ரகு வசந்தன்
உலகத்தின் திசையெங்கும் விரிந்த ஈழத்தவர்களின் அகதிப் பயணங்களில்
மலேசியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. கனடா ஆகட்டும், லண்டன்
ஆகட்டும், பிரான்ஸ் ஆகட்டும் பயண வழியில் மலேசியா ஒரு சத்திரம்.
அப்படித்தான் எனக்கும்.
பயணங்கள் பற்றி என்னிடமும் நிறையக் கனவுகள் இருந்தன. ஆனால் காலம்- நிலம்,
நீர், ஆகாயமென ஆபத்தான பயணமொன்றை என்னில் திணிக்கும் என எதிர்பார்த்திரு
க்கவில்லை. நம்பிக்கைகளின் அழிவில் அது தனது வேலையைக் காட்டுகிறது. 2009
மார்ச் மாதத்தில் வலைஞர் மடத்தில் இராணுவம் புகுந்தபோது எல்லாம்
முடிந்தது என்று தலையில் கைவைத்து உட்கார்ந்த அண்ணர் ஒருவரிடம், “ஏன்,
முள்ளிவாய்க்கால் இன்னமும் இருக்குத்தானே..” என்று கேட்டவன்,
முள்ளிவாய்க்காலும் முடிந்த இரண்டு வருடத்தில், இனி எதுவும் இல்லையென்று
சிதைந்த பழைய நம்பிக்கைகளை கைவிட்டு புதிய நம்பிக்கைகளைச் சுமந்தபடி
புறப்பட்டிருக்கிறேன்.
மலேசியாவில் இமிக்ரேஷன் விசாரணைகளை முடிக்கும் வரைக்கும் நானொரு
ஆசிரியன். முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் அகப்பட்டு, உடலும் மனமும்
இயல்பிழந்து, முகாம்களில் அலைக்கழிந்து வெளியேறிய தோற்றத்தில் எங்கேனும்
ஓரிடத்தில், ஆசிரியக்களை தெரிந்திருக்க வேண்டும். விமான நிலையத்தை விட்டு
வெளியேறிய பத்தாவது நாள் இந்தோனேசியாவில் இருந்தேன்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் போகோர் என்றொரு இடம் உல்லாசப் பயணிகளால்
எப்பொழுதும் நிறைந்திருக்கிற குறிஞ்சி நிலம். அங்குதான் சீசருவா கிராமம்
இருக்கிறது. மலேசியாவில் இருந்து நீராலும் நிலத்தாலும் சீசருவாவுக்கு
வந்து சேர்ந்திருந்தேன்.
சீசரூவா தெருக்களில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் யாராவது இலங்கைத்
தமிழரிடத்தில் நீங்கள் முட்டுப்பட வேண்டும். பயணத்தை எதிர்பார்த்து, ஒரு
வருடத்திற்கும் மேலாக சீசருவாவில் தங்கியிருக்கின்ற மனிதர்கள் ஏராளம்.
அடுத்த வாரம், அடுத்த மாதம் என்று பயணம் இழுபட்டுக் கொண்டு போவதில்,
சற்று நம்பிக்கைகள் தூர்ந்து போயிருந்தாலும், கார்ட்ஸ் விளையாடுவது, நெட்
கபேயிற்கு போவது, பிறந்தநாள் பார்ட்டி செய்வது என்று காலத்தை ஓட்டிக்
கொண்டிருந்தார்கள்.
சீசரூவாவில தமிழ்ப் பிறந்த நாட்கள் அடிக்கடி வந்தன. நான், சசி, மோகன்
எல்லோரும் அலங்கார வேலைகளைப் பொறுப்பெடுத்து நடாத்துவோம். பலூன்
கட்டுவதில் சசி ஆள் விண்ணன். ஒரு கலை இயக்குனருக்குரிய நேர்த்தியோடு
எல்லாப் பார்வைக் கோணங்களிலும் நின்று பார்த்து, பலூன் கட்டுவார்.
நல்லாயிருக்கு, நல்லாச் செய்திருக்கிறீங்கள் என்ற ஒரு வார்த்தைதான்
அவருக்கான கூலி. அது போதும் அவருக்கு.
சிறுவர்களின் பிறந்த நாட்களில், படம் எடுக்கும் போது அவர்கள் தங்கள்
கைகளில், உயிரோடு இல்லாத அம்மாவின் படத்தையோ அல்லது அப்பாவின் படத்தையோ
ஏந்தியிருப்பார்கள். அப்போது யாருக்கும் அலங்காரங்கள் தெரியாது.
பலூன்களின் நிறங்களும் தெரியாது. கண்கள் கலங்கியிருக்கும். கலகலப்பற்ற
நிகழ்வுகளாக அவை மாறிவிடும்.
தனியே தமிழர்கள் என்றில்லை. ஈரான் ஈராக் ஆப்கான் வியட்நாம் என்று யுத்தம்
தின்ற நாடுகள் அனைத்திலுமிருந்து மனிதர்கள் புதியதும், கனவுகளை
விழுங்காததுமான வாழ்வொன்றைத் தேடி அங்கே தங்கியிருந்தார்கள். ஒன்றிரண்டு
சிங்களக் குடும்பங்கும் தங்கியிருந்தன.
அர்த்தமில்லாத வாழ்க்கையாகத்தான் சீசருவவில் போய்க்கொண்டிருந
்தது. இந்தக் கிழமை புறப்படுகிறோம் என்று கதைகள் வரும். ஒரே
பரபரப்பாயிருக்கும். பிறகு சத்தமில்லாமல் அது அமிழ்ந்து விடும். படகு
வாங்குவதற்காக இந்தோனேசியன் ஒருவனை ஒழுங்கு படுத்தியிருந்தார்களாம். அவன்
காசைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டானாம். இப்பிடியே காலம்
ஓடியது. பிறகொரு நாள் கிடைத்த தகவலில் அடுத்த கிழமை நிச்சயம் பயணம்
என்றிருந்தது.
என்னிடம் இரண்டு பைகள் மட்டுமே இருந்தன. மற்றவர்கள், இந்தோனேசியாவில்
வாங்கிய உடுப்பு, உலர் உணவு என்று நிரப்பி நான்கைந்து பைகளை
வைத்திருந்தார்கள். மூன்று மணிக்கு வாசலில் வந்து நிற்பதாக வாகனக்காரன்
தொலைபேசினான்.
உப்பிப் பெருத்த பைகளை முதுகில் சுமந்து கொண்டு 1770இல் கப்டன் குக்
ஆரம்பித்து வைத்த அவுஸ்ரேலியா நாடு காண் பயணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.
தனது இராச்சியங்களை மேலும் விரிபுபடுத்த குக் பயணித்தார். நாங்கள் இருந்த
இராச்சியங்களை இழந்து பயணிக்கிறோம்.
‘’ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏறுங்கோ’’ என்று வாகனத்தில் இருந்தவர் சொன்னார்.
அவரும் எங்களோடு பயணிக்கிற ஆள்தான். ஆனாலும் நெருக்கடி நேரங்களில் எந்தக்
குச்சொழுங்கை கிண்டுவதற்கு வசதி என்ற சூக்குமங்கள் தெரிந்தவர்.
ஜகார்த்தாவில் இரண்டு வருடங்கள் சுழன்றிருக்கிறார்.
டிரைவர் மஞ்சள் நிறத்தில் தாடி மீசையின்றி மொழு மொழுப்பாக இருந்தான்.
ஏறும்போது பக்கத்து வீட்டுப் பெண்கள் கண்டுவிட்டார்கள். யாராவது கண்டால்
ஜகார்த்தாவிற்கு வீடு மாறுவதாகச் சொல்ல வேண்டுமென்று முதலே
திட்டமிட்டிருந்ததால் ‘ஜகர்த்தா ஜலாங்’ ‘கமி ரூமா டி ஜகர்த்தா.’ என்று
கோர்த்து கோர்த்து சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
போகோரிலிருந்து ஜகார்த்தா நோக்கி கார்கள் புறப்பட்டன. நான்கு முதல் ஐந்து
வரையான குடும்ப ஆட்களுக்கு ஒரு கார் படி சுமார் 20 கார்களில் பயணம்.
ஜகார்த்தாவில் ஒரு நகரப்பகுதிக்கு வந்தபோது இரவு ஏழு மணியானது. இடையில்
வந்தாச்சா வந்தாச்சா என்று இரண்டு தடவைகள் போன் செய்து விட்டார்கள்.
ட்ரைவரான இந்தோனேசியனுக்கு இறங்க வேண்டிய சரியான இடம் பிடிபடவில்லை.
போனில் கதைத்துக் கொண்டு சுற்றி சுற்றி ஓடினான். ஓரிடத்தில் இரண்டு நீள
சொகுசு பஸ்கள் நின்றன. காரை அவற்றின் அருகில் நிறுத்திய பத்தாவது வினாடி
நாங்கள் பஸ்சுக்குள் இருந்தோம். பொதிகளும் ஏற்றப்பட்டன.
நேரம் இரவு 7.30. இரண்டு பஸ்களும் புறப்பட்டன. பஸ்ஸின் திரைச் சீலைகள்
இழுத்து விடப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டன. உள் விளக்குகள் அணைக்கப்பட்டன.
வெளிச்சமான இடங்களைக் கடக்கும் போது யார் யார் வருகிறார்கள் எனப்
பார்த்துக் கொண்டேன். சந்திரன், லக்சன், தீபன், ஆளவந்தான், அரவிந்தன் என
‘கடைசி வரிசை’ ஒரு களையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் சேர்ந்து
கொண்டேன்.
நகரப் பகுதியிலிருந்து விலகி பஸ் ஓடிக் கொண்டிருந்தது. வாகன நெரிசல்
பெரிதாக இல்லை. நள்ளிரவு 12 மணி தாண்டியது. ‘இன்னும் ஒரு மணித்தியாலம்
ஓடோணும்’. என்றான் ரதீஸ். முன்னரும் ஒருமுறை புறப்பட்டு இடையில் மாட்டிக்
கொண்டவன் அவன். அப்பொழுது பாய்ந்தோடி ஒன்றிரண்டு மதில்கள் பாய்ந்து, ஒரு
வீட்டின் பின்னால் சேற்றுக்குள் சத்தம் போடாமல் பதுங்கியிருந்து பொலிஸ்
நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து ரக்ஸி பிடித்து தப்பி வந்தவன்.
சுழியன். இவ்வளவிற்கும், பொல்லு ட்ரெயினிங் கூட எடுத்தவனில்லை. கடைசி வரை
குடத்தணையில் இருந்தவன். ஆனால் அவனது துணிகர தப்பியோட்டத்திற
்குப் பிறகு ஒருவேளை அவன் “அங்கை” இருந்திருப்பானோ என்று சின்னச்
சந்தேகம் எனக்கிருக்கிறது.
பஸ் பயணப்பாதையில், தென்னை மரங்களும் வெள்ளை மணலும் தெரிகிறது.
கிட்டத்தட்ட வந்துவிட்டோம். முன்னாலிருந்த இந்தோனேசியன் எழுந்து நின்று
சின்ன உரை ஆற்றுகிறான். அதன் தமிழ் சுருக்கம் வருமாறு.
“வாகனத்தை நிறுத்திய உடன் வேகமாக இறங்கி பொதிகளோடு இடப்பக்கமாக இருக்கிற
பாதையில் நகர வேண்டும். வேகம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.”
நம் ஆட்களைப் பார்க்கிறேன். பொதிகளைச் சுமந்தபடி பென்ட் மூவ் இலும் டக்
பொக்கிலும், நகர்ந்து கொண்டிருந்தார்கள். இந்தோனேசியன் எதிர்பார்த்ததை
விட வேகம்தான். யாரும் தடக்கி விழவில்லை. அருளக்கா மகளையும் இரண்டு
பைகளையும் சுமந்தபடி நடக்கின்றா. அவவுக்கு ஒரு கால் இல்லை. அது போருக்கு
காணிக்கையாகப் போய்விட்டிருந்த
து.
நீண்டதூரமில்லை. அருகில் தண்ணீர் தெரிகிறது. நான்கு சிறிய படகுகளில்
ஏற்றப்படுகிறோம். பயணத்தில் இதுவொரு முக்கியமான புள்ளி. இந்தோனேசியன்
நேவிக்கு சிறு அசுமாத்தத்தையும் காட்டக் கூடாது. ஒருவேளை அவன் உசாராகி
வந்தானென்றால் அவ்வளவும் தான்.
உலகின் மோசமான சிறைகளில் இந்தோனேசிய சிறைகளுக்கும் முக்கிய இடம் உண்டு.
குப்பையான, தொற்று நோய்கள் உடனே பரவக்கூடிய சூழல் என்றும், ஆட்களை மோசமாக
நடாத்துகிற சிறை அலுவலர்கள் என்றும் அவை அறியப்பட்டிருந்தன. எனக்கு
அதுபற்றிய யோசனைகள் பெரிதாக இல்லாவிட்டாலும், பிடிபட்டால் திரும்பவும்
முதலேயிருந்து தொடங்க வேண்டும் என்ற யோசனையும், அதற்கு இரண்டு மூன்று
வருடங்களாவது எடுக்கும் என்பதும்தான் அந்தரமாக இருந்தது. எத்தனை தரம்தான்
ஒருவன் முதலேயிருந்து தொடங்க முடியும்.
ஆனந்தன் ஒரு காலோடு படகில் ஏறச் சிரமப் படுகிறார். கை கொடுத்து ஏற்றி
விடுகிறேன். பொதிகளையும் அவரிடமிருந்து வாங்கி படகில் வைத்தேன். ஒவ்வொரு
படகுகளிலும் நாலைந்து இந்தோனேசியர்கள் இருந்தார்கள். படகுகள் மெதுவாக
நகரத் தொடங்க ஒரு பையை நீட்டிக் கொண்டு வந்தார்கள். “இந்தோனேசியப் பணம்
இனித் தேவையில்லை. இதற்குள் போடுங்கள்.” என்னிடம் முப்பதாயிரம் மட்டும்
இருந்தது. கொடுக்காவிட்டால் கடலில் தூக்கிப் போடுவார்களோ என்றொரு
நினைப்பு வந்தது.
எனக்கு நீந்த முடியும். சுமார் நூறு மீற்றர்கள் வரை நீந்துவேன். ஆனால்
அவுஸ்ரேலியா எத்தனை ஆயிரம் கிலோமீற்றர் என்று தெரியவில்லையே.. பணத்தைக்
கொடுத்தேன்.
சிறிய படகுகள் பத்து நிமிடங்கள் நீரில் நகர்ந்து, கப்பலும் இல்லாத படகும்
இல்லாத ஒரு கலத்தை அடைந்து நின்றது. எழுபது அடி நீளத்திலும் பன்னிரெண்டு
அடி அகலத்திலும் அது இருக்கலாம். கீழ்தட்டும் மேற்தட்டும் இருக்கிறது.
பழைய கலம். எங்கேயோ அறா விலைக்கு வாங்கியிருப்பார்கள் போல. கிரான்ட்மா
என்று பெயராம். ஆட்கள் அதற்குள் மாற்றப்படுகிறார
்கள். பொருட்களை எழுந்த மானத்திற்கு தூக்கித் தூக்கி எறிந்தார்கள்.
அசோக் அண்ணன் கபினுக்குள் போன பிறகு எஞ்சின் இரைகிற சத்தம் கேட்கிறது.
நான், ஆளவந்தான், தீபன், லக்சன், சசி எல்லோரும் மேல் தட்டில் ஏறிக்
கொள்கிறோம். வானம் நட்சத்திரங்களோடு விரிகிறது. முன்னொரு காலம்,
இராஜேந்திர சோழன், இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்கள் வரை கப்பலில் வந்து
தனது கொடியை நாட்டிச் சென்றிருந்தானாம். அவற்றை முன்னர்
பாடப்புத்தகங்களில் படிக்கும் போது ஆச்சரியமாயிருக்
கும். இன்றைக்கு இந்தோனேசியாவையும் தாண்டி, இராஜேந்திரன் காணாத கடற்
பாதைகளின் ஊடாக பயணிக்கப் போகின்றோம்.
கப்பல் எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை.
ஆடாமல், ஆடினாலும் கவிழாமல், கவிழ்ந்தாலும் தாழாமல் எங்களைக் கொண்டுபோய்
சேர்த்து விட வேண்டும். இப்படி அவுஸ்ரேலியா புறப்படுகின்ற பல படகுகள்
போய்ச் சேர்ந்த பிற்பாடோ, வழியில் கடற்படையால் மீட்கப்பட்ட பின்னரோதான்
செய்திகள் வருகின்றன. போய்ச் சேராத பல படகுகளின் கதைகளை அலைகளும் ஆழக்
கடலும் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றன.
சேகுவராவையும் அவரது குழுவையும் இப்படியொரு கப்பல்தான் கியூபாவிற்குள்
கொண்டு போய் சேர்த்தது என ட்ரொஸ்கியின் புத்தகமொன்றில் படித்தது என்
நினைவுக்கு வர கூடவே சிரிப்பும் வருகிறது.
எஞ்சின் இரைந்து கொண்டிருக்கிறதே தவிர கிரான்ட்மா நகர்ந்ததாகத்
தெரியவில்லை. கபினுக்குள் அசோக் அண்ணன் கத்துகிறார். ‘’கூலிங் பம் வேல
செய்யுதில்ல. தண்ணி இழுக்கிறது காணாது.’’
எஞ்சின் சூடேறாமல் பார்த்துக் கொள்வது கூலிங் பம் இயந்திரத்தின் வேலை.
அது சரியாக தொழிற்படாவிட்டால் எஞ்சின் இறுகிவிடும். துரையண்ணன் உள்ளே
சென்று என்ன ஏதென்று பார்க்கிறார். ஆள் பேசாலைக்காரன். இன்னும் விஷயம்
தெரிந்த ஆக்கள் போய்ப் போய் வருகிறார்கள். இந்தோனேசியன்கள் ஒரு
முடிவுக்கு வந்து பம்மைக் கழற்றி கரைக்கு கொண்டு சென்று திருத்தி
வருவதற்காக யாரோடோ தொலைபேசுகிறார்கள்.
சனங்களுக்குள் புறு புறுப்புத் தொடங்குகிறது.
‘இந்த நேரத்தில எங்கடா மெக்கானிக்கப் பிடிக்கப் போறாங்கள்’ -ஆளவந்தான்.
‘இப்பிடி லேற் ஆகிக் கொண்டு இருந்தா நேவி வந்திடுவான்’. -ரதீஸ்.
‘பிடிச்சானோ 2 வரியம் உள்ளுக்கை.’ – இன்னொருவர்.
இந்தோனேசியன்கள் கழற்றிய இயந்திரத்தை ஒரு படகில் கொண்டு புறப்பட
எல்லோருக்கும் ‘உள்ளுக்கை’ ஞாபகம் வருகிறது. இடையில் சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தன்கள் ஒன்றிரண்டு பேர் அங்கிருந்த பழைய கூலிங் பம்மைப்
பொருத்தி நோண்டிக் கொண்டிருந்தார்கள்.
நேரம், நள்ளிரா 2.30
ஒபரேஷன் என்டர்பேயில சொல்வது போல ‘ஒருவரும் எழும்பி நிக்க வேண்டாம் ‘
என்று அசோக் அண்ணன் சொல்கிறார். “பம் திருத்திக் கொண்டிருக்கினம். விடிய
ஆறு மணிக்கு முன்னம் வந்திடுவினம்.”
நாங்கள் நீட்டி நமிர்ந்து படுக்கின்றோம். எங்களது எதிர்காலம் எப்படி
இருக்கப் போகின்றது என்பதை தீர்மானிக்கின்ற தருணங்களாக அவையிருந்தன.
எதிர்பாராத திருப்பங்களோடு நகர்கிற வாழ்க்கை நாடகத்தில், இப்பொழுது
வெறும் கூலிங் பம் முக்கிய பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறது.
அதிகாலை நான்கரை இருக்கலாம். “மேல படுத்திருக்கிற ஆட்களை இறங்கட்டாம்”
என்று சசி வந்து சொல்லிவிட்டுப் போகிறான். எல்லோரும் இறங்கினோம். ஒரு
படகில் கறுப்பு மனிதர்கள் நிறைய இருப்பதைப் பார்த்து யாரும் நேவிக்கு
அறிவித்து விடலாம் என்பதால் புறப்படும் வரை அனைவரையும் ஹச்சிற்குள்
வைத்திருக்க அசோக் அண்ணன் முடிவெடுத்தார்.
ஹச், என்பது படகின் கீழ்தளம். கிட்டத்தட்ட ஒரு பாதாள அறை மாதிரி. மேலே
மூடி ஒன்றால் மூடப்பட்டிருக்கும். பெரும்பாலும் ஹச்சிற்குள்
பொருட்களைத்தான் வைத்தெடுப்பார்கள். அவசரத்திற்கு ஆட்களும் இருக்கலாம்.
என்ன.. மூடு பதுங்கு குழியை விட பயங்கரமான வெக்கையாக இருக்கும். மூச்சு
விட முடியாது.
சுரேன் ஹச்சிற்குள் இறங்கி, கீழ் இறங்குகிற பெண்களைத் தாங்கி இறக்கினான்.
ஒரு அர்ப்பணிப்போடு அதைச் செய்தான் என்று நினைக்கிறேன். சற்றுத் தள்ளி
நின்று சசி உன்னிப்பாக சுரேனைப் பார்த்துக் கொண்டு நின்றான். என்னவோ,
இறங்குகிற பெண்களுக்குள் தனது ஆள் இருப்பது போலவும் ஆளை சுரேன் எப்படி
கையாளுகிறான் என்பதை நோட்டம் விடுவது போலவும் அந்தப் பார்வை இருந்தது.
“ஆண்டவரே, இந்தக் கப்பலுக்கை ஒரு பொம்பிளைப் பிரச்சினை ஏற்படாமல்
காத்தருளும்” என்று நான் வேண்டிக்கொண்டேன்.
எல்லோரும் இறங்கிய பிறகு கடல் தெரிந்த சுரேன், ரதீஸ், துரை அண்ணன், சசி,
நிசாந்தன் ஆகியோர் அசோக் அண்ணனுடன் மேலேயே நின்றார்கள்.
நேரம் காலை ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. ஹச்சுக்குள் நிலைமை மல்லாவி பஸ்
கணக்கில் இருந்தது. ஒருவரின் காலுக்குள் மற்றவரின் தலையும் ஒருவரின்
கையில் இன்னொருவரின் பையுமென ஒரே இறுக்கம். மொத்தம் எண்பது பேர்
அடைபட்டிருந்தார்கள். வெளியே போவமென்றால் நாலைந்து பேரின் தலையை மிதிக்க
வேண்டிவரும். ஹச் மேல் மூடியும் மூடப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக உடலைச்
சரித்தேன்.
வெளியே ஆட்களின் நடமாட்டம் கேட்கிறது. பவான் மெதுவாக மூடியைத் திறந்து
இந்தோனேசியன்கள் திரும்பியதை உறுதிப்படுத்தினார். நேரம் ஆறு மணி ஆக, இனி
வானம் வெளிக்கத் தொடங்கும். மேலும் தாமதிக்க முடியாது. ஏற்கனவே
“கவனித்து” வைத்திருக்கிற நேவியினரின் ஷிப்ட் முடியலாம். இனி வருபவன்
எப்படியென்றும் தெரியாது. அவர்களையும் கவனிக்க வேண்டியேற்படலாம்.
எஞ்சின் திரும்பவும் இரைகிறது. கிரான்ட்மா அசைவதை, அதன் அடிவயிற்றில்
இருந்து உணர முடிகிறது. ஹச்சின் மூடியைத் திறந்து பார்த்தேன். வெளியே
இன்னமும் பரபரப்பாகவே இருக்கிறது. ஒரே எத்தில் வெளியே வந்தேன். பதுங்கு
குழியை விட்டு வந்ததைப்போல இருந்தது. வெளியே ரதீஸ் படுத்திருந்தான்.
அருகாக படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தேன். தெளிவாயிருந்தது.
கிரான்ட்மா வேகமெடுக்கிறது. ஹச்சிற்குள் இருந்து ஒவ்வொருவராக வெளியே
வருகிறார்கள். யாரும் பெண்கள் வெளியே வர விரும்பினால் அவர்களுக்கு
உதவுவதற்காகவே பொறுப்புணர்ச்சியோடு சுரேன் வாசலில் படுத்திருக்கிறான்.
பணிஸ் பிஸ்கட் பைக்கற்றுகளை உடைத்து, ரதீஸ் பெண்களுக்கும்
சிறுவர்களுக்கும் விநியோகிக்கத் தொடங்கினான். அவன் வேர்ல்ட் விஷனில் வேலை
செய்தவன். இந்தமாதிரியான வேலைகள் நன்றாக ஓடும்.
நான் கபின் பக்கம் போகிறேன். அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகுகின்றன.
கிரான்ட்மா அலைகளில் ஏறி இறங்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சமயங்களில்
ஆடுகிறது. கபினுக்குள், நீண்ட முடி வளர்த்திருந்த இந்தோனேசியன் ஒருவன்
அசோக் அண்ணனுக்கு ஜி பி எஸ் பற்றி விளக்குகிறான். அசோக் அண்ணன் என்னைப்
பார்த்து புருவத்தை அசைத்து சின்ன சிரிப்பு சிரிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக