வியாழன், 21 செப்டம்பர், 2017

யானை மழை வரவைக்கும் முருகன் இலக்கியம் நாட்காட்டி அறிவியல் வானியல்

யானைகளைப் பற்றிய பழந்தமிழ்ப் பதிவுகள் தமிழர்களுக்குப் புதிய
தோற்றத்தைக் காட்டும் தகுதியில் உள்ளன.
அகநானூற்றுப் பாடல்களில் மட்டும் 167 பாடல்களில் யானைகள் இடம்பெற்றுள்ளை.
புறநானூற்றுப் பாடல்களில் மட்டும் 144 பாடல்களில் யானைகள் இடம்பெற்றுள்ளன.
இவை தவிரவும் பழந்தமிழ்ப் பரப்பில் சற்றொப்ப 200 இடங்களில் யானைகள் பேசப்பட்டுள்ளன.
இருக்கட்டும் இருக்கட்டும்.
தமிழைப் படித்தால் தானே யானைகளைப் படிக்க முடியும் ?
கான யானைகள் இனமாக வாழ்கின்றன.
தமிழர்களின் அறிவில் கணிசமான பகுதி யானைகளின் அறிவு.
அவ்வாறே
யானைகளின் அறிவில் கணிசமான பகுதி தமிழர்களின் அறிவு.
குறிப்பாக மழை .
மழை பற்றிய அறிவு.
வான் வாய் திறக்க
விசும்பு மெய் அகல
பெயல் புரவு எதிர
மழையைக் கொண்டு வர யானைகள் மேற்கொள்ளும் முயற்சி தான்
உண்மையான ஓகம்.
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி (அகம் 43)
சிறு கண் யானை பெருங்கை நீட்டி வான் வாய் திறக்கும் (அகம் - 17 9)

கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும் (அகம்.318)

தூம்புடைத் துய்த்தலைக் கூம்பு பு திரங்கிய
வேனில் வெளிற்றுப் பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும் (அகம் 333)

விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும்
மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட் கும் பாசறைப்
பார் வேட்டு எழுந்த மள் கர் (அகம் 144)

சரி
யானை மட்டும் தான் இந்த முயற்சி செய்யுமா ?
மத்தவங்க செய்யக் கூடாதா ?

யான் எவன் செய்கோ தோழி ?
பொறிவரி வானம் வாழ்த்திப் பாடவும்
அருளா து உறை துறந்து எழிலி நீங்கலின் ... (அகம்.67)

கடலில் காற்றைக் கிளப்பி
நீரோட்டத்தைத் தேங்க விடாமல் விரட்டி
வளிமண்டலத்தை வலமாகச் சுற்ற வைத்து
வெண் மஞ்சுக் கூட்டத்தைத் திருப்பி விரட்டி
உரிய பருவத்தில்
உரிய நாளில்
உரிய இடத்தில்
மழையைத் தரை இறக்தியவர்கள் தமிழர்கள்.

இயற்கையை மிகச் சரியாக உணர்ந்து கொள்ள
முதலில் தேவை சரியான நாட்காட்டி .
24.06.2017ல் மறை நிலவு செவ்விதாகப் பொருந்துகிறது.
27.06.2017-ல் ஆனி மாதம் முடிகிறது.
ஆண்டின் முதல் ஆறு மாதமும் முடிகிறது.
காத்திருக்கிறது வட எல்லையில் நிழல்.

எடுத்துச் சொல்ல வரும் கொம்பன் யானைகளை
என்கவுன்ட்டர் செய்கிறது அரசு ?

உரை செய்கிறது ஓவியச் சுற்றம் .
அரிய செய்திகள் ஓவிய வியப்பாக .
நடுகல்லை ஆள் என்று ஓங்கி உதைத்து விட்டு நகத்தை முறித்துக் கொண்டு
நொண்டித் திரிகிறது ஒரு யானை.
முருங்கை மரத்தை முழு வலிமையையும் தந்து இழுத்துவிட்டு நிலை தடுமாறி
அருகில் இருந்த இட் டி கை நெடுஞ்சு வரை இடிந்து விட்டது இன்னொரு யானை.
யானைக் கன்றை மடக்கிப் பிடித்து நெல்லுக்கு விற்றனர்.
கான யானையை அழுத்திப் பிடித்து நுனி மருப்பை மட்டும் அறுத்துக்
கள்ளுக்கு விற்றனர்.
யானையின் மொழியை அழகாகப் பதிவு செய்துள்ளது பழந்தமிழ்.
தும்பிக்கையை எடுத்துத் தந்தத்தின் மீது போட்டுக் கொண்டு உண்ண மறுக்கும்
பாசறை யானைகளைப் போல் காட்டு யானைக ளும் செய்கின் றனவாம்.

காந்தள் அரும் பகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து இனன் நோக்கிப்
பாய்ந்து எழுந்து ஓடும்   .. (கைந்நிலை - 9)

முருகன் ஏறி வரும் பிணி முகம் என்ற போர் யானை
நிலத் தடி நீரையும் விசும்பின் நீத்தத்தையும் பிணித்தது போலும்.

வைந் நுதி பொருத வடுவாழ் வரி நுதல்
வாடா மாலை ஒடையொடு துயல் வர
படு மணி இரட்டும் மருங்கில் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்
கால் கிளர்ந்த ன்ன வேழம்   ( திருமுருகாற்றுப்படை)

அந்த யானை
அதன் மீது முருகன்
அவன் முகம் புத்தாண்டுக் கதிரவன்
அது தை முதல் நாள்.
பழுதடைந்த பஞ்சாங்கத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்
தமிழைத் தொட்டுப் பார்க்க ஒரு தலைமுறைக்கே வாய்ப்பு .

அது மரபுவழித் தமிழ்த் தேசியம்,
நெருங்கி வருகிறது தைத் தமிழர் இயக்கம்
யாம் பணியா மரபினரேம்.
[25/06, 3:45 PM] ‪+91 97900 49490‬: இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவுக்கு
அடுத்து 155  பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை
கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே

1960 ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு
2015 ல் இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது

ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால்
உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என என்க்ளோபீடியா
பிரிட்டானியா தெரிவிக்கிறது

தமிழ்நாட்டை தொட்டால் இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும் என இந்திய ரோ மத்திய
அரசை 2013  ல் எச்சரித்துள்ளது பற்றி நாம் யோசிக்கவேண்டும்

ஆட்டோமொபைல்
அரிசி விவசாயம் தோட்டங்கள்
சுற்றுலா
ஆயத்த உடைகள் ஏற்றுமதி
இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி
துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை
ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை
டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்
ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள்
வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5  நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்
இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்

தமிழ்நாடு யானை போன்றது
துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை
சாதாரண இந்திய அங்குசத்துக்கு பயந்து இதுவரை
பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக