புதன், 20 செப்டம்பர், 2017

திருக்குறள் முனுசாமி வன்னியர் குறள் திருவள்ளுவர்

75 ஆண்டுகளுக்கு முன்பே பட்டி தொட்டி எல்லாம் திருக்குறள் பரப்பபட்டது!
திருக்குறள் வீ.முனிசாமி (வன்னியர்)
திருச்சி தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே ஐயா
முனுசாமிக்கு அவர்களுக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது.
1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை
நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக
இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்
1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது
திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.
1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள்
மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை
புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள்
வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார்,
வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள்
தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.
தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில்,
பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை,
இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்....
(பதிவின் தகவல் உதவி நண்பர் கார்த்திகேயன் ராஜு... நன்றி..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக