அச்சத்தின் வெளிப்பாடே தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படை என்பது
உளவியலாளர்களின் கருத்து. ஆனால் அகத்தையும் புறத்தையும் தம் வாழ்வியலாகக்
கொண்ட தமிழன் காதலைக் காட்டிலும் வீரத்திற்கே பெருமதிப்பளித்தான்.
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.( புறம்-335)
எனும் புறநானூற்றுப் பாடல் நடுகல்லைத் தோழுவதன்றி நாம் வணங்குவதற்கு வேறு
சிறந்த கடவுள்கள் இல்லை என்று கூறுகிறது.
இப்பாடலை அடிப்படையாக வைத்துக்கொண்டு ‘ தமிழரின் வழிபாடு நடுகல்தான் !
பிற தெய்வ வழிபாடுகள் எல்லாம் வந்தேறிகளால் தமிழகத்தில்
புகுத்தப்பட்டவையே' என்று ஒருசாரர் கருதுகின்றனர்.
மேற்கூறப்பட்ட புறநானூற்றுப் பாடலின் முழுப்பொருளையும் நாம் அறிதல் வேண்டும்.
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
பொருள்:
குரவு,தளவு,குருந்தம், முல்லை இவையின்றி வேறு சிறந்த பூக்கள் கிடையாது.
வரகு, தினை, கொல், அவரை என்பனவன்றி வேறு சிறந்த உணவுப் பொருள் இல்லை.
துடியன்,பாணன், பறையன்,கடம்பன் இந்நால்வர் அன்றிச் சிறந்த குடிகள்
வேறில்லை. களத்தில் களிற்றை வென்று, தாமும் இறந்த வீரனின் நடுகல்லைத்
தொழுவதன்றி வேறு சிறந்த கடவுள்கள் இல்லை.
இதுவே அப்பாடலின் பொருள். இக்கருத்து, பாடலைப் பாடிய மாங்குடிக் கிழாரின்
(மாங்குடி மருதனார்) தனிப்பட்ட கருத்து. அவ்வளவே! ஒரு திமுக வைச் சார்ந்த
தொண்டன் அண்ணாதான் சிறந்த தலைவர் என்பான்.காங்கிரஸ் கட்சிக் காரன்
காமராசர் போல் ஒரு தலைவரை பார்க்க முடியாது என்பான்.ஒரு கம்யூனிஸ்ட்
கட்சிக் காரன் ஜீவாவைப்போல் ஒருசிறந்த தலைவர் உண்டா என்பான்.இது அவரவரின்
சொந்தக் கருத்து. அதுபோல்தான் மாங்குடிக் கிழாரும் ஒரு வீரனின் நடுகல்லை
வழிபடுவதைவிடச் சிறந்த தெய்வம் வேறில்லை என்கிறார்.
இதே புலவர் தாம்பாடிய மதுரைக் காஞ்சியில் தொல்முது கடவுள்
(அடி-41),முழுவாள் நெடியோன்(அடி-455) என்று சிவனையும்,அருங்
கடி வேலன் முருகொடு(அடி-611) என்று முருகனையும் சுட்டுகிறார்.
மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். இவனே நக்கீரர் பாடிய நெடுநல்வாடையின்
பாட்டுடைத்தலைவனாகவும் கருதப்படுகின்றான்.இதே நக்கீரர்தான் முருகனின்
ஆறுபடை வீடுகளையும் சிறப்பித்து திருமுருகாற்றுப்படை பாடியுள்ளார்.
தொல்காப்பியர் காலத்திலேயே குறிஞ்சி நிலத்துக்கு முருகனும், முல்லை
நிலத்திற்கு மாயோனும் (திருமால்), மருத நிலத்திற்கு இந்திரனும் ,நெய்தல்
நிலத்திற்கு வருணனும் தெய்வங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
நடுகல் வழிபாட்டிலிருந்துதான் சிறுதெய்வ வழிபாடுகள்(குலத
ெய்வங்கள்) தோன்றின. சிறுதெய்வ வழிபாடுகளின் வளர்ச்சி நிலைதான்
பெருந்தெய்வ வழிபாடுகள்.
சிவன், திருமால்,முருகன
்,கொற்றவை போன்ற பெருந்தெய்வங்களும் , அய்யனார், கருப்பசாமி, முனியப்பன்,கண்ண
கி,மாரியாத்தாள்,பூவாத்தாள் ,சடையம்மாள் போன்ற சிறுதெய்வங்களும் தமிழ்த்தெய்வங்க
ளே!
-பாரி சாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக