புதன், 20 செப்டம்பர், 2017

பள்ளர் சாதி பிற்கால சோழர் காலத்தில் உருவானது பள்ளு குமரிமைந்தன்

சாதி வரலாறுகள் உருவாகும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வி
தத்துக்கு ஒரு பதமாக நாடார்களின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வை இத்துடன்
இணைத்துள்ளேன். இதே முறையில் பள்ளர்களின் வரலாற்றை அணுகலாம் என்பது எனது
வேண்டுகோள்.கி.பி.10ஆம் நூற்றாண்டில் பள்ளர் என்ற சொல் இராசராசன்
கல்வெட்டொன்றில் வெளிப்பட்டுள்ளதாக மள்ளர் மலர்இதழொன்றில் படித்தேன்.
அப்படியானால் பள்ளர் என்ற சாதியின் தோற்றம் கிட்டத்தட்ட அந்தக்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கா
லகட்டத்தில் இருக்கலாம். சோழப் பேரரசின் காலத்தில்தான் பழைய சாதிகள்
மறைந்து எண்ணற்ற புதிய சாதிகள் உருவாயின. எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டு
அவற்றின் கீழ் நிலங்களும் அவற்றோடு பண்ணையடிமைகளும் கொண்டுவரப்பட்ட
காலத்தில் கோயில் கட்டுமானம், பராமரிப்பு, குத்தகை வேளாண்மை என்று புதிய
வேலைப் பங்கீடுகளும் தொழில்களும் அதன் விளைவான சாதிகளும் உருவாயின என்பது
வரலாறு.
பின்னர் நீங்கள் அடிக்கடி கூறுவது போல் 17ஆம் நூற்றாண்டு வாக்கில்
அவர்கள் ஒரு வலுவான மக்கள் குழு
வினராக உருவான போது பள்ளுப்பாடல்கள் உருவாகியிருக்கலாம்...
[6]. சோழப் பேரரசுக் கால வரலாற்றை ஊன்றிப் பார்த்தால் பள்ளர்களின்
தோற்றம் பற்றிய புதிர் விடுபடக் கூடும்.அவ்வாறு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வி
டுபடுவதால் புதிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. பிற சாதிகளைப் போல்
பள்ளர் சாதிகளும் ‌‌‌மாயை, மக்களின் இடப்பெயர்ச்சிகள், அரசியல்
கொந்தளிப்புகளின் விளைவாகப் புதிதாகத் தோன்றிய சாதியே இதுவும் என்பது
தெரியவரும்.
அப்போதும் அடிமை, கொடுமை விலங்குகளை உடைத்தெறியும் உறுதியான படையாகிய
பொருளியல் வளர்ச்சியே தீர்வு என்பது புலப்படும். எதிர்காலம்தான் நம்
குறிக்கோள். எனவே உண்மையான வரலாற்று அணுகலுடன் எதிர்காலச்
செயற்பாட்டுக்கு ஆயத்தமாகுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
அன்புடன் குமரிமைந்தன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக