞ்சம்
வாங்கியதாக செய்தி    (தனது கணவர் நடத்தும் செல்போன்  கடை மூலமாக
பணப்பரிமாற்றம் நடந்ததாக செய்தி)

2) விமல் ராஜ் R.D.O  (FEB 17, 2017 தினமலர் செய்தி) மணல் மாபியாக்களிடம்
லஞ்சம் வாங்கியதாக   செய்தி   (இவர் தாம்பரம், கரூர் மாவட்டம் குளித்தலை,
திருவள்ளூர் மாவட்ட  ஆறுகளில் மணல் அள்ளி தற்போது மீண்டும் குளித்தலைக்கே
சென்றுள்ளார்)

3) மதுராந்தகி R.D.O (MAY 5, 2016  விகடன் செய்தி)  சட்டப்பேரவை
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்வதற்கு அரசு
வாகனத்திலேயே பணம் கடத்தியவர்

4) சங்கமித்திரை Asst.Director, Panchayats (NOVEMBER 29, 2016 தினமலர்
செய்தி) - திருப்பூர் மாவட்டத்தில் இருந்த பொழுது தண்ணீரில் குளோரின்
தெளித்தலில் ஊழல்


5)   சரண்யா தேவி  Asst Director, Panchayats  வேலூர்
 ( APRIL , 2017   தினகரன் செய்தி) -
அலுவலக உதவியாளர் வங்கி கணக்கு மூலமாக பஞ்சயாத்துகளிடம் இருந்து பணம்
வசூல்  செய்தவர்)
பின்னர் மாவட்ட ஆட்சி தலைவராலேயே கட்டாய விடுப்பில் செல்லுமாறு
பணிக்கப்பட்டவர். இவர் புகழ் பெற்ற  "BITS PILANI"  என்ற  அறிவியல்
உயர்கல்வி  நிறுவனத்தில் படித்தவர்.



மேலே குறிப்பிட்ட அனைவரும் நேரடி  GROUP 1 அதிகாரிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டு  2013- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மெயின் தேர்வினை(MAIN EXAM) எழுதும்பொழுது நேர்மையான அதிகாரியான,
தற்போது பள்ளிக்கல்வி துறையில் செயலராக இருக்கும் திரு. உதய சந்திரன்
I.A.S.,  அவர்கள்தான் TNPSC செயலராக இருந்தார். மெயின் தேர்வினை மிகவும்
நேர்மையாக நடத்தி, நேர்மையான தேர்வு முடிவுகளை தயார் செய்து
வைத்திருந்தார்.

ஆனால்  மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்பொழுது கட்டாயத்தின்
பேரில், ஊட்டியில் இருக்கும் தேயிலை தொடர்பான அரசு  நிறுவனத்தில்,  தனது
தகுதிக்கு குறைவான இடத்தில்     அதிகாரியாக பணியிடமாற்றம்
செய்யப்பட்டார். இவர் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டதே, நேர்மையற்ற
GROUP 1 - மெயின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குதான் என்று தேர்வர்கள்
மத்தியில்  அப்போது பரவலாக பேசப்பட்டது.

மேற்படி இளம் ஊழல் அதிகாரிகளின் பின்புலம், பயிற்சி பெற்ற இடம் என்று
அனைத்தையும் விசாரித்தால், எல்லாம் ரமணா திரைப்படம் போன்று ஒரே
புள்ளியில் போய் நிற்கிறது.

தற்போதும் அந்த புள்ளியில் இருந்துதான் மெயின் தேர்வு மோசடி தொடங்குவதாக
மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்கள் நேற்றைய பேட்டியில்  "ஒரு சில பயிற்சி
மையங்கள்" என்று தெளிவாக     குறிப்பிட்டுள்ளார் ...

மேற்சொன்ன அனைத்தும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்ட உண்மைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக