புதன், 20 செப்டம்பர், 2017

திருக்குறள் மாநாடு மே18 மலையாளி பெண் தலைமை சென்னை திசைதிருப்பல்

S Manickavasagam .
# உலகத்_திருக்குறள்_மாநாடு வருகிற 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் #
நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (Scott Christian College -
Nagercoil) யில்
நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடத்த, # தமிழ் மொழியுடனும்
# திருக்குறளுடனும் எந்தவொரு தொடர்பும் இல்லாத
# அஸ்வதி_திருநாள்
_கவ்ரி_லஷ்மி_பாய் என்ற அம்மணியை அழைத்து இருக்கிறர்கள். இவர் தமிழ்நாட்டின்
# மலையாளக்கரா திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர், ஆங்கிலத்தில்
சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார், அனைத்துமே
# மலையாள_நாடு தொடர்பான ஆங்கில புத்தகங்கள் தான்...... தமிழுக்கும் -
திருக்குறளுக்கும் - உலக திருக்குறள் மாநாட்டிற்கும் இவருக்கும் என்ன
தொடர்பு? .....
தமிழ்நாட்டிலும், பிறநாடுகளில் தமிழ்மொழி அறிஞர்கள், திருக்குறள் ஆய்வு
அறிஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கும்போது, இவரை அழைத்து ஏன் மரியாதை
செலுத்த வேண்டும்?
கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும்,
மாநாட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத இந்த நபரை ஏன் அழைத்து
கவுரவிக்கிறார்கள்?
இது உலகத் திருக்குறள் மாநாடா, அல்லது,
கௌரி பார்வதி பாய்
# கௌரவ_மாநாடா ?
திருவிதாங்கூர் # மகாராணி ?? யை கவுரவிக்க # திருக்குறள் தான்
இவர்களுக்கு கிடைத்ததா?
இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?
இது நேரடியாக நமது வீட்டுக்குள்ளே வந்து நமது மூஞ்சியிலேயே
காறித்துப்புவது போன்றது இல்லையா???
இதை தடுப்பதற்கு # மானமுள்ள தமிழ் அமைப்புகள் எதுவுமே தமிழ்நாட்டில் இல்லையா?
///////
இந்த மாநாட்டை, சென்னையில் இயங்கும் # இன்ஸ்டிட்யூட்_ஆ
ஃப்_ஏசியன்_ஸ்டடீஸ் என்ற கல்வி நிறுவனம் நடத்துகிறது. இந்த கல்வி
நிறுவனத்தின் நிறுவனர்
# ஜான்_சாமுவேல்_ராஜ் தமிழ் பேராசிரியராகவும், தமிழ் பல்கலைக்கழகத்தின்
மாமன்ற உறுப்பினராகவும், தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கையை
வரைவு செய்தவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் தவிர,
(நாகர்கோயில்) ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் "ஜேம்ஸ்
டேனியல்",(ஆரல்வ
ாய்மொழி) அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி யின் முன்னாள் முதல்வர் "பெருமாள்"
போன்றவர்களும் இந்த மாநாட்டை நடத்துவதில் இணைந்து பணியாற்றுகிறார்கள்
இவர்களுக்கெல்லாம் சூடு-சொரணை எதுவுமே இல்லையா?
6 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக