புதன், 20 செப்டம்பர், 2017

தேவாரம் இந்து வார்த்தை இந்த என்ற பொருள் இலக்கியம் சொல்லாய்வு வேர்ச்சொல்

Ravi Subramanian உடன் வெ. பார்கவன் தமிழன் .
இந்து சிகாமணி எங்களை ஆள பெறிலே.. தேவாரத்துல இந்துங்கிற வார்த்தை
இருக்குனு ரொம்ப கடினப்பட்டு பொய்ய நிறுவ முயற்சி செய்கிறார்கள் இந்து
முண்ணனி பிரமுகர்கள்.. இந்து சிகாமணியின் அர்த்தத்தைவெ. பார்கவன் தமிழன்
போட்டுடைத்தால் நல்லது..

வெ. பார்கவன் தமிழன்
சொல்லிய லாதெழு தூமணி யோசை
சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள
எழுந்தரு ளப்பெறிலே.
சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப்
பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை
இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய
சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி
வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும்
அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ?
வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை,
இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள்
இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண்
குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?
--------
இங்கு இந்து மதத்தை குறிப்பதல்ல
பாடல் சந்தி பிரித்து பொருள் காண்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக