ஆய்வறிஞர் குணா
அலெக்சாண்டரின் படையெடுப்பைப்பற்றி முகநூலில் நான் இட்ட பதிவின் கடைசி
பத்தியில் “சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்றுவிக்கப்பட்டதாக
பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது
நினைவில் இல்லை.)” என்று குறிப்பிட்டிருந்தேன். பாவாணர் அவ்வாறு
கூறவில்லையென அதை ஓர் அன்பர் மறுத்துள்ளார்.
என்னுடைய நூல்களிலும் கட்டுரைகளிலும் பொதுவாக வரிக்கு வரி நூல்
சான்றுகளைக் காட்டித்தான் எழுதுவது வழக்கம். முகநூல் பதிவுகளில் நான்
அவ்வாறு செய்யவில்லை. அதை இனிச் செய்வேன்.
பாவாணர் அவ்வாறு சொல்லியிருப்பதை பல்லாண்டுகளுக்குமுன் பார்த்த நினைப்பு.
அதனால்தான் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.
எழுத்தே இல்லாத சமற்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழகத்தில்தான்
முதன்முதலில் எழுத்துமுறை உருவாக்கப்பட்டது.1 அது தமிழ் எழுத்தமைதியைத்
தழுவியே செய்யப்பட்டது. அந்த எழுத்து முறையைக் ‘கிரந்தம்’என்றனர்.
அதனால், கிரந்தம் என்பது ஒரு தனி மொழி அன்று.
“வடமொழிக்கு முதன்முதலில் எழுத்து ஏற்பட்டது
தமிழ்நாட்டில்தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று
திரிந்த கிரந்த வெழுத்து.....
“கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச்
சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு
மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக்
‘கிரந்தாட்சரம்’என்றனர்”2
என்று பாவாணர் கூறுவது அதை மெய்ப்பிக்கிறது.
சமற்கிருத மொழிக்கான முதல் இலக்கணநூல் ‘ஐந்திரம்’என்பத
ேயாகும். ஐந்திரம் என்பது தூய தமிழ்ப்பெயர்.
‘ஐந்திரம்’ எனும் தமிழிலக்கண நூலைத் தழுவியே பாகத மொழிக்கும் சங்கத
மொழிக்கும் இலக்கணம் வகுத்தனர். பாழி மொழிக்கான காச்சாயனம் எனும் இலக்கண
நூலையும் சமற்கிருத மொழிக்கான காதந்திரம் எனும் இலக்கண நூலையும்
ஐந்திரத்தை அடியொற்றியே எழுதினரென ஆர்த்தர் கோக் பர்னெல் (Arthur Coke
Burnell, 1875) On the Aindra School of Sanskrit Grammars எனும் நூலில்
கூறுகிறார்.3 பாழி மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் எழுதிய காச்சாயனர்,
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.4
சமற்கிருத மொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி, அவருக்குமுன் சமற்கிருத
மொழிக்கிருந்த பதினோர் இலக்கண நூல்களில் ஐந்திரம் முதலாவதெனச் சொல்வதாக
பர்னெல் கூறுகிறார்.5
ஐந்திரத்தை இந்திரனே எழுதியதாகச் சொல்லி சமற்கிருதத்தில் அதை
‘இந்திரவியாகரணம்’ என்றனர். ஐந்திரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிற திபேத்திய
இலாமாவான ‘தாரநாதர்’,
‘இந்திரவியாகரணமே [ஐந்திரமே] மிகப்
பழமையானது; அது தமிழ்நாட்டில் விளங்கியது;
அஃது ஆரியர் தேசத்து நூல் அன்று; தேவருலகத்து
நூல்’ 6
என்று கூறுகிறார். சமற்கிருதத்திற்காக மட்டுமே இயற்றப்பட்ட முதல்
இலக்கணநூல் தமிழகத்தில்தான் எழுதப்பெற்றது என்பதே அவருடைய கருத்து.
தொடக்கத்தில் ஐந்திரம் சமற்கிருதத்திற்காக இயற்றப்பட்ட இலக்கணநூலெனப்
பாவாணர் கருதினார். ஆயினும், அது தமிழைத் தழுவி தமிழ்நாட்டில்தா
ன் தோன்றியதென அவர் சொல்லிவந்தார்.
“பிராதிசாக்கியங்கள் என்னுங் கிளைவேத
இலக்கணங்களும், ஐந்திரம் என்னும் வடமொழி
முதற்பேரிலக்கணமும், தமிழிலக்கணத்தைப்
பின்பற்றி யெழுந்தவையே. ஐந்திரம்
தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே
அழிந்ததாகத் தெரிகின்றது.
‘புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணுவர் கோமான் விழுநூ லெய்துவிர்’ (11:98-99)
என்னும் சிலப்பதிகார அடிகள் கவனிக்கத்தக்கன.”7
என்றும்,
“வேதக் காலத்திலேயே முதன்முதல் தோன்றிய
சமற்கிருத இலக்கணம் ஐந்திரம். அது
தமிழகத்திலேயே தோன்றியதாகத் தெரிகின்றது.”8
என்றும்,
“வேத சாகைகட்கு ஏற்பட்ட பிராதிசாக்கியம்
என்னும் ஒலியிலக்கணங்களும், தமிழ்
நெடுங்கணக்கைப் பின்பற்றிய கிரந்தாட்சரம்
என்னும் வண்ணமாலையும் வரிவடிவும்
வேதமொழியொடு ஆயிரக்கணக்கான
தென்சொற்களைச் சேர்த்தமைத்த சமற்கிருதம்
என்னும் அரைச் செயற்கையான நடைமொழியும்,
தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருத
எழுத்திற்கும் சொல்லிற்கும் வகுத்த ஐந்திரம்
என்னும் வியாகரணமும், வேத ஆரியரான
பிராமணர் தமிழரொடு தொடர்புகொண்டபின்
இயன்றவையே.”9
என்றும் அமைந்த பாவாணரின் கூற்றுகள் அதைக் காட்டுவன.
பின்னர், ஐந்திரம் தமிழில் எழுதப்பட்ட இலக்கணமா, சமற்கிருதத்தில்
எழுதப்பட்ட இலக்கணமா என்பது தெரியவில்லை என்று பாவாணர் கூறலானார்.
“ஐந்திரம் என்பது வடமொழி யிலக்கணமா
தென்மொழி யிலக்கணமா என்று திட்டமாய்க்
கூற இயலவில்லை. ஆயினும், இந்திரன் -- ஐந்திரம்
என்னும் திரிபாகுபெயர் (தத்தி தாந்த)
முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக “முந்துநூல்
கண்டு”எனச் சில நூல்களைப் பனம்பாரனார்
குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே
யெனக் கொள்ள இடமுண்டு. ஆதலால்,
‘புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவீர்’ (சிலப்.11 : 98-99)
‘கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டியற்கை விளக்கங் காணாய்’ (சிலப். 15 : 4-5)
என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையிற்
கூறினது மென்க.”10
என்று பாவாணர் கூறுவது அதைக் காட்டுகிறது.
சங்கத மொழிக்கு வேறு சில இலக்கண நூல்கள் வந்த பின், ஐந்திரம் எனும்
தமிழிலக்கண நூலின் மூலத்தையே முற்றாக இல்லாதொழித்தனர்.
“புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்11
என்னும் சிலப்பதிகார அடிகளை நோக்கின்,
பாணினியின் ஏமாற்றை மக்கள் நம்பி
அவரிலக்கணத்தையே போற்றிப் பயிலுமாறு,
தமிழ்த்தொடர்பு காட்டும் ஐந்திர வியாகரணப்
படிகளை யெல்லாம் தொகுத்து, அழகர்மலை
யடுத்ததும் மக்கள் வழங்காததும் ஆழம்
மிக்கதுமான ஒரு பொய்கைக்குள்
எறிந்துவிட்டதாகக் கருத இடமுண்டாகிறது.
தமிழகத்துத் தோன்றிய ஐந்திரம் தமிழகத்திலேயே
அழியுண்டது போலும்!”12
என்று பாவாணர் அதைப்பற்றிக் கூறுகிறார்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், சங்கதமொழி தமிழ்நாட்டில்தான்
தோன்றியதென்பதும், தமிழ்நாட்டில்தான் அஃது எழுத்தும் இலக்கணமும் கொண்டது
என்பதும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்படுகின்றன.
நூற்குறிப்புகள்
1. Grantha Script, http://en.wikipedia.org/wiki/ Grantha_script
2. ஞா. தேவநேயப் பாவாணர், வடமொழி வரலாறு,, இரண்டாம் பகுதி, தமிழ்மண்
பதிப்பகம், சென்னை, 2000, பக்கம் 127.
3. முனைவர் சிலம்பு நா. செல்வராசு, தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல்
ஆய்வு, பக்கம் 140.
4. Aindra School of Grammar, http://
en.wikipedia.org/wiki/Aindra_ School _of_Grammar; தி. வை. சதாசிவப்
பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 22.
5. , http://en.wikipedia.org/wiki/
Aindra_School _of_Grammar..
6. முனைவர் சிலம்பு நா. செல்வராசு, தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல்
ஆய்வு, பக்கங்கள் 135-36.
7. ஞா. தேவநேயப் பாவாணர், இலக்கணக் கட்டுரைகள், தமிழ்மண் பதிப்பகம்,
சென்னை, பக்கம் 123.
8. ஞா. தேவநேயப் பாவாணர், வடமொழி வரலாறு-2, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 150.
9. ஞா. தேவநேயப் பாவாணர்,, வடமொழி வரலாறு-1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 42.
10. ஞா. தேவநேயப் பாவாணர், ஒப்பியன் மொழிநூல் பகுதி-2, பண்டைத் தமிழகம்,
தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக்கம் 7.
11. சிலப்பதிகாரம், காடுகாண் காதை 98-99.
12. ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் வரலாறு-2, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 57.

1. Grantha Script, http://en.wikipedia.org/wiki/
2. ஞா. தேவநேயப் பாவாணர், வடமொழி வரலாறு,, இரண்டாம் பகுதி, தமிழ்மண்
பதிப்பகம், சென்னை, 2000, பக்கம் 127.
3. முனைவர் சிலம்பு நா. செல்வராசு, தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல்
ஆய்வு, பக்கம் 140.
4. Aindra School of Grammar, http://
en.wikipedia.org/wiki/Aindra_
பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 22.
5. , http://en.wikipedia.org/wiki/
Aindra_School _of_Grammar..
6. முனைவர் சிலம்பு நா. செல்வராசு, தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல்
ஆய்வு, பக்கங்கள் 135-36.
7. ஞா. தேவநேயப் பாவாணர், இலக்கணக் கட்டுரைகள், தமிழ்மண் பதிப்பகம்,
சென்னை, பக்கம் 123.
8. ஞா. தேவநேயப் பாவாணர், வடமொழி வரலாறு-2, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 150.
9. ஞா. தேவநேயப் பாவாணர்,, வடமொழி வரலாறு-1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 42.
10. ஞா. தேவநேயப் பாவாணர், ஒப்பியன் மொழிநூல் பகுதி-2, பண்டைத் தமிழகம்,
தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக்கம் 7.
11. சிலப்பதிகாரம், காடுகாண் காதை 98-99.
12. ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் வரலாறு-2, தமிழ்மண் பதிப்பகம், சென்னை,
பக்கம் 57.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக